பாரத் மாத்தாக்கி ஜே…

* காந்தியை சுட்டுக் கொன்றான் ஒரு பார்ப்பன இந்து மதவெறியன். இப்படியாக துவங்கியது சுதந்திர இந்தியாவின் சாதனை.

* ஜகத்குரு ஜெயேந்திரர் என்கிற துறவி, சங்கரராமன் என்பவரை கூலி படை வைத்து கொலை செய்தார்.

*குஜராத்தில் கர்ப்பிணி பெண் வயிற்றில் குத்தி கருவில் இருந்த குழந்தையையும் கொன்றார்கள் மோடி தாசர்கள்.

*செத்த பசுமாட்டின் தோலை உரித்ததற்காக, மூன்று தாழ்த்தப்பட்டவர்களை கொன்று, அவர்களின் தோலை உரித்தார்கள் ஜாதி இந்துக்கள்.

*கடன் தொல்லையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

*வறுமையின் காரணத்தினால் நெசவாளர்கள் தங்கள் சிறுநீரகத்தை விற்றார்கள்.

*அதே காரணத்திற்காக பெண்கள், வாடகை தாய்களாக மாற்றப்பட்டு உடல் மற்றும் உளவியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள்.

*காவல் துறையினர் சிறுமியை பாலியல் வன்கொடுமைச் செய்து விபச்சார விடுதியில் விற்றனர்.

*தாய்நாட்டுக்காக தன் உயிரையே தியாகம் செய்வதாக சொல்லப்படுகிற, நம்பப்படுகிற ராணுவத்தினர் – தொடர்ந்து பெண்களை தூக்கி வந்து வன்புணர்ச்சி செய்து கொலை செய்வதை கண்டித்து, அஸ்ஸாம் மாநிலத்தில் ராணுவ அலுவலகம் முன்பு நிர்வாணமாக நின்று தங்கள் எதிரிப்பை தெரிவித்தனர் அந்த வீரமிக்க பெண்கள். அந்த அவமானம் கொஞ்சமும் உரைக்காமல் மிடுக்கோடு தேசத்திற்காக ‘பாடுபடுட்டு’க் கொண்டுதான் இருக்கிறார்கள், தாய்நாட்டின் மானம் காப்பவர்கள்.

*கட்டடம் மற்றும் வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு, தங்குவதற்கு வீடு இல்லாததால், சாலையோரத்தில் தங்கி ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவில் லாறி ஏறி சாகிறார்கள்.

*தனது பதவி காலம் முடிந்த பிறகும் அரசு வீடுகளை காலி செய்ய மறுத்தனர் முக்கியஸ்தர்கள். செய்வதறியாது விழிப்பது போல் நடிக்கிறது – அரசும், நீதி மன்றமும்.

*சாலை விரிவாக்கத்திற்காக குடிசைகள் பிய்த்தெரியப்பட்டதால், திக்கு தெரியாமால் விழிக்கிறார்கள் வீடு அற்றவர்கள்.

*“சுதந்திர இந்தியா பெருமளவில் உயர்ந்திருக்கிறது.” குடியரசுத் தலைவரும் – பிரதமரும் பெருமை பொங்க உரையாற்றுகிறார்கள்.

*ரிலைன்ஸ் அம்பானியின் தவப்புதல்வர்கள் குட்டி முதலாளிகளாக இருந்து பெரும் முதலாளிகளாக உயர்ந்திருக்கிறார்கள்.

*வறுமையிருந்தாலும், நாட்டில் பணப்புழக்கம் அதிகமாகி இருக்கிறது என்கிறார் நிதியமைச்சர்.

*நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் கட்டு கட்டாக பணம் கை மாறியது.

*அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்திற்காக என்ன வேண்டுமானலும் செய்ய தயாராக இருந்த இந்திய ஆளும் கும்பலின் தேசப்பற்று மிக்க சுதந்திர தின உரையைப் பார்த்து கேலியாக சிரித்துக் கொண்டிருப்பார் ஜார்ஜ் புஷ்.

60 ஆண்டுகளைத் தாண்டியும் சுதந்திர இந்தியாவின் சாதனை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்க அதன் தொண்டு.

மகாத்மா காந்தியின் சொந்த ஊரான குஜராத்தை தனக்கும் சொந்த ஊராக கொண்ட, காந்தியவாதியைப் போல் சிக்கனமாக உடை உடுத்தும் நடிகை நமீதா எதோ ஒரு தொலைக்காட்சியில் சுதந்திரதின வாழ்த்துகளை சொல்லிக் கொண்டிருந்தார்….

பாரத் மாத்தாக்கி ஜே… ஜெய்ஹிந்த்.

2008/08/15 அன்று எழுதியது.

தொடர்புடையது:

குஷ்புவும் நமீதாவும் செம்மொழி மாநாடும்

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

6 Responses to பாரத் மாத்தாக்கி ஜே…

 1. nondhakumar சொல்கிறார்:

  செய்திகள் செறிவாய் இருந்தன.

  நமீதா படம் நன்றாக இருக்கிறது. இப்படி கொசுவம் வைச்ச‌ புடவைக் கட்டி எந்த படத்தில் தோன்றுகிறார்.
  தமிழ் பட உலகம் கெட்டுத்தான் போய்கொண்டு இருக்கிறது.

  *******

  ‘ஜன கன மன’

  நூல் நூற்கிறாள்
  என்னுடன் போட்டி போட்டு
  படித்த தனம்

  டீ க‌டையில்
  கிளாஸ் க‌ழுவுகிறான்
  முத்து முத்தாய் எழுதும்
  முத்துராசு

  கணக்கு பாடத்தில்
  100க்கு 100 வாங்கும்
  க‌ருப்பு ச‌ந்தான‌ம்
  வெல்டிங் பட்டறையில்
  கொஞ்சம் கண் அயர்ந்ததில்
  செத்துப் போனான்

  இருப்பினும்…
  நெஞ்சு நிமிர்த்தி பாட‌லாம்
  ‘ஜ‌ன‌ க‌ன‌ ம‌ன’

  பின்குறிப்பு : அக்கா பெண் 9ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளியில் ஆண்டுவிழாவிற்காக கவிதை கேட்கிறார்கள். எழுதி தாருங்கள் என்றாள்.

  ‘நீயே எழுதுவது தான் சரி.எழுதி கொண்டு வா! திருத்துகிறேன்’ என்றேன்
  ஒன்றும் எடுபடவில்லை. அடம்பிடித்து எழுதி வாங்கிப் போனாள். கவிதை நன்றாக இருந்ததாக பாராட்டி, பள்ளி இதழில் வெளியானது.

  கவிதையில் வரும் பாத்திரங்கள் நிஜமானவர்கள். இரவில் என்னுடன் பேசி போன ஒரு மணி நேரத்தில் செத்துப்போனான். அடுத்த நாள் அதிகாலையில் மார்ச்சுவரியில் பார்த்த சந்தானத்தின் உடலை நினைத்தால், இன்றைக்கும் என்உடல் புல்லரிக்கும். நெஞ்சு கணத்துவிடும். இறக்கும் பொழுது அவனுக்கு வயது 15.

 2. jp சொல்கிறார்:

  அருமை !!! நான் கொஞ்சம் நாளுக்கு முன்னாடி எழுதினது – இந்த வரிசையில் !! நேரம் இருக்கும் பொழுது படிக்கவும் …

  http://tamilkuruthi.blogspot.com/2008/05/blog-post.html

  http://tamilkuruthi.blogspot.com/2008/05/blog-post_3597.html

 3. கரிகாலன் சொல்கிறார்:

  விடுதலை நாளில் நாட்டுக்கு உழைத்தவர்களை நாளெல்லாம் சின்னத்திரையில் காட்டி விடுதலை நாளை மிகச் சிறப்பாக கொண்டாடிய சன், கலைஞர் போன்ற தொலைக்காட்சிகளிடம் இருந்து நாட்டு மக்களுக்கு எப்போதுதான் விடுதலை கிடைக்கப்போகிறதோ தெரியவில்லை…

 4. Nithi சொல்கிறார்:

  நமீதா படத்தில் கவர்ச்சி இல்லை [:o]
  காந்தியை போல் நமிதாவும் ஏழைகள் நண்பன் போல ???

 5. Pingback: அடிச்சா மொத்தமா.. ‘பாரத ரத்னா’ | வே.மதிமாறன்

 6. Pingback: பாரத மாதாவை விற்கும் பா.ஜ.க | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s