சுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி

Sundara Ramasamy

சென்னை தெற்கு போக் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு முன்பு ஹாலிவுட் படத்தின் பிரம்மாண்டமான செட் போல் சிவாஜி கணேசனின் வீடு. அது தீப்பற்றி எரிந்தது. காரணம், மின்கசிவு. மின்கசிவிற்குக் காரணம் வீட்டில் எல்லா அறைகளும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டவையாகும். கழிவறை கூடவா என்பது தெரியவில்லை.

அந்த வீட்டின் சொந்தக்காரர்களில் ஒருவரும், நடிகருமான பிரபு இது பற்றி பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கையில், “இந்த வீட்டை அப்பா ஆசையோடு வாங்கினார். வீட்டில் இருந்த மரப்படிக்கட்டுகள் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஏறி, இறங்கிய படிக்கட்டுகள் எரிந்து போனது வருத்தமாக இருக்கிறது. (ஏறி இறங்கிய அப்பாவே எரிஞ்சி போயிட்டாரு. படிக்கட்டு போனதுதானா முக்கியம்? அவருடைய படம் எரியாமல் தப்பியது ஆச்சரியமாக இருக்கிறது” (இதிலென்ன ஆச்சரியம். அதுல தீ பத்தல. அதனால அது எரியலை.)

வீடு தீப்பிடித்து எரிந்தவுடன் கமலா அம்மாள், நடிகர் பிரபு, அவர் மனைவி மற்றும் குழந்தைகள் எல்லாரும் வெளியே ஓடி வந்துவிட்டனர். ஆனால் சிவாஜியின் தம்பி மகன் முரளியின் மனைவி மற்றும் குழந்தைகள் ஓர் அறையில் சிக்கிக் கொண்டனர். அவர்களைக் காப்பாற்றுமாறு குடும்பம் கூக்குரலிட்டிருக்கிறது. சினிமாவில் தீயில் புகுந்து பலபேரைக் காப்பாற்றிய நம் கதாநாயகன் பிரபுவும் “காப்பாற்றுங்கள்” என்று கூக்குரலிட்டிருக்கிறார். சினிமாவில் பிரபுவின் சாகசத்தைப் பார்த்துப் பிரமித்த ஆட்டோக்காரர் ஒருவர், பிரபுவின் கூக்குரலை கேட்டு தன் உயிரைப் பணயம் வைத்து கதாநாயகன் குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறார் (இதற்கு முன் மற்ற நாட்களில் அந்த ஆட்டோ ஓட்டுநரை வீட்டுக்குள் சேர்த்திருப்பார்களா?) காப்பாற்றப்பட்ட பின் நம் சாகசக் கதாநாயகன் பிரபு சொல்லியிருக்கிறார். “அப்பா கடவுளாக வந்து எங்களைக் காப்பாற்றி இருக்கிறார்”

இதுதான் அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பிரபு காட்டிய நன்றி. (கடவுளாக வந்து காப்பாற்றிய அப்பா எதற்கு தீ வைத்து வீட்டைக் கொளுத்துவானேன்?) ‘’காப்பாற்றுங்கள்’ என்ற பிரபு குடும்பத்தின் கோரஸ் கூவ்கூரல் கேட்டவுடன் ஆட்டோ ஓட்டுநர் தன் உயிரைப் பணயம் வைத்து சிவாஜியின் குடும்பத்தைக் காப்பாற்றியதற்குப் பதில், சிவாஜியின் உண்மை ரசிகனாக மட்டும் இருந்து ‘சிச்சுவேசனுக்கு’ப் பொருத்தமாக அந்தப் பிரமாண்ட ஹாலிவுட் படத்தின் செட் போன்ற வீட்டின் கேட்டருகில் நின்று, பிரபுவைப் பார்த்து இப்படிப் பாடி இருக்கலாம் ‘’போனால் போகட்டும் போடா! இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா…’’

***

மேற்சொன்ன இந்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட ஒட்டுமொத்த ஆட்டோ ஓட்டுநர்களும் வெட்கப்படும்படியான ஒரு செயலைச் செய்திருக்கிறார். இன்னொரு ஆட்டோ ஓட்டுநர். அவர் பெயர் புதுவை இளவேனில்.

வசதியான ஒரு வயதானவரை விதவிதமாகப் புகைப்படம் எடுத்திருக்கிறார். எடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்தக் கண்றாவிகளை கண்காட்சி வைத்து வேறு காட்டியிருக்கிறார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்தப் பெரியவர் யார்? அவர் வெறும் கதை எழுதுற ஓர் ஆசாமி. அவர் பெயர் சுந்தர ராமசாமி. அவரை எதுக்குப் புகைப்படம் எடுக்கணும்? எடுத்ததை வைச்சி எதுக்கு கண்காட்சி நடத்தணும்? இதோ புகைப்படம் எடுத்து புதுவை இளவேனில் சொல்கிறார். “ஓர் எழுத்தாளரின் எழுத்துக்கள் அவனை வாசகனிடம் முழுமையாகக் கொண்டு சேர்ப்பதில்லை. (எழுதுவதைத் தெளிவா எழுதணும்) என்னைக் கவர்ந்த எழுத்தாளரின் இயல்பை. இன்னொரு பக்கத்தை எல்லோருக்கும் கொண்டு சேர்ப்பது ஒரு கலைஞனாகிய எனக்கு (அப்படிப் போடு…!) அவசியமாய்த் தோன்றியது. எனவே, சுந்தர ராமசாமியின் நிஜங்களை நிழற்படங்களாக கண்காட்சி ஆக்கியுள்ளேன்…” இதுதான் ரசிகனின் கலைமனமோ? இல்லை, கலைஞனின் ரசிக மனமோ?

நடிகனை விதவிதமாகப் புகைப்படம் எடுத்து, ரசிக மனோபாவத்திற்குத் தீனியாக ‘ப்ளோ-அப்’ போட்டு விற்பதை வாங்கிக் குவிக்கும் நடிகனின் ரசிகனுக்கும், சுந்தர ராமசாமியின் ரசிகரான இந்த புதுவை இளவேனிலுக்கும் என்ன வித்தியாசம்? சரி, புதுவை இளவேனில்தான் ‘’தலைவா, உங்க முகத்தை காமிச்சிட்டு போங்க தலைவா!” என்று ரஜினியின் வீட்டு வாசலில் நின்று கூக்குரல் இடுகிற ரசிகனின் மனோநிலையில் இருப்பதால் அவருக்கு எதுவும் புரியவாய்ப்பில்லை. ஆனால், எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் ஆயிற்றே சுந்தர ராமசாமி! அவருக்குக் கூடவா இது ஆபாசம் என்று தெரியவில்லை. எதைப் பற்றிக் கேட்டாலும் உலக ஞானம் தளும்பத் தளும்ப ஆலோசனை தருகிற, அறிவுரை சொல்லுகிற, எச்சரிக்கிற ‘சுரா’வை, ‘பு.இ.’ உங்களை விதவிதமாக போட்டோ எடுக்கணும்னு கேட்டப்பவே “வேண்டாம் தம்பி, இந்த பத்தாவெல்லாம் எனக்குப் பிடிக்காது. தனி மனிதர்களை ரசிக மனோபாவத்தோட அணுகக்கூடாது” அப்படின்னு சொல்லியிருக்கலாம். ஏன்னா, புனைப்பெயரே பந்தாவா இருக்கக்கூடாது. என்கிற எண்ணம் உள்ளவர்தான் சுந்தர ராமசாமி.

***

2003 ஜுன் மாத ‘தீராநதி’ இதழில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கிறார். இப்படி…

“கவிதைகளுக்கு பசுவய்யா என்று புனைப்பெயர் சூட்டிக் கொண்டதற்கு விசேஷ காரணம் உண்டா?”டி.பி. கேசவமணி, திருப்பூர்-2.

“தமிழ்க் கவிஞர்கள் பொதுவாக ரொமான்டிஸிசத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். நிலப்பிரபுத்துவச் சிந்தனைகளுக்குச் சாதகமான உணர்வுகளும் கற்பனைகளும் உள்ளவர்கள். இவ்வியல்புகளைச் சட்டென நாம் கண்டு கொள்ள முடியாமல் நம்மைத் தடுப்பது அவர்களது வீராவேசமான போலி புரட்சிகரக் கோசங்களே. தமிழ்க் கவிஞர்களின் புனைப் பெயர்களின் பட்டியலை நீங்கள் தயாரித்தால் அவை கற்பனையும் மிகையும் கொண்ட படிமத்தை வற்புறுத்தி வாங்கிக் கொள்ளக் கூடியவையாகௌம் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கவிஞர்களின் கலாச்சாரத்தின் மீது மிகக் கடுமையான விமரிசனம் கொண்டவன் நான். ஆகவே, பந்தா இல்லாத ஓர் எளிமையான பெயர்தான் என்னைக் கவரக்கூடியதாக இருந்தது” என்று பதில் அளிப்பதின் மூலமாக திராவிட இயக்க, இடதுசாரிக் கவிஞர்களை கடுமையாகச் சாடிய இந்தப் பெரியவர், இளையவருக்கு அறிவுரை சொல்லி தவிர்த்திருக்க வேண்டாமா? ஆனால், இந்த ‘எளிமை விரும்பி’ என்ன செய்திருக்கிறார், தெரியுமா? இதோ அவரின் ரசிகர் புதுவை இளவேனில் அதை அன்போடு அம்பலப்படுத்துகிறார்.

“காரணம் தெரியாத இந்த ஆர்வத்தை பூர்த்தியாக்கிக் கொடுங்கள் என்று என் புதுச்சேரி நண்பர் ஒருவரிடம் (காலச்சுவடின் பாண்டிச்சேரி ‘ஏஜெண்டோ’) முறையிட்டபோது அந்த நபரோ, தொலைபேசியில் சுராவுக்கு உடனடியாகத் தகவலைத் தெரிவித்துப் பேசச் சொல்லி போன் ரீசிவரையும் கொடுத்தார். வாங்கிப் பேசினேன். “சொல்லுங்க… என்னை படம் எடுக்கனும்னு கேட்டேளாமே? படம் எல்லம் நல்லா எடுப்பேளா?” என்று கேட்க, தயங்கித் தயங்கிப் பதில் சொன்னேன். “சரியா எடுப்பேன் சார்!” “சரி, உடனே வாங்கோ” என்று சம்மதம் சொல்ல, ஊருக்குப் (நாகர்கோயில்) புறப்பட்டுப் போனேன். (குங்குமம், 16.7.2004.)

அடுத்தவரைக் கட்டிண்டிக்கிற இந்தப் பெரிய மனிதனின் யோக்கியதை எவ்வளவு கேவலமாக இருக்கிறது பார்த்தீர்களா? வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்கள் கூட இவ்வளவு அருவெறுக்கத்தக்க முறையில் நடந்து கொண்டதில்லை இது மட்டரகமான நடிகனின் மனோபாவம்தான் என்பதை நிரூபிப்பதுபோல் இந்தக் கண்றாவிகளின் கண்காட்சியின் துவக்க விழாவில், நடிகர் நாசர் இப்படிச் சொல்லியிருக்கிறார். ‘’இந்தப் படங்களை எல்லாம் பார்க்கும்போது சுந்தர ராமசாமியை நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.”

நாசர் சொன்னது உண்மைதான். சுந்தர ராமசாமி ஒரு கைதேர்ந்த நடிகர்தான். “லைட் எல்லம் அரேன்ஞ் பண்ணிட்டேன். சிந்திக்கிற மாதிரி ஒரு போஸ் கொடுங்கள்” என்று புதுவை இளவேனில் சொல்லியிருப்பார். சுந்தர ராமசாமி சிந்திப்பது மாதிரி தத்ரூபமா போஸ் கொடுத்திருப்பார்.

சிந்திப்பது மாதிரியான இந்த போஸ், புகைப்படத்திற்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், அவர் எழுத்துக்களில் எப்போதும் தென்படுகிற ஒன்றுதான். இந்தப் போசைப் பார்த்துதான் பல அறிஞர்கள் வியந்து போகிறார்கள். சுந்தர ராமசாமியை மையமிட்டு, இந்த அறிவாளிகள் அடிக்கிற அட்டகாசங்களைப் பார்க்கும்போது இந்தப் பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது. “கேணப்பய ஊருக்கு கிறுக்குப் பய நாட்டாமை!”

***

நின்று போன ‘காலச்சுவடு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1994-ல் மீண்டும் வரப்போவதாகக் கேள்விப்பட்டவுடனே பல அறிஞர்கள் ‘சோம்பிக் கிடந்த மனதுக்குப் புத்துணர்ச்சி’ என்கிற பாணியில் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

அதில் ஒரு கடிதம் இலங்கை பேராதனையிலிருந்து. எழுதியவர் எம்.ஏ நுஃமான். “காலச்சுவடு மீண்டும் வருவது பெருமகிழ்ச்சி. எனது வியூகம் பேட்டியை அதில் மறு பிரசுரம் செய்ய விரும்புவது நீங்கள் எனக்குத் தரும் கௌரவம். (‘காலச்சுவடு’ மீண்டும் வருவதின் பெருமகிழ்ச்சிக்கான காரணம்) இத்துடன் இரு படங்கள் அனுப்புகிறேன்… “‘சுபமங்களா’ பேட்டிகளில் வருவதுபோல நடிகர்கள் மாதிரி செயற்கையான சூழலில் படம் பிடித்துப் போடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அது மிகவும் கூச்சமாக உள்ளது” என்று எழுதியிருக்கிறார். “காலச்சுவட்டில் எழுதுவது என்னைப் புதிதாகப் பிறப்பிக்கும்” என்று அந்தக் கடிதத்தின் முடிவில் குறிப்பிட்டிருக்கும் நுஃமான் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் தகுதியை உயர்த்திக் கொண்டு காலச்சுவடுக்கே ஆலோசனை தரும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். ஆம். இப்போது அவர் ஆலோசனைக் குழுவில் ஒருவர். இவராவது சுந்தர ராமசாமியிடம் “எதுக்கு இப்படி சினிமா நடிகன் மாதிரி வெட்கம் கெட்ட வேலை?” என்று கேட்டிருக்கலாம்? கேட்டாரோ, என்னவோ?

‘காலச்சுவடு’ 2004 ஆகஸ்டு மாத இதழில் இந்தக் கண்றாவிகளின் கண்காட்சியைப் பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அந்தச் செய்தியின் பின்னணிப்பாக தேவிபாரதி என்கிற சுராவின் ரசிகர்-அல்ல பக்தர்- இப்படிச் சிலிர்த்திருக்கிறார்.

“உறங்கும் நதியின் சலனமின்மையும் ஆழியின் தீவிரமும் பின்னிப் படர்ந்த சுராவின் பேரு ஒரு குழந்தையின் பேதமையோடும், பூரிப்போடும் இளவேனிலின் புகைப்படச் சட்டங்களுள்ளாக நெகிழ்ந்து நிற்கும் தருணங்கள் வியப்பூட்டக்கூடியவை. இளவேனிலின் இப்புகைப்படங்களை சுராவைப் பற்றிய பல பரிமாணங்களைக் கொண்ட மிக நீண்டதொரு கவிதையை அல்லது குழந்தைகளுக்கான சித்திரக் கதையை, இருளையும், ஒளியையும் கொண்டு எழுத மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சியாகக் கூடப் பார்க்கலாம். ஒரு குழந்தையைப் போல அவரை இழுத்துக்கொண்டு கடல், காடு, கரை, வனாந்தரமெல்லாம் சுற்றித் திரிய முடிந்திருக்கிறது இளவேனிலுக்கு. கைப்பற்றி நடந்து, நிற்கச் சொன்ன இடத்தில் நின்று. உட்காரச் சொன்ன இடத்தில் உட்கார்ந்து… குழந்தை யார்? இளவேனிலா? சுந்தர ராமசாமியா?

சிந்தனையின் ஊற்றுக் கண்களைத் திறக்கும் நீண்ட உரையாடல்களினூடாக வெளிப்படும் அவரது உடல் மொழி, அவரது விழிகளின் அசைவிலும், அசைவின்மையிலும் தென்படும் குறிப்புகள். அவரது புன்னகை, உரத்த சிரிப்பு, கவலை, கோபம், வெறுப்பு, என அவரது ஆளுமையின் பல பரிமாணங்களைத் தமது நினைவின் பக்கங்களில் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இக்கண்காட்சி முற்றிலும் அந்தரங்கமான நெகிழ்வூட்டும் ஓர் அனுபவமாக இருக்கக்கூடும்.”

இப்படிப் புல்லரித்துப் போகும் இந்த பக்தர், கடவுளிடம் (சு.ரா) என்ன வேண்டியிருப்பார்? மேற்கண்ட ஆராதனையின் உள்ளார்த்தம் இதுதான். “பகவானே, என் எழுத்துக்கள் தொடர்ந்து காலச்சுவட்டில் வருவதற்கு நீ அருள் புரியவேண்டும். அப்படி எழுதியவற்றைத் தொகுத்து ‘காலச்சுவடு’ பதிப்பகம் புத்தகமாக வெளியிட நீ துணை புரிய வேண்டும். இவை இரண்டைத் தவிர ஏழை எழுத்தாளன் எனக்கு வேறு என்ன வேண்டும்?”

இந்த உள்ளுணர்வு தேவிபாரதிக்கு மட்டுமல்ல, சு.ரா.வின் அடியார்கள் (எழுத்தாளர்கள்) அனைவரின் உள்ளுணர்வும் இதுதான் “அப்பனைப் பாடும் வாயால் சுப்பனைப் பாடமாட்டேன்” என்பது போல சு.ரா.வைப் புகைப்படம் எடுத்துக் கண்காட்சி வைத்ததுபோல் “இனி யாரையும் எடுக்க மாட்டேன்” என்று அறிவித்து, மற்ற எழுத்தாளர்களை ஏமாற்றிவிட்ட ‘கேமரா மேதை’ இளவேனிலின் உள்ளுணர்வும் இதுதான். இது ‘அறிவாளி’களின் திட்டமிட்ட அறியாமை.

ஒருவகையில் புகைப்படம் எடுத்த புதுவை இளவேனிலுக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த நன்றி அவர் எடுத்த படத்திற்காக அல்ல. எடுக்காமல் விட்ட படத்திற்காக.

‘ஆம்! சுந்தர ராமசாமி மலம் கழிப்பதுபோலப் படமொன்று எடுத்து கண்காட்சியில் வைத்திருந்தால் அறிவாளிகள் இப்படிக்கூட சிலாகித்து இருப்பார்கள் “என்ன ஒரு மேதமை! உறங்கும் நதியின் சலனமின்மையும், ஆழியின் தீவிரமும் பேளும்போது அந்தக் கலைஞனின் முகத்தில் எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்”

ஜெயலலிதா, ரஜினிகாந்த் இவர்கள் தங்களை விதவிதமாகப் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குக் காரணம் இருக்கிறது. அவர்களின் புகைப்படங்கள் லட்சக்கணக்கானவர்களால் விரும்பப்படுகிறது. அது அவர்களின் வியாபார அரசியல் முறைக்கு உகந்தது.

ஆனால், சுந்தர ராமசாமியின் புகைப்பட விருப்பம் சுயபோதையாக இருக்கிறது. தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்துக் காமுறுகிற மனநோயாளியைப்போல். இது பிழைப்புவாதிகளின் பந்தாவான மனநிலையைவிட ஆபாசமானதாக இருக்கிறது. ஒருவேளை சுயபோதை பிடித்த சுந்தர ராமசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட்டால் பிறகு ஜெயலலிதா தலைமையில்தான் சு.ரா. அரசை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்.

(பின்குறிப்பு: புதுவை இளவேனிலுக்கு வேண்டுகோளோடு: நீங்கள் உங்களை கவிஞன், எழுத்தாளன், மகா கலைஞன் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். இதெல்லாம் உங்களுக்குப் பெருமையாக இருக்கும். தயவு செய்து ஆட்டோ ஓட்டுநர் என்று மட்டும் சொல்லாதீர்கள். அது ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பெருமையாக இருக்காது.)

(நன்றி: புதிய கலாச்சாரம் செப்டம்பர்-2004)

 

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

8 Responses to சுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி

 1. kalyanakamala சொல்கிறார்:

  நீங்கள் ராமரிடமிருந்து பாரதியார் வரை எல்லோரும் சொல்வது தவறு என்கிறீர்கள். ராமன் பிரமணன் அல்லாதவன் . அவன் க்ஷத்ரியன்.இந்திரனைக்குற்றம் சொல்ல நீங்கள் வருவதற்கு முன்னேயே அவள் கணவன் வந்து விட்டான்அவளைக் கல்லாக ஆக்கி விட்டான்‌.. புறாணங்களை திறந்த மனதுடன் படிக்க முடிந்தால் படியுங்கள். முடியாவிட்டால் படிக்கதீர்கள். உங்களைப் படிக்கச்சொல்லி யாரேனும் வற்புறுத்துகிறார்களா?பா‌ர‌திய‌ருக்குத் தெரிந்த‌‌து கா‌சியும் காஞ்சீபுர‌மும்தான்.உங்க‌ளைப்போல்
  வேறு இடங்கள் உதிக்க வில்லை.அவ‌சியமும் இல்லை.அவர் கன்ட கனவை தன்னைப்படிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்பினார்.அவ்வளவுதான். முழுக்க முழுக்க பார்ப்பனீயத்தை எதிர்க்க வேன்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாமல் எழுதப்பட்டுள்ள்து இந்த மடல்.முதலில் ஒரு திருடனைக் கூப்பிட்டு 40வருடங்கள் காமாஷி அம்மனை பூஜை செய்யச்சொல்லுங்கள். அவன் கொலை செய்யும் அளவுக்குப் போகமட்டான்.கீழ்தரமான செயல்களைச்செய்பவன் அம்மனை பூசை செய்யமாட்டான்.உங்களை மதிரி நாலு பேர் இருந்தால் போதும் நீதிமன்றங்கள் வேன்டாம். நடுவர்கள் ஆடுமெய்ப்பவர்களை விட மோசமானவர்கள் என்று சொல்லி விடுவீர்கள்.உங்கள் கருத்தை நிலை நாட்டுவதற்காக என்ன வென்டுமானாலும் பேசுவீர்கள்.உங்களை விட ஆயிரம் மடங்கு இந்திர விஜய பட்டதை ஏற்படுத்தினவர்களும் கொடுத்தவர்களும் இதைப்பற்றியெல்லாம் யோசித்திருப்பார்கள்.
  லை. அவன் சொல்ல வந்த செய்தி வேறு.முப்ப‌து கோடி முக‌முடையாள் எனினும் மெய்ப்புறம் ஒன்றுடையாள் என்று பாடிய பரதிக்கு நீங்கள் தேசியத்தைப் பற்றியும் சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சிகள் சொல்வது பாவமென்று பாப்பாவுக்கு பாடல் பாடி புரிய வைக்க முயன்ற பாரதிக்கு நீங்கள் சாதி ஒழிப்பு பற்றியும் சொல்லி கொடுக்கும் ஆசானாக மாற‌ முயற்சிக்கிறீர்களா? உங்களுக்கு யார் புரிய வைக்க முடியும்?
  தூங்குகிற‌வ‌னை எழுப்ப‌ முடியும் தூங்குகிறவ‌ன் போல் ந‌டிப்ப‌வ‌னை யாரால் எழுப்ப‌ முடியும்?

 2. venkat சொல்கிறார்:

  kaamatchi ammanai vazhipattavan pozhapu thaan naaruche ulagam pura…barathi patri solla enna irukku…namma veetale ganja kudichuttu ippadi kavithai paesikittu, kanavu kandu anda latchanathai pagirthunga vera sinchae namma enna seyvome…puranangalai thiranda manathudan padiyungalaam!!! yaruppa adhu?? homosex, aduthavan veetu pondatiyai yeppadi lavuttalaam,pinnadi irundhu eppadi kollalaam, oru inatahiayae eppadi kuranga sitharikalaam(balachander tamilarkalai karuppu paint pusi kamicha madiri) inda kanravigalai thoranda manadoda padikarathaam. neenga kalaukunga mathi…rama..rama.. super.enna? ellarum thiranda manathudan padichaa sari.

 3. சமீபத்தில் சோவிற்கு நெல்லை கண்ணன் கடிதம் எழுதியிருந்தார் கீற்றில் படித்திருந்தேன்
  முடிஞ்சா நெல்லை கண்ணனுக்கு போன் போட்டு இனிமே எங்கள் பாராதி எங்கள் பாராதி என்று என்று பேச வேண்டாம் என்று சொல்ல சொல்லுங்க காமெடியா இருக்கு (நெல்லை கண்ணனின் மேடைப்பேச்சு எனக்கு புடிக்கும்)

  திராவிடத்தை தலையில் தூக்கி கருநாநிதிக்கும் வீரமணிக்கும் சொத்து சேர்குறாங்கள அவங்களில் பலர் பாரதியை மட்டும் விடமாட்டாங்க எங்கள் தமிழன் பாரதி எங்கள் தமிழன் பாரதி என்று தூக்கி வச்சிகிட்டு ஆடுவாங்க. நீங்க கொஞ்சம் வித்தியாசம் தான் போங்க. முடிஞ்சா எங்கள் பாரதி எங்கள் தமிழன் பாரதி என்று பேசும் முட்டாள் பயலுகளுக்கு போன் போட்டு பேசுங்க இல்லைனா போஸ்டர் அடிச்சு ஒட்டுங்க

 4. ஆமா மதிமாறன் பின்னூட்டத்திற்கு எல்லாம் பதில் அனுப்புறிங்கதானே
  இல்ல என்னபோல பொறம்போக்கு (அப்படினு சிலர் சொல்லலாம்ல – நானே முந்திகிட்டேன்)
  வேளை வெட்டியில்லாம உங்க வலைதளத்தை படிக்கிறதோ மட்டும் இல்லாம பதில வேற எழுதுறான் பாருங்க அதான் கொஞம் பாசத்தோ கேட்டேன்

 5. maamoolan சொல்கிறார்:

  மாறன்
  உங்களுடைய பல எழுத்துக்களைப்படித்துவிட்டே இதை எழுதுகிறேன்.
  நன்றாக இருக்கிறது, கருத்துக்கள். இந்த வேகத்தோடு வந்த பலர் பார்பபன ஊடுக வலைக்குள் விழுந்து புரண்ட வரலாறும் – பின்னாளில் கண்முன் வந்து பயமுறுத்துகிறது.
  விளம்பர-ஊடக வலைக்குள் சிக்காமல் தொடர்ந்து செயற்பட்டால் அடது பத்தாண்டுகளில் சிறந்த மிழ்ச் செயற்பாட்டாளர்களில் ஒருவராக உங்களை-எழுத்துக்களை அடையாளம் காட்டமுடியுமு;.
  புகழந்தும் கெடுக்கலாம் என்பதற்காக இதனை எழுதவில்லை. ஊக்கப்படுத்துவே எழுதுகிறுனே;.
  நன்றி.

 6. kalyanakamala சொல்கிறார்:

  திரு வெங்கட் அவர்களே பாரதியார் கஞ்சா குடித்தார் என்று சாடுகிற்ர்களே, நீங்கள் புகழ் பாடும் தலைவர்கள் எல்லாம் தனிப்பட்ட முறையில் நமது வாழ்க்கைக்கு முன்மாதிரிகளாக எடுத்துக்கொள்ள தகுந்தவர்களாக இருக்கிறார்களா? பெரியார், கருணானிதி ,கண்ணதாசன்,போன்றோர்களை தனிப்பட்ட சொந்த வாழ்க்கையை,பழக்க வழக்கங்களைத் தள்ளி விட்டுத்தானெ அவர்கள் கொள்கையையும் ,தமிழையும் ரசிக்கிறோம்.ஏன் பாரதிக்கு மட்டும் special treatment? தேசியத்தையும் ,தமிழையும் விட்டு விட்டு தனி மனிதர்களை விமரிசிக்கிறீர்கள்?இதுவல்ல ஈ.வே.ரா சொன்ன பகுத்தறிவு. கொஞச‌ம் முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள் எல்லாவற்றையும். இன்னும் கொஞ்ச நாள் போனால் திருவள்ளுவர் பற்றி ஏதாவது சொந்த வாழ்க்கையைப்பற்றி திடுக்கிடும் தகவல் வந்தலும் வரலாம். உடனே திருவள்ளுவரையும் விட்டு விடூவீர்களா?
  நான் பிறப்பால் பிராணர்தான். ஆனால் கருணானிதியின் தமிழை என்னால் மிகவும் ரசிக்க முடியும்.கண்ணதாசனைப் படிக்க முடியும். ஈ வே ரா வை மதிக்க முடியும். இதுதான் திற‌ந்த‌ மனது என்பது. எல்லா பகுதி மக்களிடமும் பல குறைபாடுகள் உள்ளது. அவர்கள் சொன்ன கருத்துக்கள் எந்த உள்நோக்கத்துடனோ அல்லது சொந்த ஆதாயம் கருதியோ சொல்லப்பட்டவை இல்லை.மதிமாறனைக்கூட எனக்குப்பிடிக்கும். ஏனென்றால் மனதில் பட்டதை தைரியமாக எழுதுகிறாரே? flow மிக அருமை அவர்கள் பதிப்புகளில்

 7. Thiru சொல்கிறார்:

  //kalyanakamala (02:03:34) : முதலில் ஒரு திருடனைக் கூப்பிட்டு 40வருடங்கள் காமாஷி அம்மனை பூஜை செய்யச்சொல்லுங்கள். அவன் கொலை செய்யும் அளவுக்குப் போகமட்டான்.கீழ்தரமான செயல்களைச்செய்பவன் அம்மனை பூசை செய்யமாட்டான்.//

  அதுசரி! காஞ்சி காமாட்சியை வழிபடும் ஜெயேந்திர சரஸ்வதி கொலைக் குற்றவாளி ஆனது எப்படி?

  மதிமாறன்,

  பண்பாட்டு அடித்தளத்தில் பார்ப்பனீயம் ஊறிப்போன நமது மக்களை உணர வைக்கும் தன்மையுள்ள கட்டுரைகள். தொடர்ந்து எழுதுங்கள்.

 8. Pingback: ‘காலச்சுவடின்’ சில்லரைத் தனம் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s