இயேசுவின் மூன்றாவது ‘வருகை’

god.jpg

ன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்சந்தை அருகே உள்ள பாளையம் பகுதியில், ஈஸ்டர் பண்டிகையன்று அதாவது இயேசுவின் இரண்டாவது வருகையன்று, (23.3.2008) புனித சந்தியாகப்பர் ஆலயத்தை இடி தாக்கியதால் சர்ச்சின் மேல் ஓடுகளால் ஆன கூறை முற்றிலுமாக நொறுங்கி விழுந்தது.
சர்ச்சுக்குள் அந்த நேரம் யாரும் இல்லாததால், மனிதர்களுக்கு எந்த தீங்கும் நேரவில்லை.

‘ஈஸ்டர்’ அன்று இந்த சேதம் நடந்ததால் ஒரு வேளை இது ஆண்டவரின் வேலையாக இருக்குமோ அதாவது அவரின் மூன்றாவது வருகையாக இருக்குமோ என்று பக்தர்கள் யாரும் கடவள் மீது சந்தேகப்படாதது பாராட்டுக்குரியது.

இதேபோல் சில மாதங்களுக்கு முன்னால் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கோபுர கலசத்தை இடிதாக்கி தூளாக்கியது.

பக்தர்கள் கோயில் கட்டினால் மட்டும் போதாது. கடவுளைப் பாதுகாக்க வேண்டுமானால், கோயிலின் மீது இடிதாங்கியை கட்டாயம் பொருத்த வேண்டும்.
இல்லையென்றால், வானத்திலிருந்து கடவுள் உங்களை ஆசிர்வதிப்பதற்கு முன், இடி கடவுளை ஆசிர்வதித்துவிடும்.

குறிப்பு:

இயேசு இனி பூமிக்கு வரப்போவதாக நம்பப்படுவதைதான் ‘ஆண்டவரின் இரண்டாவது வருகை’ என்று கிறிஸ்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 ஆனால் பைபிளின் கணக்குப்படி இயேசு மனித குமாரனாக பிறந்தது, முதல் வருகை. சிலுவையில் அறையப்பட்டு பின் உயிர்தெழுந்தது (ஈஸ்டர்) இரண்டாவது வருகை. அப்படியானல் இனி வந்தால் அது மூன்றாவது வருகைதானே?!

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

6 Responses to இயேசுவின் மூன்றாவது ‘வருகை’

 1. dhilip சொல்கிறார்:

  yeasuvin 3ra vadhu varugai miga arpudhamaga irundhadhu pope aandavari patri oru katturai eludhalame

 2. sasi சொல்கிறார்:

  பக்தர்கள் கோயில் கட்டினால் மட்டும் போதாது. கடவுளைப் பாதுகாக்க வேண்டுமானால், கோயிலின் மீது இடிதாங்கியை கட்டாயம் பொருத்த வேண்டும்.//

  கண்டிப்பாக ஆண்டவனை பாதுகாப்பது மனிதன் தானே ஆனா பாருங்க எப்படிதான் மனிதன் ஆடவன பாதுகாத்தாலும் தினம் ஏதாவது ஒரு கோவில்களில் கொள்ளை நடந்துகொண்டு தான் இருக்கிறது
  *********

  நாளை (29-03–08) இதை பற்றிய கருத்தரங்கம் ஒன்று நடைபெறுகிறது சென்னையில்

 3. mohunraj சொல்கிறார்:

  The Bible says “and God created man” But it not correct. Man only created God= It may be any relegion.

 4. மகிழ்நன் சொல்கிறார்:

  வணக்கம் தோழரே!

  மக்களின் முட்டள்தனத்திற்கு இன்னொரு சான்று. பக்தியில் புத்தி மழுங்கி தீக்குளியில் குழந்தையோடு விழுகிறார்கள். கோயிலுக்குள் முட்டளாய் உள்நுழைந்து பல நேரங்களில் இதே போன்று உயிருள்ள பிணமாய் வெளிவருகிறார்கள் சில நேரங்களில் உயிரற்ற பிணங்களாய்! என்ன செய்வது திருந்தாத உயிர்கள் ஆகி போனார்கள் தமிழர்கள். அது போகட்டும் உங்கள் பணி தொடரட்டும்.

  உஙகளுடைய எழுத்து நடை மிக அழகு. இதுதான் மக்களுக்கு நேரடியாக போகும் அளவுக்கு உள்ளது. சொல்லும் கருத்து நல்லதாயினும் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு விடாமல் தோளில் கைபோட்டு அக்கறையுள்ள தோழன் சற்று கிண்டலோடு சொல்வது போல் உள்ளது உங்கள் நடை. தொடருட்டும் உங்கள் பணி.

  தங்களிடம் (வேதாகம)பைபிள் பற்றிய ஆய்வு நூல்கள் ஏதாகிலும் கூறவும். மும்பையில் கிருஸ்துவத்தின் பெயரால் கடுமையான் வியாபாரம் நடக்கிறது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நூல்கள் பயன்படலாம்

  பின்குறிப்பு:- மஞ்சை வசந்தனின் அர்த்தமற்ற இந்துமத்த்தில் வரும் கிருஸ்துவத்தை பற்றிய ஒரு சிறு பகுதி போதுமானதான இல்லை

  மும்பை திராவிடர் கழகத்தோழர்.
  தாராவி

 5. Pingback: ‘கொள்ளை-கொலை’ செய்த பக்தனுக்கு கோயில் சொத்து; நாணயமான நாத்தினுக்கு தடை | வே.மதிமாறன்

 6. Prem சொல்கிறார்:

  இயேசு உயிர்த்தெழுந்தது இரண்டாம் வருகை அல்ல… பைபிளை நன்கு தெரிந்த பிறகு கேலி செய்யவும்…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s