Monthly Archives: பிப்ரவரி 2009

கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா?

தோழர் கொளத்தூர் மணியுடன் நான் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்  சார்பாக  மதுரை திருப்பரங்குன்றத்தில் ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையை நிறுத்தக்கோரி, சிங்கள அரசிற்கு துணைபோகும் இந்திய அரசை கண்டித்து திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகில் 25-2-2009 அன்று மாலை 5 மணியளவில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணியோடு நானும் கலந்த … Continue reading

Posted in கட்டுரைகள் | 144 பின்னூட்டங்கள்

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

பெரியார் பற்றி ஜரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களோடு ஒருகலந்துரையாடல். குறிப்பாக ஈழத்தமிழர்கள் பெரியார் பற்றி என்னுடன், பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒலிபரப்பாகும் ‘டி ஆர் டி தமிழ்ஒலி‘ வானொலியில் (30-12-2008) நேரடியாக கேட்ட கேள்விகளுக்கு அளித்த விளக்கம். நிகழ்ச்சி நடத்துபர்களோடு அரை மணிநேரம் கலந்துரையாடலும் பிறகு தொலைபேசி வழியாக பல நேயர்களோடு உரையாடலுமாக இரண்டு மணிநேரத்திற்கு இருக்கிறது. … Continue reading

Posted in பதிவுகள் | 10 பின்னூட்டங்கள்

பா.ஜ.க. அலுவலகம் மீதான தாக்குதலும் சுப்பிரமணிய சுவாமி மீதான தாக்குதலும்

  – ‘யாரா இருக்கும் அது?’ என்ற உங்களது,  கட்டுரையில் எல்லாவற்றையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், சுப்பிரமணியன் சுவாமியைத் தாக்கியதைப் பற்றி குறிப்பிடவில்லையே? அதுதானே எல்லாவற்றிற்கும் காரணம்? -கே. குமார்   சுப்பிரமணய சுவாமி, மீது நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டத் தாக்குதலை மட்டுமல்ல, முதல்வரின் தலையை வெட்ட சொன்ன வேதாந்திக்கு கண்டனம் தெரிவித்து, திமுகவில் இருந்த சில உண்மையான … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 9 பின்னூட்டங்கள்

யாரா இருக்கும் அது?

’தமிழக அரசுக்கு எதிராக சதி’ முதல்வர் அறிக்கை தமிழகம் முழுவதும் ஏற்பட்ட, மின்சார தட்டுப்பாட்டால், பொது மக்கள் பெரும் அவதி. பல சிறுதொழிற்சாலைகள் மூடப்பட்டன. பல தொழிலாளர்கள் வேலை இழப்பு. உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு. வீட்டு வாடகை, நிலம், கட்டுமானப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது

‘ஸ்ரீராமபிரான் ஆண்ட அயோத்தியில், பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது. மகனைப் பறிகொடுத்த தந்தை தன் பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு ராமனின அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு ராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் … Continue reading

Posted in கட்டுரைகள் | 13 பின்னூட்டங்கள்

சுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை;`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’

நாட்டுமக்களுக்கு எந்தவகையிலும் உதவாத, அல்லது தேவையில்லாத ‘சுந்தரராமசாமி’ என்பவருடைய எழுத்துக்களை நாட்டுடமை ஆக்கியிருக்கிறது, தமிழக அரசு. (கழக கவர்மெண்டல இருக்கிற யாரோ ஒரு சுந்தரராமசாமியின் ரசிகரின் முயற்சியால் இந்த வௌங்காத வேலை நடந்திருக்கும்போல) தமிழக அரசின் இந்தச் செயலால் ஆடிபோயிருக்கிறது, காலச்சுவடு நிர்வாகம். தனது கண்டனத்தை கடிதமாக புலம்பியிருக்கிறார், சுந்தரராமசாமியின் சொத்திற்கும், எழுத்துக்களின் மூலம் கிடைக்கும் … Continue reading

Posted in கட்டுரைகள் | 12 பின்னூட்டங்கள்

‘அழுகிய முட்டையே அதிகபயன் தரும்’ அல்லது ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’

ஈழத்தமிழர்கள் துயரத்திற்காக, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் வழக்கறிஞர்கள். அப்படியிருந்தும் நேற்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், ஒரு முக்கியப் பிரமுகரின்மேல் கொண்ட பேர் ஆர்வத்தால், அவர்மேல் கொண்ட அளவற்ற அன்பால், அந்த முக்கியப் பிரமுகரின் ‘வழக்கை’ மிகச்சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள். முக்கி, முக்கி தமிழ்ப் பேசுகிற தமிழ்க் கடவுள் பெயரை தன் பெயராக வைத்திருக்கிற, அந்த முக்கியப் … Continue reading

Posted in கட்டுரைகள் | 28 பின்னூட்டங்கள்