ஆனந்த விகடனும் – பெரியாரும்

ஆனந்த விகடனை குறை கூறுகிறீர்களே, அந்த இதழ்தானே இன்று பெரியார் தொடரை மிக சிறப்பாக வெளியிட்டது?
-சி. சாமுவேல்.

சினிமா செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து கிசு கிசு பாணியிலே அனைத்து செய்திகளையும் எழுதுகிற ஆனந்த விகடன், கிசு கிசு செய்திகளையும் தாண்டி, ‘அறிவுத்துறை’ சார்ந்தவர்களையும் தன் வாசகர்களாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும்,

அந்த நோக்கத்தில்தான் சிறுபத்திரிகையுலகில் வஸ்தாதுகளாக விளங்கிய சில இலக்கியவாதிகளை தனது பத்திரிகையில் இலக்கிய சேவை செய்யவைத்தது.

விடுதலைப் புலிகளை ஆதரித்து செய்திகள் வெளியிட்டால், அதை வாங்குவதற்கு என்று மிகப் பெரும் வாசகர் கூட்டம் தமிழ் நாட்டில் உண்டு. அதை அறுவடை செய்தவதற்காகத்தான் விடுதலைப் புலி ஆதரவாளர்களை வைத்து தொடர் கட்டுரை எழுது வைக்கிறது, பிரபாகரன் படத்தை அட்டையில் பிரசுரித்து வெளியிடுகிறது, புள்ளி விவரங்கள் வெளியிடுகிறது.

செக்ஸ், மருத்துவம், தன் முனைப்பு, சுயதொழில், அரசியல், சினிமா, மதன், சுஜாதா, நாராயண ரெட்டி, கிசு கிசு, வெட்டி அரட்டை, ஊதாரிதனமான செய்திகள், சமையல், அழகு குறிப்பு, பிரபலங்களுடன் பேட்டி என்று எல்லா பத்திரிகைகளையும் போல் இப்படி ஊசிப் போன செய்திகளை விகடன் வெளியிட்டு சாதாரண வாசகர்களை தக்க வைத்து கொண்டாலும்,

‘இலக்கியம், முற்போக்கு, சமூக அக்கறை’ போன்ற பாசாங்கு செய்திகளையும் சரியான விகிதத்தில் கலந்து அடிக்கறதானலதான், ஆனந்த விகடன் மற்ற பத்தரிகைளில் இருந்து வேறுபடுகிது. இலக்கியம் மற்றும் முற்போக்களார்களை தனது வாசகர்களாக பெருமளவில் உருவாக்கியிருக்கிறது. அது போன்ற ஒரு முயற்சிதான் பெரியார், அம்பேத்கர் பற்றியான தொடர். இதனால் பலஆயிரம் புதிய வாசகர்களை ஆனந்த விகடனுக்கு உருவாக்கியிருக்கிறார்கள்.

(சிறு பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்து, ஆனந்த விகடனில் எழுதி பிரபலமான எழுத்தாளர்கள், மீண்டும் சிறு பத்திரிகைகாரர்கள் தங்கள் இதழுக்கு கட்டுரையோ, கதையோ கேட்டால் – ‘நேரமே இல்லீங்க.. கண்டிப்பா எழுதுறேன்..’ என்று தட்டிக் கழித்துவிடுகிறார்கள். அதுவே ஆனந்த விகடனில் இருந்து ராத்திரி 12 மணிக்கு போன் பண்ணி கட்டுரை கேட்டால், ராத்திரி எல்லாம் கண் முழுச்சி காலையிலே இவர்களே நேரில் கொண்டு போய் கொடுத்து, ‘கொஞ்சம் லேட்டாயிடுச்சி மன்னச்சிடுங்க…’ என்று பெருதன்மையாக நடந்து கொள்கிறர்கள்.)

யாரை வேண்டுமானலும் சகட்டுமேனிக்கு கேலியும், கிண்டலும் செய்கிற ஆனந்த விகடன் – ஜெயேந்திரன் கொலை வழக்கில் கைதானபோது, ‘அந்த ஆளு அவள வைச்சிக்கிட்டு இருந்தான். இவள கைய புடுச்சி இழுத்தான்’ என்று எல்லா பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தபோது, ஜெயேந்திரனை பற்றி உண்மைகளை கூட எழுதாமல், தன்னிடம் வேலை பார்க்கும் சூத்திரர்களை கொண்டு, பொய்களை துப்பறிந்து, கண்ணியமாக செய்திகளை வெளியிட்டது கிசு கிசு பத்திரிகையான ஆனந்த விகடன்.

நீங்கள் சொல்வது போல், பெரியார் மட்டுமல்ல, மார்க்ஸ், அம்பேத்கர் பற்றிய தொடர்களையும் வெளியிட்டு இருக்கிறது.
இந்தத் தலைவர்களின் கொள்கைகள் தமிழ்நாடு முழுக்க பரவி தமிழ் நாடு ஜாதி வேறுபாடுகள், வர்க்க வேறுபாடுகள் அற்று, சிறந்த நாடாக இருக்க வேண்டும் என்கிற தாளாத சமூக அக்கறையின் பால் அவர்களை பற்றி வெளியிட்டு இருக்கிறதா?
அதற்கு வியாபாரம். பரந்து பட்ட வாசகர் தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம்.
‘ பெரியார் தொடரை மிக சிறப்பாக வெளியிட்டது?’ என்று நீங்கள் நல் அபிப்பராயம் சொல்கிறீர்கள் அல்லவா? அதுதான் அந்தத் தொடரின் வெற்றி.

பெரியார், டாக்டர் அம்பேத்கர் பற்றி தொடர் வந்ததற்காக ரொம்ப பெருமைபட்டுக்காதிங்க, அம்பேத்கரும் – பெரியாரும் யாரை எல்லாம் எதிர்த்து தன் காலம் முழுவதும் போராடினார்களோ, அந்த ராஜாஜியையும், காந்தியையும் பற்றி புகழ் பாடும் தொடரையும் ஆனந்த விகடன் வெளியிடும்.

இதுபோன்ற இரட்டை வேடங்கள் ஆவிக்கு சகஜம்தான்.

‘பாய்ஸ்’ என்கிற பொறுக்கித்தனமான படம் வந்தபோது, அதை விமர்ச்சித்து ஆன்ந்த விகடன் ‘ச்சீ..’ என்று ஒற்றை வார்த்தையில் ஒரு பக்கத்திற்கு யோக்கியம் மாதிரி வெளியிட்டிருந்தது-. (‘ச்சீ..’ ஆனந்த விகடனுக்கும் பொருந்தும்)அந்தப் படத்தின் பொறுக்கித்தனத்திற்கு 99 சதவீதம் காரணமான சுஜாதாவைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட கண்டித்து எழுதவில்லை.

அதுமட்டுமல்ல, பொறுக்கித்தனமா எழுதுற சுஜாதாதான் ஆவியின் ஆஸ்தான எழுத்தாளர். அந்த ஆளு உயிரோடு இருக்கும்போதும் மட்டுமல்ல, செத்தப் பிறகும் அவனை ஆவியாக கொண்டு வந்து, நம்மள சாவடிக்குது ஆவி.

‘செத்தப் பிறகும் கொடுத்தான் சீதக்காதி’ என்று சொல்வார்கள். அதுபோல், ‘செத்தப் பிறகும் கெடுக்கிறான் சுஜாதா.’

வர்த்தகமும்-பார்ப்பனியமும் ஆனந்த விகடன் போன்ற பார்ப்பன பத்திரிகைகளுக்கு இரண்டு கண்கள். பார்ப்பனரல்லாத பத்திரிகைகளுக்கு வர்த்தகம் மட்டும்தான் நோக்கம்.
அதனால்தான் யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானலும் விமர்சிக்கிற பார்ப்பன பத்திரிகைகள், பார்ப்பனியத்தின் ஜாதி வெறி அதன் ஓழுக்கக் கேடு குறித்து விமர்சிப்பதில்லை.

சொந்த புத்தி அற்று பார்ப்பனரல்லாதவர்களால் – நடத்தப்படுகிற பத்திரிகைகள், பார்ப்பன பத்திரிகைகளையே முன் மாதிரியாக கொண்டு நடத்துவதால், இவர்களும் பார்ப்பனியத்தை கேள்வி கேட்பதில்லை.

பல நேரங்களில் இந்தப் பார்ப்பனதாசர்கள், பார்ப்பனர்களையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்கள், பார்ப்பனியத்தை பாதுகாப்பதில்.

*

2008/09/23 அன்று எழுதியது.

முல்லைப் பெரியாறு, காவிரி: ஜாதி தமிழன் பிரச்சினையா? (எழுத்தாளர் சுஜாதா பாதுகாப்பாகத்தான் இருந்தார்)

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

13 Responses to ஆனந்த விகடனும் – பெரியாரும்

 1. கோகுலகிருஷ்ணன் சொல்கிறார்:

  மதிமாறன் அவர்களுக்கு,
  மிகச்சிறந்த பதிவு, வாழ்த்துக்கள் நான் கூட என்னமோ ஆனந்த விகடன் திருந்தி விட்டதோவென நினைத்தேன் இப்போது தானே தெரிகிறது, ஆவியின் இரட்டை வேடத்தை தோலுரித்தமைக்கு மிக்க நன்றி.

 2. கோகுலகிருஷ்ணன் சொல்கிறார்:

  மதிமாறன் அவர்களே,
  மிகச்சிறந்த பதிவு வாழ்த்துக்கள்,
  அதுதானே பார்த்தேன் நான் கூட ஆனந்த விகடன் திருந்திவிட்டதொவென எண்ணி ஒரு கணம் ஏமார்ந்து விட்டேன், பார்பனீயம் என்றைக்கும் மாறாது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, ஆவியின் இரட்டை வேடத்தை தோலுரித்தமைக்கு மிக்க நன்றி.

  கோகுல்
  மும்பை

 3. நிலவன் சொல்கிறார்:

  என்ன மதிமாறன் அவர்களே,

  யாரையும் சும்மா விட மாட்டீங்க போல இருக்க..
  நல்லா காய்ச்சி எடுங்க… வாழ்த்துக்கள்.

  வாழ்க தமிழுடன்,
  நிலவன்

  http://eerththathil.blogspot.com

 4. நிலவன் சொல்கிறார்:

  //மாட்டீங்க போல இருக்க..//

  மாட்டீங்க போல இருக்கே !

 5. அதி. அழகு சொல்கிறார்:

  //வர்த்தகமும்-பார்ப்பனியமும் ஆனந்த விகடன் போன்ற பார்ப்பன பத்திரிகைகளுக்கு இரண்டு கண்கள். பார்ப்பனரல்லாத பத்திரிகைகளுக்கு வர்த்தகம் மட்டும்தான் நோக்கம்.
  அதனால்தான் யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானலும் விமர்சிக்கிற பார்ப்பன பத்திரிகைகள், பார்ப்பனியத்தின் ஜாதி வெறி அதன் ஓழுக்கக் கேடு குறித்து விமர்சிப்பதில்லை.
  சொந்த புத்தி அற்று பார்ப்பனரல்லாதவர்களால் – நடத்தப்படுகிற பத்திரிகைகள், பார்ப்பன பத்திரிகைகளையே முன் மாதிரியாக கொண்டு நடத்துவதால், இவர்களும் பார்ப்பனியத்தை கேள்வி கேட்பதில்லை.
  பல நேரங்களில் இந்தப் பார்ப்பனதாசர்கள், பார்ப்பனர்களையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்கள், பார்ப்பனியத்தை பாதுகாப்பதில்//

  மிகச் சரியாகச் சொன்னீர்கள், நன்றி!

 6. Sithiraputhiran சொல்கிறார்:

  (சுஜாதாவின் சாவு குறித்து கவிதாசரண் (ஆகஸ்டு – செப்டம்பர் 2008) இதழில் கவிதாசரண் எழுதியது)

  எழுத்தாளர் சுஜாதா மறைவைக் கேட்டு எனக்கேற்பட்ட உணர்வை – நீங்கள் விரும்பாவிட்டாலும்கூட – நீங்கள் எதை விரும்ப வேண்டும், எதை விரும்பக் கூடாது என்று அறிவுபூர்வமாக எப்போதாவது தேர்ந்ததுண்டா என்ன?- சொல்லத் தோன்றுகிறது. வெகுநேரம் குடலுக்குள் சடுகுடு நடத்திக்கொண்டிருந்த காற்று பிரிந்து ஒரு நீண்ட ஆசுவாசம் ஏற்படுமே, அப்படி இருந்தது. செத்தவர்களைப் பற்றி நல்லவிதமாகத்தான் பேச வேண்டும் என ஒரு மரபை வைத்திருக்கிறார்கள்- ஏதோ யாருக்கும் வராத சாவு செத்தவருக்கு வந்துவிட்டாற்போல, கோட்சே செத்ததும் காந்தியின் ரட்சகனாகிவிட்டாற்போல. எனக்கான உண்மை எனக்கு நல்லவிதமானதுதான். ஒவ்வொருவருக்கும் பரந்த பரிமாணங்கள் உண்டெனினும் ஓர் உயிர்நிலை இருக்கும். சுஜாதாவின் உயிர்நிலை பார்ப்பன வக்கிரம். சினிமாத்தனமான விரிந்த வக்கிரம். அதிலும் கடைசியாக “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்…….” தம் பிறவித் துயரங்களையெல்லாம் இறக்கி வைத்துவிட்டுப்போன பெண்பிள்ளைகளாம் அங்கவை சங்கவையை அவமதித்தது, அதற்கொரு கோமாளிப் பேராசிரியனைப் பயன்படுத்தியது- நான் ஒன்றும் செருப்பால் அடிக்கத் தோன்றியது என்று சொல்லவில்லை-வாயு பிரிந்து ஆசுவாசம் தந்தது என்றுதான் சொல்கிறேன்.அந்த எழுத்தாளன் பிரமிக்க வைத்ததாகப் பிதற்றும் மனிதர்களைப் பார்க்க அருவருப்பும் வருத்தமும்தான் தோன்றுகிறது. உலக மயம், சாதி மேன்மை, மனித இழிவு என்று நீங்கள் எதையெல்லாம் வெறுக்க வேண்டுமோ, அவை அனைத்தின் துர்நாற்றம் மிக்க எழுத்தூற்றம்தான் அவர். அவரை விட வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள் போன்றவர்கள் (நான் ஆரணி குப்புசாமி முதலியாரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. சூத்திர ஒப்புமை வேண்டாம் பாருங்கள்.) சமூக வக்கிரமற்ற சந்தோஷமான திகில்கதைகளை இவரை விடப் படு சுவாரஸ்யமாக எழுதியவர்கள்தாம்.கடைக்குப் போய் ஆணுறை கேட்கிறீர்கள்.”பெரிசு வேணுமா? சின்னதா?” என்று கடைக்காரன் கேட்டால் என்ன சொல்வீர்கள்? உங்ளுடையது சிறிதென்று கடைக்காரன் கருதிவிடக் கூடாதே என்று அவசர அவசரமாகப் பெரிதைக் கேட்பீர்கள். ஆணுறையில் பெரிது சிறிதெல்லாம் கிடையாது தெரியுமா? ஆனால் அப்படிப் பெரிதாக விற்றுத் திரிந்தவர்தான் சுஜாதா.

 7. ஆ ராசேந்திரன் சொல்கிறார்:

  (‘பாய்ஸ்’ (’ச்சீ..’ ஆனந்த விகடனுக்கும் பொருந்தும்) படத்தின் பொறுக்கித்தனத்திற்கு 99 சதவீதம் காரணமான சுஜாதாவைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட கண்டித்து எழுதவில்லை.)

  மேற்கூறிய உங்களின் விமர்சனம் அருமை, அருமை, அருமை.

 8. கருப்பன் சொல்கிறார்:

  ‘செத்தப் பிறகும் கொடுத்தான் சீதக்காதி’ என்று சொல்வார்கள். அதுபோல், ‘செத்தப் பிறகும் கெடுக்கிறான் சுஜாதா.’

  – இதத்தான் எங்க ஊரில் பஞ்ச் டயலாக்-னு சொல்லுவாங்க…காவிகளின் முகமான ஆவியை..அருமையாக தோலுரித்து காட்டியிருக்கிறீர் தோழர்.. வாழ்த்துக்கள்!

 9. Parthipan சொல்கிறார்:

  சரியான சவுக்கடி, ஆனந்த விகடனின் யோக்கியத்தை கிழி கிழின்னு கிழித்து இருக்கிறீர்கள். (இந்த பார்ப்பன மதன் ஞானியை விட்டுடிங்க‌)

 10. Nithi...! சொல்கிறார்:

  ஹ்ம்ம்ம்ம்ம்ம் இபோ ஆவியா உங்களுக்கு…..
  பல பேரு ஆவி ரொம்ப நல்ல பத்திரிக்க பா வங்கி படிங்க நு சொலுவது உண்டு…..
  ஆவி ஒரு மோசமான பத்திரிகை என்று மிக தெளிவாக விளக்கிய தோழார் உங்கள்கு நன்றிகள் கோடி [ சில நேரம் நானும் ஆவி நல்ல பத்திரிக்க நு nachiruken ]

 11. காடக முத்தரையன் சொல்கிறார்:

  வெட்டிப் பயல்களா. நிறுத்துங்களாடா உங்களின் கதைக்கு உதவாத வாதங்களை. பெரியார் ஓரு காட்டுமிராண்டி. அம்பேத்கர் ஓரு அறிவு கெட்டவன்.
  muthu@hotmail.com
  122.252.227.142

 12. Pingback: சுஜாதாவும் சுஜாதா வைப் போன்றவர்களும்.. | வே.மதிமாறன்

 13. krishnan சொல்கிறார்:

  I AGREE WITH MR.காடக முத்தரையன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s