Monthly Archives: மார்ச் 2008

யார் வெறி நாய்?

    வெறிபிடித்தத் தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. இவைகளைக் கொன்றால்தான் என்ன? ம. ரமேஷ், சென்னை. இந்தத் தொல்லை வெறிநாய்களால் அல்ல. ஜீவ காருண்ய சீலர்களால். ஜாதி இந்துக்கள், சைவ உணவு முறை பழக்கமுள்ள உயர்ஜாதிக்காரர்கள் எப்போதுமே உழைக்கும் மனிதர்களை விட விலங்குகளை மேன்மையானவைகளாக கருதுவார்கள். “அம்மா தாயே, சாப்பிட ஏதாவது … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 6 பின்னூட்டங்கள்

இயேசுவின் மூன்றாவது ‘வருகை’

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்சந்தை அருகே உள்ள பாளையம் பகுதியில், ஈஸ்டர் பண்டிகையன்று அதாவது இயேசுவின் இரண்டாவது வருகையன்று, (23.3.2008) புனித சந்தியாகப்பர் ஆலயத்தை இடி தாக்கியதால் சர்ச்சின் மேல் ஓடுகளால் ஆன கூறை முற்றிலுமாக நொறுங்கி விழுந்தது. சர்ச்சுக்குள் அந்த நேரம் யாரும் இல்லாததால், மனிதர்களுக்கு எந்த தீங்கும் நேரவில்லை. ‘ஈஸ்டர்’ அன்று இந்த சேதம் … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

இந்துவா? அது அவுங்க மட்டும்தாங்க

ஆடு, மாடுகளை பலியிடுதல் பிடிக்காது பகவானுக்கு, சுத்த சைவம். இஸ்லாமியர் ரத்தம் என்றால்… அது தான் ஆனைமுகத்தானுக்கு கிருஷ்ணா ஸ்வீட்.. இந்து மதம் என்பது ஜாதிதான் என்று கூறுகிறீர்கள். அப்படியானால் அங்கே மத உணர்வே கிடையாதா? -எஸ். விக்னேஸ்வரன் இஸ்லாமியர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை தூண்டுவதற்கும், அவர்கள் மீது வன்முறையை ஏவுவதற்கும் முழுக்க முழுக்க இந்துமத ‘உணர்வு’ … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 5 பின்னூட்டங்கள்

‘மூடப் பாதிரிகள்’ பாரதியின் கோபம்

ஏராளமான புத்த நூல்கள் கொளுத்தப்பட்டன. அதற்கு பெயர்தான் ரிக் வேதப்படி நடத்தப்பட்ட யாகமோ? ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 17 நான்காவது அத்தியாயம் இன்று (2000 ஏப்ரல்) பாரதிய ஜனதா கட்சியின் எதிர்க் கட்சியாக இருக்கிற அதனாலேயே மதப் பேரினவாத சக்தியின் எதிரியாகக் காட்சி தருகிற, ஜெயலலிதாவின் தயவில் பாரதீய ஜனதாகட்சி ஆட்சி நடத்த … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

தமிழ் ப்ரதானம் ஆனால்… பாரதியின் மாறுவேடம்

  ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 16 நான்காவது அத்தியாயம் “அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முற்றே உலகு” என்று தொடங்கிய திருவள்ளுவர், தன்னுடைய 1330 குறள்களிலும் கடைசிவரை ஆதிபகவான் யார் என்று சொல்லாமலேயே விட்டுவிட்டார். இது, சுப்பிரமணிய பாரதிக்கு பெரிய தொந்தரவாகவே இருந்திருக்கிறது. அந்தக் கடுப்பு தாங்காமல், எடுத்திருக்கிறார் எழுதுகேலை-வடித்திருக்கிறார் பாடலை. ஆதிபகவன் … Continue reading

Posted in கட்டுரைகள் | 13 பின்னூட்டங்கள்

நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு… விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து…

வரலாறை தன் விரும்பம் போல் கற்பனை செய்து சொல்லுகிற மோசடி அறிஞர்கள், தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் ஒரு குறிப்பிடதக்க அறிஞர்தான் இந்த ‘வாயாடி’நெல்லை கண்ணன். ஐந்தாம் வகுப்பு பையன் அஞ்சு மார்க்குகாக செய்யுளை மனப்பாடம் பண்ணி மளமளன்னு ஒப்புக்கிறானே, அந்த மாதிரி ‘திறமை’ உள்ளவர்தான் இந்த ஆளு. இந்த நல்லவரை விஜய் டீ.வி. … Continue reading

Posted in கட்டுரைகள் | 38 பின்னூட்டங்கள்

சிதம்பர ரகசியம் அம்பலமானது

சிதம்பரம் நடராஜன் கோயிலில் தேவாரம், திருவாசகத்தை தமிழில் பாடக்கூடாது (பின்ன தேவாரத்தை இங்கிலிஷிலயா பாடம் முடியும்?) என்று பல நூற்றாண்டுகளாக தமிழர்களை அவமானப்படுத்திவந்த தீட்சிதர்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்த்து, இன்று (5.3.2008) காலை 10 மணியளவில் மக்கள் கலை இலக்கிய கழக தோழர்கள் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரத்தை பாடியிருக்கிறார்கள். தோழர்களின் தொடர்ந்த முயற்சியினால் போலிசுக்குக்கூட … Continue reading

Posted in கட்டுரைகள் | 14 பின்னூட்டங்கள்