Monthly Archives: ஜனவரி 2009

ஜெயகாந்தனுக்குப் பொருத்தமான விருது ‘பத்ம பூஷன்’ மட்டுமல்ல ‘விபிஷணன்’ விருதும்தான்

தமிழர்களை, தமிழை, தமிழறிஞர்களை – பார்ப்பனர்களோடும், சமஸ்கிருதத்தோடும் ஒப்பிட்டு, கேவலப்படுத்தி, அவமானப்படுத்திப் பேசிய ஜெயகாந்தனுக்கு ‘பத்ம பூஷன்‘ விருது கொடுத்திருப்பதின் மூலம் அந்த விருது கேவலப்பட்டிருக்கிறது, அதுபோலவே, அந்த விருதை வாங்குவதால் ஜெயகாந்தனும் கேவலப்படுத்தப்படுகிறார். ஏனென்றால், அந்த விருதின் லட்சணமும் ஜெயகாந்தனைப் போன்றதே. ராஜீவ் ஆட்சியின்போது ஈழத்தில், இந்திய ராணுவம் நடத்திய அட்டூழியத்தை ஆதரித்து, ஈழதமிழர்களின் … Continue reading

Posted in கட்டுரைகள் | 4 பின்னூட்டங்கள்

மீண்டும் ஐரோப்பிய ‘தமிழ்ஒலி’ வானொலியில் நான்

பிரான்சில் இருந்து இயங்குகிற – ஜெர்மன், இத்தாலி, சுவிஸ், டென்மார்க், சுவீடன், நார்வே இன்னும் இதுபோன்ற ஐரோப்பிய நாடுகள் முழுக்க ஒலிக்கிற TRT தமிழ்ஒலி வானொலியில் ‘முற்றம்’ என்கிற பெயரில் புதிய நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் மீண்டும் நேயர்களின் கேள்விகளுக்கு பெரியாரியல் பார்வையில் தொலைபேசிவழியாக பதில்அளிக்கிறேன். இந்நிகழ்ச்சி ஒரு நேரடி ஒலிபரப்பு. ஒலிபரப்பாகும் நாள்: 27.01.2009 செவ்வாய … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசைக் கண்டித்து மகஇக ஆர்ப்பாட்டம்

இந்திய குடியரசு நாளை விஷேசமாக அரசு ஒருபுறம் கொண்டாடிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் சென்னை சைதாப்பேட்டையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் செயலைக் கண்டித்து இன்று காலை 11.00 மணியளவில், மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் தங்களின் தோழமை அமைப்புகளோடு மிகப்பெருவாரியாக கலந்து கொண்டு ஆர்பாட்டம் செய்து கைதாகியுள்ளனர். – – – – – – … Continue reading

Posted in பதிவுகள் | 31 பின்னூட்டங்கள்

பெரியாரின் பூமாலையும் போர்வாளும்

 இன்னொரு புது புத்தகம்   1925 ல் பெரியாரால் துவங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் என்கிற பூதம்-, தமிழகத்தைப் பிடித்து ஆட்டியது. சுயமரியாதை இயக்குத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்று தமிழகத்தை இரண்டாக பிளந்தது அது. இப்படி சுயமரியாதை இயக்கம் பல இடங்களை ஊடுருவி சென்றது போல், மக்களை மையமிட்டு இயங்குகிற, நாடக கலைஞர்களிடம் ஊடுருவியது. கலைஞர்கள் சுயமரியாதை … Continue reading

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை

டாக்டர் அம்பேத்கரை அறிந்துகொள்வோம் புதிய நூல் கிடைக்கும் இடம் அங்குசம் வெளியீடு ‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன் எண்.15, எழுத்துக்காரன் தெரு திருவொற்றியூர் சென்னை-600 019. பேச; 9444 337384

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

சிதம்பரம் நடராஜனை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் தீட்சிதர்களை காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோக வேண்டும்

நேற்றுநடந்தஆர்ப்பாட்டம் தமிழகத்தை ஆண்ட சிறந்த முதல்வர் என்று ஒருவரை சொல்லவேண்டும் என்றால், சுதந்திரத்திற்கு முன் நீதிக்கட்சியின் சார்பாக சென்னை மாகாண முதல்வராக இருந்த ‘பனகல் அரசர்‘ என்று அன்போடு அழைக்கப்பட்ட, ராமராயநிங்காரைச் சொல்லலாம். இவர் காலத்தில்தான் அதாவது 1925 – ஆம் ஆண்டு கோடிக்கணக்கான சொத்து மதிப்புக் கொண்ட, இந்து கோயில்கள் ‘இந்துமத பரிபாலனச் சட்ட மசோதா’ என்கிற சட்டத்தின் மூலம் அரசின் … Continue reading

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்

ஏ.ஆர். ரகுமானும் `ரீமிக்சும்`

ஏ.ஆர். ரகுமான் சர்வதேச விருது வாங்கியிருக்கிறார். அதை ஒட்டி 8.1.2008 அன்று எழுதிய இந்தக் கேள்வி-பதில் ஓராண்டு கழித்து, மீண்டும் பிரசுரிக்கப்படுகிறது. இன்றைய திரைப்பட இசையமைப்பாளர்கள் பழைய பாடல்களையே ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் தருகிறார்களே? இது என்ன முறை? –சிவகுமார். கதையின் படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழையப் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 31 பின்னூட்டங்கள்