நடிகர்கள்; வரிகொட இயக்கம் காந்தியை தாண்டியவர்கள்

காந்தியாலேயே வரிகொடா இயக்கம் நடத்த முடியவில்லை. நமது நடிகர்களோ காந்தியை தாண்டிய, காந்தியவாதிகளாக இருக்கிறார்கள்.

‘வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கென் கட்ட வேண்டும் வரி’

லெக்கின்ஸ்; பரவாயில்லையே.. தினத்தந்தி

யுவராஜின் டேப்பும் கோகுல் ராஜ் கொலையும் விஷ்ணுப்பிரிய மரணமும்

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

போலீஸ் பாதுகாப்போடு சிறப்பாக நடந்தது..

IMG_20171004_194125_1

IMG_20171004_201044
காவல் துறையினர் மட்டும் 20 க்கும் மேற்பட்டவர் 2 ‘ஜீப் ல வந்து அரங்கத்திற்கு வெளியில் நின்று பாதுகாப்பு தந்தனர். நேற்று திப்பு சுல்தான் பற்றி ‘மனித நேய மக்கள் கட்சி’ நடத்தியக் கருத்தரங்கத்திற்குத் தான் இந்த பாதுகாப்பு.

நிகழ்ச்சியை நெறிபடுத்திய தோழர் Shameem Ahamed சொன்னார் ‘எங்களின் அரங்கக் கூட்டத்திற்கு போலிஸ் வருவது இது தான் முதல்முறை’ என்று. நானே கூட்டம் நடக்கிற இடத்தை போலீஸ் ஜிப் நிற்பதை வைத்துதான் அடையாளம் கண்டேன்.

போஸ்டர் ஒட்ல.. நோட்டிஸ் போடல.. என்னோட facebook தகவல் மட்டும்தான். என் பக்கத்தை காவல்துறை அதிகாரிகள் பார்த்தார்களோ.. இல்லை இந்து அமைப்புகள் தகவல் கொடுத்தார்களோ..? எப்படியோ காவல்துறைக்கு நன்றி சொல்லித்தான் துவங்கினேன்.

கூடுவாஞ்சேரி, கொளத்தூர், ஆவடி என்று பல பகுதிகளிலிருந்து பெரியார் – டாக்டர் அம்பேத்கர் இயக்கத் தோழர்களும் வந்திருந்தனர். அனைவருக்கும் நன்றி.

10 பேர் வந்தாலே.. ரொம்ப நேரம் பேசுவோம்… இவ்வளவு பேர் வந்தா… உட்ருவோமா.. 1 மணி 50 நிமிடங்கள் பேசினேன். ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

நான் பேசிக் கொண்டிருக்கும்போது, இரண்டாம் தொழுகைக்கு அழைப்பு விடுத்து மசூதியிலிருந்து பாங்கு ஒலித்தது,
‘தோழர் மதிமாறன் பேசி முடித்தப் பிறகு தொழுகையை வைத்துக் கொள்ளலாம்’ என்று அறிவித்து கூட்டத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த தோழர்களுக்கு சிறப்பு நன்றி.

Posted in கட்டுரைகள் | 37 பின்னூட்டங்கள்

திப்பு; ரஜினி நடிக்கக் கூடாது, ஆமாம்

திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கக் கூடாது – ராம கோபாலன் .

ஆமாம். அததான் நானும் சொல்றேன்.

நாட்டுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்த மாவீரனின் வேடத்தில் ரஜினி நடிப்பது, திப்பு சுல்தானுக்குத்தான் அவமானம்.

தொடர்புக்கு : 98409 69840
12076145_884204378340573_2102988721_o (1)

‘முஸ்லீம் என்றால் தீவிரவாதி’-தமிழ் சினிமாவின் மோசடி

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

Posted in கட்டுரைகள் | 67 பின்னூட்டங்கள்

லெக்கின்ஸ்; பரவாயில்லையே..

பெண்கள் உடை உடுத்துவதில் இரண்டு முறைதான் பின் பற்றப்படுகிறது. ஒன்று முழுக்க மூடிய நிலப்பிரபுத்துவ பாணி. இன்னொன்று ‘கவர்ச்சி’யாகக் காட்ட வேண்டும் என்ற முதலாளித்துவ பாணி.
இரண்டுமே பெண்ணை ஆணுக்கான உடலாகத்தான் அங்கீகரிக்கிறதே தவிர. பெண்ணின் உணர்வை, உரிமையை ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

இந்த இரண்டு முறையில்தான் படித்த, படிக்காத வர்க்க வேறுபாடுகள் உள்ள எல்லாப் பெண்களும் உடை உடுத்துகிறார்கள்.
நிலப்பிரபுத்துவ பாணியோடு முதலாளித்துவ பாணியைக் கலந்து உடுத்த முயற்சிக்கும்போதுதான் ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த ‘மத’ ஆண் ‘பண்ணையார்’கள் கலாச்சார வேடமிட்டு பாய்கிறார்கள்.

முதலாளித்துப் பண்ணையார் பத்திரிகைகள் அதையே படமாக போட்டு கவர்ச்சியாகவும் கண்டிக்கும் பாணியிலும் ஆண்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து, விற்பனையை ஏற்றும் ஈனத்தனமான ‘சர்க்குலேஷன்’ வேலையை செய்கிறார்கள்.

தனக்கு வசதியான உடையை வீதியில் அல்ல, நான்கு சுவர்களுக்குள் உடுத்துவதற்குக்கூடப் பெண்களுக்கு அனுமதி கிடையாது. சிறுமிகளுக்குக் கூட கிடையாது.

பரவாயில்லையே, தினத்தந்தி போன்ற நிலப்பிரபுத்துவக் கூறுகள் அதிகம் கொண்ட பத்திரிகையில் இன்று, பெண்கள் லெக்கின்ஸ் அணிவதற்கு ஆதரவு தெரிவித்தும், அதை எதிர்ப்பவர்களைக் கண்டித்தும் தலையங்கம் எழுதியிருக்கிறார்கள்.

‘தேவையா உனக்கு இந்த அவமானம்?’

Posted in கட்டுரைகள் | 11 பின்னூட்டங்கள்

யுவராஜின் டேப்பும் கோகுல் ராஜ் கொலையும் விஷ்ணுப்பிரிய மரணமும்

யுவராஜின் டேப், ‘கோகுல் ராஜ் கொலை வழக்கில் காவல்துறை நேர்மையாக நடந்து கொள்கிறது’ என்பதை தான் வலியுறுத்துகிறது.

காவல் துறையின் ஆதரவுடன் தான் அந்த டேப் வெளியிடப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

பத்திரிகைகள் தான் போலிசை காப்பாற்றுகிறது.

பட்டேல் பாலிடிக்ஸ்

Posted in பதிவுகள் | 6 பின்னூட்டங்கள்

இயக்குநர்களை, நடிகர்களை வீழ்த்திய இசையமைப்பாளர்

இஸ்லாமிய இசை, நாகூர் அனிபா வை அறிமுகப் படுத்தியதும் மெல்லிசை மன்னரே. அவரின் இசை வாரிசு இசைஞானி மட்டும் தான். தாய் 8 அடி பாயந்தால் குட்டி 16 அடியல்ல 32 அடி பாய்ந்தது.

(பாட்டு வேற பாடியிருக்கேன்.. தைரியமிருந்தா பாருங்க)
நன்றி சிங்கப்பூர் தோழர்களுக்கு.. (வெளிநாட்டில் மெல்லிசை மன்னருக்கு நடந்த முதல் நினைவு நிகழ்ச்சி)
ஒளிப்பதிவு தோழர் Ashok Kumar

பெரியார்; நேற்று இன்று நாளை

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

Alif ; இஸ்லாத்திற்கு எதிரான படமல்ல, இஸ்லாமிய பெண்களுக்கு ஆதராவன படம்

Alif-10

maxresdefault
கேரளாவில் 2015 பிப்ரவரி மாதம் வெளியான மலையாளப் படத்தை நேற்று இரவு DVD யில் பார்த்தேன்.

‘முகமது நபியிடம் ஒருவர் கேட்டார், நான் வாழ்க்கையில் அதிகம் மதிக்கப்பட வேண்டியது யாரை? அதற்கு நபிகள் நாயகம் தாயை என்றார். ழூன்று முறை கேட்டபோதும் தாயை தான் என்றார். நான்காவது முறை தான் தந்தையை என்றார்’ இப்படியான பின்னணி குரலோடு துவங்கிறது படம்.

‘தலாக்’ என்கிற திருமண முறிவால் பாதிக்கப்படுகிற பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை முஸ்லிம் தாய்மார்களைக் குறித்துக் கனிவோடும், துணிவோடும் பேசுகிறது படம்.

கொள்ளுப் பாட்டி, பாட்டி, அம்மா, பேத்தி என்று நான்கு தலைமுறை பெண்களோடு அவர்களின் துயரங்களோடு நம்மையும் பங்குபெறச் செய்திருக்கிறார் இயக்குநர் MK முகமத் கோயா. கதை, திரைக்தை, வசனம் இவரே.

‘தலாக்’ என்கிற விவாக ரத்தால் பாதிக்கப்பட்ட பெண், முஸ்லீம்களுக்கான பொதுவான கூட்டத்தில் மதச் சட்டங்கள் குறித்து அறிவுரை சொல்கிறவரை இடைமறித்து, பெண் குரலாய் வெகுண்டு பேசுவதால், அந்த நான்கு இஸ்லாமியப் பெண்களும் இஸ்லாமிய ஆண்களிடம் சந்திக்கிற துயரங்களைத் துணிவோடு சொல்லியிருக்கிறார் இஸ்லாமிய ஆணான இயக்குநர்.

ஒரே மதம், ஒரே இறைவன் இருந்தும் வசதியானவர்க்கும் ஏழைக்கும் இடைவெளியில் இருக்கிற வர்க்க வேறுபாடுகளையும் காட்டியிருக்கிறார்.
தடைகளோடு தனித்து விடபட்ட பெண்களுக்கு ஆதரவாக, ஒரு கம்யுனிஸ்ட் குடும்பம் இருப்பதாகக் காட்டியிருப்பது, இயக்குநரின் மெல்லிய கம்யுனிச ஆதரவை மரியாதையுடன் அடையாளப்படுத்துகிறது.

‘தலாக்’ பெற்ற பெண்ணுக்கு அரசு வேலை கிடைக்கப் பெற்ற பின், நான்கு பெண்களுக்கும் கிடைக்கிற உறுதி, மெல்லிய புன்னகையோடு தன் பேத்தியின் எதிர்கால வாழ்க்கையை வரவேற்கிற கொள்ளுப் பாட்டி. அவர்களோடு நமக்கும் பிறக்கிறது நம்பிக்கை.

வேலைக்குப் போகிற தன் மகளுக்குச் சோறுடன் துவையல் அரைத்து ஊறுகாயுடன் டிபன் பாக்சில் தருகிற தாயின் அன்பில் ஒளிர்கிறது வாழ்க்கை. அதுவரை, கடும் உழைப்பால், குடும்பத்தை மட்டும் அந்தத் தாய் தாங்கவில்லை. இந்தப் படத்தையும் அவர் தான் தாங்கிப் பிடிக்கிறார்.

இறுதியில், மகளைப் பள்ளிக்கு அழைத்துக் கொண்டு, வேலைக்குச் செல்கிறார் அந்தப் பெண். பின்னணியில் கருணையும், நம்பிக்கையையும், அன்பையும் வலியுறுத்தி ஒலிக்கிறது பாடல்.

இவர்கள் இருவருக்கும் எதிரில் பர்தா அணிந்த பெண்கள் கூட்டமாக வருகிறார்கள். புடவையும், பள்ளிச்சீருடையும் அணிந்த இவர்கள், அந்தக்கூட்டத்திற்குள் நுழைந்து எதிர்திசையில் பயணிப்பதுபோல் வருகிற காட்சி தற்செயலானதாக இருந்தாலும், அது கலகத்தின், நம்பிக்கையின் குறியீடாகவே இருக்கிறது.

சினிமா மொழியின் இலக்கணம் Battleship potemkin

NH 10

சத்தியஜித்ரே vs மிருணாள் சென்

Posted in கட்டுரைகள் | 38 பின்னூட்டங்கள்