Monthly Archives: ஒக்ரோபர் 2008

ஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்

-வே. மதிமாறன் – கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் இலங்கை யுத்தத்தின் காரணமாக, இலங்கை வாழ் ஈழ மக்கள் மிக பெருவாரியாக ஈழத்திலிருந்து வெளியேறி, உலக நாடுகள் முழுக்க பரவினார்கள். அப்படி புலம் பெயர்ந்து மிகுந்த சிரமப்பட்டு ஒரு மரியாதைக்குரிய வாழக்கை நிலையை அமைத்துக் கொண்ட  ஈழத்தமிழர்கள், தமிழகத்திலிருந்து இரண்டு மிக மோசமான விஷயங்களை உலகம் … Continue reading

Posted in கட்டுரைகள் | 20 பின்னூட்டங்கள்

ஜெயலலிதாவின் சூழ்ச்சி – சீமான், அமீர் கைது – காங்கிரசின் மகிழ்ச்சி

– தொடர்ந்து தனது மோசமான அறிக்கைகளால், தமிழகத்தில் ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு’ என்று இருந்த ஒரு முழமையான நிலையை மாற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் – வைகோ, கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றவர்களை கைது செய்திருக்கிறது தமிழக அரசு. பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், ‘கைதானவர்களை விடுதலை செய்’ என்கிற … Continue reading

Posted in கட்டுரைகள் | 16 பின்னூட்டங்கள்

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

தமிழ் சினிமாவை காட்சி அமைப்புகளின் மூலமாக இந்தியத் தரத்திற்கு உயர்த்தியவர். சினிமா மொழியை விரிவாக கையாண்ட முதல் தமிழ் திரைப்பட இயக்குநர். தனது வித்தியாசமான கேமரா கோணங்களால், தமிழ் சினிமாவை அழகுபடுத்தியவர். நவீன தமிழ் சினிமாவின் முன்னோடி இப்படி பல சிறப்புகள் சமீபத்தில் மறைந்த இயக்குநர் ஸ்ரீதருக்கு உண்டு. ஹாலிவுட் படங்கள், அய்ரோப்பிய படங்கள் ‘க்ரைம்’ … Continue reading

Posted in கட்டுரைகள் | 26 பின்னூட்டங்கள்

குழந்தையைக் கிழிக்கும் புத்தகங்கள்

அந்தப் பெற்றோர்கள் எந்த நேரமும் பயமும், பதட்டமுமாகவே இருந்தார்கள். என்ன ஆயிற்று அவர்களுக்கு? குடும்பத்தில் எதாவது பெரிய பிரச்சனையா? குழந்தைக்கு உடல் நிலை சரியில்லையா? அதெல்லாம் ஒன்றுமில்லை தங்கள் மகனுக்கு முழு ஆண்டுப் பரீட்சை நெருங்கிவிட்டது. பரீட்சைக்கு தயாராகிறார்கள் பெற்றோர்கள். அவர்களுக்கு வந்திருப்பது பரீட்சை ஜுரம் (Exam Fever) அவர்களின் பயமும், பதட்டமும் அவர்களின் ஒரே … Continue reading

Posted in கட்டுரைகள் | 11 பின்னூட்டங்கள்

`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை

பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவரும், எழுத்தளாரும், பத்திரிகையாளரும், நவீன பாணி அரசியல் கட்டுரைகளின் முன்னோடியுமான குத்தூசி குருசாமி, இந்து நாளிதழை அதன் ஐயங்கார் பார்ப்பன தன்மைக்காக, 1930களிலேயே, மவுண்டரோடு மகா விஷ்ணு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். அந்த மகாவிஷ்ணு சமீபத்தில் வராக அவதாரம் எடுத்திருந்தது. அதைப் பற்றி பெரியார் திராவிடர் கழக வார ஏடான புரட்சி பெரியார் முழுக்கம் … Continue reading

Posted in கட்டுரைகள் | 18 பின்னூட்டங்கள்

கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு

இலங்கை ராணுவம் ‘விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் புரிகிறோம்’ என்கிற பெயரில், அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கிறது. ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர் செய்த அட்டூழியத்தைப் போன்று தமிழர்கள் மீது விமானப்படை தாக்குதல் நடத்துகிறது ராஜபக்சே ராணுவம். “எக் காரணம் கொண்டும் தனி நாட்டுக்கு இடமே இல்லை. இலங்கையை தனியாக பிரிப்பதை ஒரு நாளும் அனுமதிக்க … Continue reading

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்

கே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கே.பி.சுந்தராம்பாளுக்கு விழா எடுப்பதைப் பற்றி திரு.கலைவேந்தன் என்பவர் எனக்கொரு கேள்வி அனுப்பியிருந்தார். அதற்கான பதிலை நான் எம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தேன் (https://mathimaran.wordpress.com/2008/08/04/article104/) அந்தப் பதிலை மார்க்சிஸட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு. டி.கே. ரங்கராஜனுக்கு திரு.கலைவேந்தன் அனுப்பி … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 1 பின்னூட்டம்