சிதம்பரம் நடராஜனை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் தீட்சிதர்களை காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோக வேண்டும்

pict0002

நேற்றுநடந்தஆர்ப்பாட்டம்

pict0001

மிழகத்தை ஆண்ட சிறந்த முதல்வர் என்று ஒருவரை சொல்லவேண்டும் என்றால், சுதந்திரத்திற்கு முன் நீதிக்கட்சியின் சார்பாக சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர் என்று அன்போடு அழைக்கப்பட்ட, ராமராயநிங்காரைச் சொல்லலாம்.

இவர் காலத்தில்தான் அதாவது 1925 – ஆம் ஆண்டு கோடிக்கணக்கான சொத்து மதிப்புக் கொண்ட, இந்து கோயில்கள் ‘இந்துமத பரிபாலனச் சட்ட மசோதா’ என்கிற சட்டத்தின் மூலம் அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது.

இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு நிறையப் பாடுபட்டிருக்கிறார் பனகல் அரசர். 1922 – ஆம் ஆண்டு இந்துமத பரிபாலன சட்ட மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்.

இதைச் சமூகத்திலும், சட்டசபையிலும் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள். இந்த மசோதா மீது மொத்தம் 800 திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் 475 திருத்தங்களைத் தீவிர பார்ப்பன உணர்வாளரான சத்தியமூர்த்தி அய்யர் மட்டுமே கொண்டு வந்திருக்கிறார்.

கடைசி ஆயுதமாக, இந்தச் சட்டத்தில் இருந்து திருப்பதி கோயிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, கோரி பனகல் அரசருக்கு ரூ. லட்சம் லஞ்சம் தர முயன்று இருக்கிறார்கள்.

இவற்றை புறக்கணித்து, எதிர்ப்பை முறியடித்து மூன்றாண்டுகள் போராடி, இந்தச் சட்டத்தை அமல் படுத்தினார் பனகல் அரசர். ‘சமூக நீதி அரசு, அல்லது பார்பபனரல்லாதார் உரிமைக்கான அரசு’ எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு பனகல் அரசரின் ஆட்சி உதாரணம்.

 

pict0003

மிகச் சிறந்த சீர்திருத்த அரசாக இருந்தால், ஒரு கோயிலை அரசுடமையாக்குவது மிகச் சாதாரணம். ஒரு காலை பொழுதில் ஒரே ஒரு கையெழுத்தில் அதை செய்துவிடலாம். தமிழக முதல்வர் தன்னை நீதிக்கட்சியின் வாரிசாக பலமுறை சொல்லியிருக்கிறார்.சொன்னதைசெயலிலும் காட்ட வேண்டும். சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறை தன் வசப்படுத்த வேண்டும். அரசு நினைத்தால் இது மிகச் சாதாரணம்.

பொருளாதார அடியாளாக இருந்து, போராளியாக மாறிய அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் பெர்கின்ஸ் சொல்வார்:

நிலவில் மனிதனைக் கால்பதிக்கச் செய்வதைவிட, சோவியத்யூனியனைத் துண்டாடுவதைவிட, மாபெரும் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதைவிட, வறுமையை ஒழிப்பது நடமுறையில் எளிதானது” என்று.

அதையே நாம் ‘சமூக நீதி’ அரசான திமுக அரசிற்கு சொல்வோம்:

தங்க நாற்கர சாலைகள் அமைப்பதை விட, சேது பாலம் கட்டுவதை விட, பல பன்னாட்டு கம்பெனிகளை இங்கு வநது தொழில் தொடங்க வைப்பதைவிட, காங்கிரஸ் அரசைப் பாதுகாப்பதைவிட மிக எளிதானது சிதம்பரம் நடராஜன் கோயிலை அரசுடமையாக்குவது‘.

-வே. மதிமாறன்

 

 

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

10 Responses to சிதம்பரம் நடராஜனை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் தீட்சிதர்களை காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோக வேண்டும்

 1. கதிர் சொல்கிறார்:

  மிகச்சரியான எடுத்துக்காட்டு தோழர், ஒளிர்கிறது, முன்னேறுகிறது என்று மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பவாதிகள் அரசியலில் ஒரு கட்டத்தில் எல்லாமே எட்டாகனி தான், மக்கள் புரிந்து தெளிந்து அணி திரண்டு போராடாமல் தீர்வை எதிர் நோக்கலாமா? திருமங்கலம் தேர்தலைப்போல மக்களும் தங்களை சந்தர்ப்பவாதிகள் அணியிலே சேர்த்து கொள்ள விரும்புகிறார்களா? தமிழ், தமிழ‌ன் இதனை தீட்டு என்பவனிடத்து இன்னும் நமக்கென்ன வேலை என்று இந்த கொடுமைக்கு எதிராக திரும்பாதவனை அங்கே ஈழத்தமிழனுக்காக திருப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

 2. டி.அருள் எழிலன் சொல்கிறார்:

  மதி நல்ல கட்டுரை. பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக கலைஞர் காங்கிரஸ் காரர்களிடம் வாலை ஆட்டுவதற்கு ஒரு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தீட்சிதர் கும்பல் தொடர்பாக நடவைட்க்கை எடுத்தால் காங்கிரஸ் கட்சி அதை அனுமதிக்காது காங்கிரஸ் விரும்பாத எதையும் கருணாநிதி செய்ய மாட்டார். இன்னொரு காமெடியை அதிகமாக இப்போது கேட்க முடிகிறது. இரண்டு முறை திமுக தன் ஆட்சியை ஈழத் தமிழருக்காக தியாகம் செய்ததாக கருணா சொல்கிறார். இவர் எங்கே தியாகம் செய்தார் அந்த தியாகம் ஒரு கத்தியாக இவர் கழுத்தின் மேல் காங்கிரஸ் காரனால் வைக்கபட்டது. இவருடைய ஆட்சியைக் கலைத்தது புலிகளோ இல்லை பேரினவாத இலங்கை அரசோ அல்ல. பக்கத்திலிருக்கிற தங்கபாலுவின் தாய்மாமன் கள்தான் கலைத்தார்கள்.

  இனி கலைக்கிற அவசியம் இல்லை காலைவாரிவிடுவது மட்டும்தான் இனி நடக்கும்.

 3. கரிகாலன் சொல்கிறார்:

  கருணாநிதி தமிழினத்தின் உரிமையை பாதுகாப்பார், மீட்டெடுப்பார் என்றோ, சமூகநீதியை நிலைநாட்ட முனைப்போடு செயல்படுவார் என்றோ யாராவது இன்னும் நம்பினால் அவர்கள் ஒன்று முட்டாளக இருக்கவேண்டும். அல்லது 1969-க்குப் பிறகு சுயநினைவிழந்து இப்போதுதான் மீண்டவராக இருக்கவேண்டும்.

  இந்தியாவில் பல லட்சம் கோடிக்கு அதிபதியான ஒரு குடும்பமோ அல்லது அந்த குடும்பத்தின் உறுப்பினர்களோ நாட்டுமக்களை பற்றியோ சுயமரியாதை பற்றியோ சிந்திக்க நேரம் இருக்குமா?

 4. Dr. V. Pandian சொல்கிறார்:

  கதிர் அவர்களே!

  இன்று மாண்டு கொண்டிருக்கும் ஈழத்தமிழனைவிட உங்களுக்கு கோயில் ஒரு பெரும் சிக்கலா? நீர் தமிழரா? உம்முடைய சிந்தனையே சரியில்லாத போது திருமங்கலம் மக்களைப்ப்றறி ஆர்ப்பரித்துப் பயன் என்னவோ? தீண்டாமை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், முதலாளித்துவம், ஏகாதிபத்தயம், ஈழ அடக்குமுறை போன்று பலவற்றையும் எதிர்த்துதான் போராடுகிறோம். காலத்தின் கட்டாயங்கள் குறித்து சில சிக்கல்கள் முதன்மைப் படுத்தப் படுகின்றன. அவ்வளவே!

  தமிழன் நாதியற்ற இனமய்யா! நல்லவனாக இருந்தே நாசமாய்ப் போகின்றவன். அவனிடம் கருணைகொள்ளுங்கள்.

  நீங்கள் மாற்று மொழிக்காரராய் இருக்கும் பொருட்டு ஒன்று சொல்வேன். தமிழரால் உமக்கு என்றும் தீங்கில்லை! நீரும் தமிழினமே!

  தமிழனை திட்டமிட்டு நாசப்படுத்தும் வேற்றின பிராமனனே இங்கு சுகமாய் வாழ்கிறான்! அதானய்யா தமிழன். நிங்கள் கருணை கொண்டால் தான் உண்டு.

 5. Nithil சொல்கிறார்:

  அரசானைக்கு பிறகு தமிழில் தேவாரம் பாடச்சென்றவர்களுக்கு தடியடி. பாடவிடாமல் தடுத்த, காவல்துறையையே தாக்கிய தீட்சிதர்களுக்கு பாதுகாப்பு. இது தான் இன்றைய தமிழக அரசின் லட்சனம். இதில் தில்லை கோயிலை அரசுடமையாக்குவதை இந்த அரசு செய்யுமா என்பது பெரிய கேள்விகுறி

  ஆனால் கருணாநிதி அரசு தவிர வேறு எந்த அரசு வந்தாலும் அரசுடமையாக்குவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்பது என்னுடைய திடமான நம்பிக்கை.

  நித்தில்

 6. சுனா பானா சொல்கிறார்:

  சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடும் உரிமையயை மீட்டெடுத்த பின்னர், அடுத்த கட்டமாக சிதம்பரம் நடராஜன் கோயில் அரசுடைமை ஆவதற்கான போராட்டங்கள் நடக்கின்றன. வாழ்த்துக்கள்.

 7. ந.செந்தில் சொல்கிறார்:

  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற
  சட்டம் இயற்றப்பட்டது. அனால் நடைமுறைப்படுத்தப்படவில்லை

  ஈழ தமிழர்களுக்காக 40 எம்.பி பதவியை ராஜினாமா செய்வோம் என்று சொல்லி விட்டு பின் நாடகமாடியதை இன்னும் யாரும் மறக்கவில்லை.

  அதே போல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற
  சட்டம் கூட கண் துடைப்பு தானோ என்று தோன்றுகிறது.

  தமிழ் நாட்டில் பதவிக்கு வரும் எந்த அரசாங்கத்தாலும்
  தமிழனுக்கு இது வரை எவ்விதப்பயனும் இல்லை.

 8. keedkaathe சொல்கிறார்:

  நீதிமன்றத்தில் முயன்று அரசு தோற்றுவிட்டது. வேலையற்ற ம.க.இ,க
  இப்போது கோரினால் அதை செய்துவிடமுடியுமா. அவர்கள் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் அரசின் கீழ் கொண்டு வரவேண்டும்
  என்று போராடினால் அது நியாயமானது. அதைவிடுத்து சிதம்பரம்
  கோயிலை மட்டும் என்று போராடுவது ஏன்?.

 9. tamiloliga சொல்கிறார்:

  ஒரு சமத்துவ நாட்டில் கோவில்களை அரசு அபகரித்து பல கோடிகளை தின்று கொழுத்துகொண்டிருகிறது.இதைபோல அரசு தேவாலயங்களையோ,மசூதிகளையோ செய்யமுடியுமா?
  இந்த அரசு நல்ல உண்டியல், சொத்து உள்ள கோவில்களை தான் அபகரிக்கின்றன. ஏன் ஒரு கால பூஜைக்கு கஷ்டப்படும் கோவில்களை அபரிக்கவில்லை..
  இன்னும் எத்தனை நாள் தான் தமிழ் தமிழ் என்று சொல்லி எங்களை(உண்மை தமிழர்களை) சுரண்டுவீர்களோ?..
  முதனில் மனிதனாக இரு. தமிழனாக அல்ல…
  திருப்பாவையும், திருமந்திரத்தையும் தந்த தமிழ் ஓழிக…

 10. Pingback: கடவுள் அல்ல; களவாணி | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s