Monthly Archives: செப்ரெம்பர் 2007

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

. “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்? ”பனை ஏறும்தந்தை தொழிலில் இருந்து தப்பித்து தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார் “பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை அதெல்லாம் சரிபட்டு வராதுங்க ”இதுமுடி வெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர். “என்னங்க பெரியார் சொல்லிட்டா சரியா? பிரமணனும் மனுசந்தாங்க. திராவிட இயக்கம் இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது? … Continue reading

Posted in கட்டுரைகள் | 9 பின்னூட்டங்கள்

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

16.5.2005 தேதியிட்ட குமுதம் இதழில் ஜெயகாந்தனுக்கு நெல்லை கண்ணன் எழுதிய கடிதத்தை மறுத்த ஒரு கடிதம். 23.4.2005 அன்று மாலை மயிலாப்பூர் ஆர்.கே.சபாவல் ‘சமஸ்கிருத ஸேவ ஸமிதி’ சார்பாக ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டுவிழாவில், ஜெயகாந்தன் பேசி, அந்த அநாகரிகமானப் பேச்சை நான்தான் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தினேன். குமுதத்தில் ஜெயகாந்தன் பேசியதாக நெல்லை கண்ணன் குறிப்பிட்டிருக்கிற அந்த … Continue reading

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்

தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை

புரட்சிக்கு முந்தைய சோவியத்தில் ‘ஸ்னேனியெ’ என்கிற புகழ்பெற்ற பதிப்பகம் மூடப்பட்டது. மேற்கத்திய இலக்கியம், ருஷ்ய இலக்கியம், பண்பாட்டின் வரலாறு இவை பற்றியெல்லாம் நிறையப் புத்தகங்கள் கொண்டு வந்த பதிப்பகம் அது. அந்தப் பதிப்பகம் மூடப்பட்டதில் மாக்சீம் கோர்க்கிக்கு மிகுந்த மனவருத்தம். மீண்டும் அதுபோல் ஒரு பதிப்பகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கோர்க்கிக்கு. “ஸ்னேனியெ” பதிப்பகம் … Continue reading

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்

சுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி

சென்னை தெற்கு போக் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு முன்பு ஹாலிவுட் படத்தின் பிரம்மாண்டமான செட் போல் சிவாஜி கணேசனின் வீடு. அது தீப்பற்றி எரிந்தது. காரணம், மின்கசிவு. மின்கசிவிற்குக் காரணம் வீட்டில் எல்லா அறைகளும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டவையாகும். கழிவறை கூடவா என்பது தெரியவில்லை. அந்த வீட்டின் சொந்தக்காரர்களில் ஒருவரும், நடிகருமான பிரபு இது … Continue reading

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !

பிரேமானந்தா கைதானபோதும் சரி, திருவாவடுதுறை இளைய மடாதிபதி கைதானபோதும் சரி, சமீபத்தில் சதுர்வேதி கைதான போதும் சரி, மக்கள் உணர்வை அந்தக் கைதுகள் பாதித்ததில்லை.‘`என்னப்பா இது போலிசாமியார்கள் இவ்வளவு பெருத்துப் போய்ட்டாங்க’ என்ற அபிப்பிராயத்தோடு முடித்துக் கொண்டார்கள்.ஆனால் ஜெயேந்திரன் கைதானபோதுதான் மக்கள் இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடிப் போனார்கள். பொது இடங்களில் இரண்டு நபர்கள் பேசிக் … Continue reading

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்