வே.மதிமாறன்

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்
இளையராஜாவின் இறைநம்பிக்கை, இந்துமத பற்று ஒரு பகுத்தறிவாளன் என்கிற முறையில் உங்களுக்கு தவறாகவோ, ஆபத்தானதாகவோ தெரியவில்லையா?

-தமிழ்ப்பித்தன்

பெரியாருக்கு எதிராகவும்,  மிகத் தீவிரமாக இயங்கினார் முத்துராமலிங்கத் தேவர். பெரியாரை மிகக் கேவலமான வார்த்தைகளால் ஏசி இருக்கிறார் என்று தெரிந்தும்,  ஜாதி உணர்வைத் தவிர வேறு எந்தக் காரணங்களுக்கும் அல்லாமல், அவர் மீது பாசமாக இருக்கும் ‘தேவர் பெரியாரிஸ்ட்’டின் ‘பார்ப்பனரல்லாத’ உணர்வு,

பாமக போன்ற ஜாதிக்கட்சி என்ன தவறு செய்தாலும்,  அதை விமர்சிக்க மறுக்கிற, ஏதோ ஒரு வகையில் பாமக மீது பாசமாக இருக்கிற வன்னிய பெரியாரிஸ்ட்டுகளின் ‘வன்னியப் பகுத்தறிவு’,

‘அண்ணாதுரை முதலியாரின் மறைவுக்குப் பிறகு முதல்வராகும் தகுதி நெடுஞ்செழியன் முதலியாருக்கும், அன்பழகன் முதலியாருக்கும்தான் இருந்தது.  அதை கருணாநிதி தட்டிப் பறித்துவிட்டார்’ என்கிற பொய்யான காரணத்தை உண்மையாக நம்பி, அதை உள் அரசியலாக வைத்து, வெளியில் ‘கருணாநிதி தமிழன விரோதி, திராவிட இயக்க கொள்கையையே குழிதோண்டி புதைத்துவிட்டார்’ என்று முற்போக்காக குற்றம் சாட்டி, திராவிட இயக்க எதிர்ப்பாளர்களான பழ. நெடுமாறனையும், ராமதாஸையும் – கருணாநிதி எதி்ர்ப்பிற்காகவே ஆதரிக்கும், முதலியார் பெரியாரிஸ்ட்டுகளின்  திராவிட இயக்க ‘பாசம்’,

தலித் அரசியல் என்று பொதுவாக பேசினாலும், தன் ஜாதித் தலைவரை மட்டும் ஆதரிக்கிற,  சில நேரங்களில் தலித் விரோத ஆதிக்க ஜாதி தலைவர்களை ஆதரித்தாலும்கூட, உட்ப்பிரிவு தலித் ஜாதி தலைவர்களை ஒப்புக்குக்கூடஆதரிக்க விரும்பாத, தலித் ‘ஒற்றுமை’ அரசியல் பேசுகிற தலித் ‘அறிவுஜீவி’,

மார்க்சிய இயக்கத்தில்கூட தன் ஜாதிக்காரன் இருக்கிறானா எனறு தேடிப் பார்த்து ‘இயங்கியல்’ அடிப்படையில் தொடர்பு வைத்துக் கொள்கிற,  பார்ப்பன மார்க்சிஸ்டின் ‘வர்க்க’ உணர்வு,

நவீன அறிவியல் வளர்ச்சியை அவ்வப்போது, ‘அப்டேட்’ செய்து கொண்டு ஒரு விஞ்ஞானியைப்போல் பேசி,  தன்னை இறை மறுப்பாளராக, பகுத்தறிவாளராக அறிமுகப்படுத்திக்கொள்ளும் வைரமுத்து போன்ற பல திரைமுற்போக்காளர்களின் சுயஜாதி பாசம்,

‘தமிழ்மண், தமிழனின் மண்’ என்று நீட்டி முழங்கிவிட்டு,  தேவர் ஜெயந்தியின்போது , ‘போற்றிப் பாடடிப் பெண்ணே, தேவர் காலடி மண்ணே’ எனறு சுருதி கூட்டுகிற சில தமிழ்த்தேசியவாதிகள்,

பகுத்தறிவாளர்களில் யார் ‘நம்மாளு’? என்று பகுத்து அறிகிற இந்த முற்போக்காளர்களின் சுயஜாதி உணர்வு,  பார்ப்பன ஜாதியைத் தவிர மற்ற ஆதிக்க ஜாதிகளை ஆதரிக்கிற அல்லது விமர்சிக்க மறுக்கிற தன்மை,  அறியாமையால் ஆனதல்ல. மிகச் சரியாக திட்டமிடப்பட்டது. அது அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் லாபமாக இருக்கிறது. ஓட்டாகவோ, பணமாகவோ, அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களின் செல்வாக்கை பெறுவதற்கான வழியாகவோ இருக்கிறது.  அல்லது அந்த ஜாதியை விமர்சித்தால், தன் கட்சியில் இருக்கிற ‘அந்த’ஜாதிமுற்போக்காளர்களின் மனம் புண்பட்டு, அவர் வேறுகட்சிக்கோ, அமைப்பிற்கோ போய் விடக் கூடாது என்கிற முன் எச்சரிக்கை உணர்வும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால் இசைஞானி இளையராஜாவின் இந்துமத இறைநம்பிக்கை இதுபோல் ஆனதல்ல. ஒரு எளிய பக்தனுக்கு இருப்பதுபோல், முழுமையான அறியாமையால் ஆனது.

இந்துமதம் என்பதே ஜாதிதான்.  இறைநம்பிக்கையைவிட ஜாதி நம்பிக்கைதான் ஆபத்தானது.  அதுஒன்றுதான் இந்து மதத்தை பாதுகாப்பது.  ‘ஜாதியை பாதுகாக்கிறது’ என்பதற்காகத்தான் தந்தை பெரியார் இந்துமத்தையே எதிர்த்தார். ஆனால் ‘நம்மாளுகளில்’ பலர் இந்து மதத்தையும் கடவுளையும் எதிர்த்துவிட்டு ஜாதியை பாதுக்காக்கிறார்கள்.

ஆக, இந்த ‘பகுத்தறிவாளர்களின்’ சுயஜாதி உணர்வைவிட, பக்திமானான சுயஜாதி உணர்வற்ற இசைஞானி இளையராஜாவின் இறைஉணர்வு ஆபத்தானதல்ல. அறியாமையால் ஆனது. அப்பாவித்தனமானது.

‘முற்போக்காளர்’களின் ஜாதி அபிமானத்தைவிட, ‘பிற்போக்காளர்’களின் ஜாதி உணர்வற்ற இறைஉணர்வு முற்போக்கானது.

தொடர்புடைய பதிவுகள்:

இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!

இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்

பிடரி மயிர் பிடித்து உலுக்கிய தலைவன்
-கோவி.லெனின்

‘நக்கீரன்’ இதழின் தலைமைத் துணை ஆசிரியர்

எழுத்தாளார், ஆவணப்பட இயக்குநர்.

வரலாறு உண்மையானதாக இருந்தாலும் அதனை அறிமுகப்படுத்தும் விதத்திலும் அது பரப்புரை செய்யப்படும் விதத்திலும்தான் தாக்கத்தை உருவாக்கும். வரலாற்று நாயகர்களும் அப்படித்தான். இந்தியாவை காந்தி நாடு என உலகத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அதனால்தான் நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா  என ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் குரலாக ஒலிக்கும் உலகளாவிய தலைவர்கள், இந்தியா என்றதும் மகாத்மா காந்தி பற்றிய பெருமைகளை எடுத்துச் சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள்.

காந்தியும் காந்தியமும் சுதந்திர இந்தியாவை உருவாக்குவதில் வகித்த பங்கு முக்கியமானதெனினும், காந்தியைத் தாண்டிய தேவை இந்தியாவில் இருந்தது. இருக்கிறது. இந்த உண்மை வரலாற்றையும், அந்த வரலாற்றில் நிகழ்ந்த போராட்டங்களையும், அவற்றை நிகழ்த்திய தலைவர்களையும் எடுத்துச் சொல்வதே இங்கு ஒரு போராட்டமாக இருக்கிறது.

கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் சில தலைவர்களின் வரலாற்றை எடுத்துச் சொல்வது பாதுகாப்பானதாக இருக்கிறது. ஒரே கொள்கைப் பாதை என்ற போதும், சில தலைவர்களைப் பற்றிப் பேசாமல் இருப்பதே பாதுகாப்பாளதாக இருக்கிறது. இத்தகைய பாதுகாப்பைவிடவும் உண்மை வரலாற்றைச் சொல்ல வேண்டிய சமுதாயக் கடமை படைப்பாளிகளுக்கு இருக்கிறது.

இதனை இலக்காகக் கொண்ட செயல்பாடுகளில் ஒன்றுதான்,தோழர் வே.மதிமாறனின் ‘நான் யாருக்கும் அடிமையில்லை- எனக்கடிமை யாருமில்லை’ என்கிற நூல். அண்ணல் அம்பேத்கரை தலித் மக்களின் தலைவர் என்றளவில் மட்டுமே நிலைநிறுத்த முயற்சிக்கும் இந்துத்வா சக்திகளின் மனநிலையில் செயல்படும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சில முற்போக்குவாதிகளுக்கும் அம்பேத்கரை இந்தியச் சமுதாயத்தின் சமூக நீதிப் போராளியாக அறிமுகப்படுத்தும் நூலாக இது அமைந்துள்ளது.

தலித் அல்லாத மக்களுக்கு அம்பேத்கரை சரியான முறையில் அறிமுகப்படுத்தும் முயற்சியை சிரத்தையுடன் மேற்கொண்டிருக்கிறார் மதிமாறன். தேவையைப் பொறுத்தே வெளிப்பாடு அமைகிறது. வலைப்பதிவில் கட்டுரையாக வெளியிடப்பட்டு, தற்போது புத்தகமாகியிருக்கும் இதற்கானத் தேவை என்ன என்பதை நூலாசிரியரே தனது முன்னுரையில் விளக்கியிருக்கிறார்.

“திட்டமிட்டுதிரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்ட சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லுர்ரியில் நடந்த சண்டையை, தொலைக்காட்சிகளில் பார்த்தேன்.  …. …. … ஒரு செய்தி உறுதியாகத் தெரிந்தது. அது டாக்டர் அம்பேத்கர் என்கிற பெயர் ஜாதி இந்துக்களுக்குஆத்திரமூட்டுகிற, எரிச்சலுர்ட்டுகிற பெயராக இருக்கிறது என்பதே! ஆதிக்க ஜாதிகளுக்கு எதிரான, ஜாதி வெறிக்கு எதிரான குறியீடாக அம்பேத்கர் பெயர் இருக்கிறது. டாக்டர் அம்பேத்கர் பெயரை-அவர் உருவத்தைப் பிற்படுத்தப்பட்டவர்களிடமும் உயர்ஜாதிக்காரர்களிடமும் கொண்டுபோய் சேர்ப்பது, ஜாதிக்கு எதிராகத் தீவிரமாக இயங்குவது போன்றதாகும் என்ற எண்ணத்தையும் இதுவே முற்போக்காளர்களின் முதன்மையான கடமை என்ற சிந்தனையையும் சட்டக் கல்லுர்ரி சண்டை எனக்குக் கற்றுத் தந்தது ” என்கிறார் .   அந்த எண்ணத்தை அவர் எந்தளவு நிறைவேற்றியுள்ளார் என்பதை புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது புரிந்துகொள்ள முடிகிறது.

அம்பேத்கர், தலித் மக்களின் தலைவரில்லையா? அவர்களின் உரிமைக்காகப் போராடி ய தலைவர்தான்.  அவரை தலித் அல்லாத சமூகத்தினரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியதன் அவசியமென்ன? அண்ணல் அம்பேத்கர், சமூகரீதியாகப் பின்தங்கியிருக்கிற அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர். அதனால்தான் அவரை அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

“தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகளைக் கண்டிக்கும்போது, பிற்படுத்தப்பட்ட ஜாதியினைக் கண்டிக்கிற டாக்டர் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களின்  பிரச்சினைகளுக்கு முழுக்காரணம் என்று இந்து மதத்தையும் பார்ப்பனர்களையுமேதான் குற்றம் சுமத்துகிறார்” என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டு, அம்பேத்கரை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் மதிமாறன்.

சாதிப் படிநிலைகளின் அடிப்படையில், தலித் மக்களைவிட ஒரு படி உயர்ந்ததாகச் சொல்லப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர்தான், தலித் மக்களை நேரடியாகத் தாக்குபவர்களாகவும், அவர்கள் மீது வன்கொடுமை செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை திண்ணியம், உத்தபுரம் உள்ளிட்ட அண்மைக்கால சாட்சியங்கள்வரை காண முடிகிறது. இத்தகைய செயல்களுக்காக பிற்படுத்தப்பட்ட ஜாதியினரைக் கண்டிக்கிற அம்பேத்கர், இந்த சாதிப்படிநிலையின் மூலம் எது என்கிறபோது இந்து மதம் என்கிற பார்ப்பன மதம் என்பதையும் அது கற்பிக்கும் கடவுளர்கள், வேதங்கள், வருணாசிரமம் ஆகியவையுமே என்பதை சம்மட்டி கொண்டு அடித்து நொறுக்குகிறார்.

கோவி. லெனின்

இதோ அம்பேத்கரின்  பதிவிலிருந்தே இதனைப் பார்ப்போம். “சூத்திரர்களைத் தவிர இதர மூன்று பிரிவினரை இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ளது. இத்தகைய இந்து மக்கள் இருந்து வருவது குறித்து எந்த அளவுக்கு அக்கறை காட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு அக்கறை காட்டப்படவில்லை. மேலே குறிப்பிட்ட மூன்று சமூகப் பிரிவினர் வருமாறு:

குற்றப்பரம்பரையினர், இவர்களது எண்ணிக்கை சுமார் 2 கோடி சொச்சம். 2. ஆதிவாசிகள், இவர்களது எண்ணிக்கை ஏறத்தாழ 1.5 கோடி. 3. தீண்டப்படாதவர்கள், இவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 கோடி -என அன்றைய கணக்கை அம்பேத்கர் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிடும் தோழர் மதிமாறன், “தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பேச வந்த டாக்டர் அம்பேத்கர் சமூகரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிற குற்றப்பரம்பரையினருக்காகவும் சேர்த்தேதான் குரல் கொடுக்கிறார். இந்த மனிதநேயரை எதிர்ப்பதற்குத்தானா இத்தனை ஆவேசம்?” என கேள்வி எழுப்புகிறார்.

இந்தியாவில் உருவாகிய சாதிப்படிநிலையின் ஆணிவேர் இந்துமதம் என்கிற பார்ப்பனியமே என்ற முடிவில் அம்பேத்கருக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்பதை அவருடைய எழுத்தும் பேச்சும் அழுத்தமாகவே பதிவு செய்துள்ளது. தங்கள் வாழ்க்கை எந்தப் படிக்கட்டு வழியாகவும் கீழே இறங்கிவிடக்கூடாது என்ற கவனத்துடன் பார்ப்பனியம் உருவாக்கிய சாதிகளால் உழைக்கும் சமுதாயத்தினர் பிளவுபடுத்தப்பட்டு, தனக்கு கீழ்ப்படிநிலையில் உள்ளதாகக் கருதப்படுவோர் மீது ஆதிக்கம் செலுத்துவது இன்றும் நீடிக்கிறது. இந்த  ஆதிக்கமும் மோதல்களும் இல்லாத நிலை உருவாக வேண்டுமென்றால் இந்து மதத்தின் மீதும் அது வலியுறுத்தும் வர்ணாசிரமம் மீதும் சித்தாந்த ரீதியான தாக்குதலை தயவுதாட்சண்யமின்றித் தொடரவேண்டும்.இத்தகைய கொள்கைப் பார்வையில், அம்பேத்கரும் பெரியாரும் ஒரே  கண்ணோட்டத்துடன் இருப்பதைக் காண முடிகிறது.

“கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியருடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். இராதாவோ ஏற்கனவே மணமானவள். கிருஷ்ணனோ முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் வாழ்க்கை நடத்துகிறான்.   ருக்மணியைத் தொடர்ந்து பெரும் மந்தையே கிருஷ்ணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்ணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை  பதினாறாயிரத்து ஒரு நுர்ற்றெட்டு பேர்கள். அவனுடைய குழந்தைகளின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர்கள்”

“ராமன் அளவுக்கதிகமாகக் குடிக்கும் பழக்கத்தை க் கொண்டிருந்தான். அப்படிக் குடித்துவிட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்துகொள்ளச் செய்தான் என வால்மீகி குறிப்பிடுகிறார். அழகிகளின் மத்தியில் ராமன் குடித்துக் கூத்தாடி கலந்து மகிழ்ந்து இன்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் ராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர்-இவை பெரியார் எழுதியவையல்ல. அம்பேத்கர் எழுதியவை.

புராண புரட்டுகளையும், அதிலுள்ள ஆபாசங்களையும் பெரியாருக்கு சற்றும் குறைவில்லாத விதத்தில் கேள்வி எழுப்பிச் சாடுகிறார் அம்பேத்கர். அவரது கேள்விகள், இந்து மதத்தையும் சனாதனத்தையும் பிடரி மயிர் பிடித்து உலுக்குகிறது. இந்துக்கள் என்றாலும் நீங்கள் சூத்திரர்களே என்று ஒடுக்கிவைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் சுயமரியாதைக்  குரலாக, இந்துத்வத் தத்துவங்களோடு நேருக்கு நேரான யுத்தத்தை நடத்தியிருக்கிறார் அம்பேத்கர்.

இந்தக் குரலுக்காக இந்து மதத்தைவிட்டு வெளியேறாமல் இருப்பதே தனக்கு சௌகர்யமாக இருக்கிறது என்றவர் பெரியார்.  இந்து மதத்தை விட்டு வெளியேறி பவுத்த மதத்தில் இணைந்தவர் அம்பேத்கர். பவுத்தத்தின் மறுபிறவிக் கொள்கை உள்பட அனைத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டார். தீண்டாமைக்கு எதிராக பவுத்தத்திற்கு மாறுவது என்பது அவரது நிலைப்பாடு. அதுகுறித்த பார்வையை அவர் வெளிப்படுத்தும்போது, “ரஷ்யர்கள் தங்களுடைய பொதுவுடைமை பற்றிப் பெருமைப்படுகிறார்கள். ஆனால் புத்தர், சர்வாதிகாரம் இல்லாமலேயே பிக்கு சங்கத்தில் பொதுவுடைமையை நிறுவினார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்” என்று எழுதியிருக்கிறார்.

இத்தகைய கருத்துகளால் அம்பேத்கரை பொதுவுடைமைவாதிகளுக்கு எதிரானவராக நிலை நிறுத்த முயற்சிக்கும் சில முற்போக்கு சிந்தனையாளர்களையும், அம்பேக்ரை இஸ்லாமியர்களுக்கு எதிரானவராகக் கட்டமைக்கப் முயற்சிப்போரையும் சாடும் நூலாசிரியர், இந்துத்வா மேலாண்மைக்கும் ஜாதி  வெறி பிடித்த இந்துக்களுக்கும் எதிராகத்தான் அம்பேத்கரின் அத்தனை செயல்பாடுகளும் இருந்தன என்பதை ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறார்.  இந்துத்வா மேலாண்மை என்பது பார்ப்பனியம் பெற்ற பிள்ளை என்றபோதும், அங்கே பார்ப்பன பெண்களுக்கான உரிமைகளும் மற்ற சமுதாயத்துப் பெண்களின் உரிமைகள் போலவே மறுக்கப்பட்டே வந்தன.

இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய மாமேதை  அண்ணல் அம்பேத்கர், அதில் பெண்களின் உரிமைகளுக்காக கொண்ட வந்த சட்டங்கள் அனைத்தும் முதலில் பயன் தந்தது பார்ப்பன சமுதாயத்துப் பெண்களுக்குத்தான் என்பது வரலாற்று உண்மை.

முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவதாக திருமணம் செய்துகொள்வதைத் தடுக்கும் ஒரு தார மணம், விவாகரத்து பெறுகின்ற உரிமை, கணவனை இழந்தவர்களோ மணவிலக்கு பெற்றவர்களோ மறுமணம் செய்துகொள்ளும் உரிமை, விவாகரத்து பெற்றவர்களுக்கான ஜீவனாம்சம், குடும்பச் சொத்தில் பெண்களுக்கான உரிமை என இந்தியப் பெண்களுக்காக அம்பேத்கர் உருவாக்கிய சட்டங்கள் பல உள்ளன.  பெண்களை ஒடுக்குவதை

மனரீதியாகவும் மரபுவழியாகவும் இன்றும் கடைப்பிடிக்கும் இந்திய சமுதாயத்தில், 60 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய புரட்சிகரமான சட்டங்களைக் கொண்டு வர அண்ணல் அம்பேத்கர் என்ன பாடு பட்டிருக்க வேண்டும் எனக் கேட்கும் மதிமாறன்,  அன்று அரசியல் சாசன உருவாக்கக் குழுவில் இடம்பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எல். அனந்தசயனம் அய்யங்கார் போன்ற பார்ப்பனர்களை எதிர்த்துதான் பார்ப்பன பெண்களுக்கும் நலன் பயக்கும் இந்தச் சட்டங்களை அம்பேத்கர் உருவாக்கினார் என்பதை அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.

அன்றைய அல்லாடிகளிலிருந்து இன்றைய ஜெயேந்திரர்கள் வரை பார்ப்பன சமுதாயத்து பெண்கள் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களுக்கு எதிராக கருத்தாலும் கரத்தாலும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை மதிமாறன் பதிவுசெய்வதோடு, பார்ப்பனப் பெண்கள் தங்கள் வீடுகளில் விரும்பி மாட்டிவைக்க வேண்டிய படம், அண்ணல் அம்பேத்கர் படமும் தந்தை பெரியார் படமும்தான். இவர்கள் இருவரால்தான் அவர்கள் இன்று சமூகத்தில் மரியாதையான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்கிறார். அவர்களது வீடுகள் இந்த இருவரின் படங்களை ஏற்றுக்கொள்கின்றனவோஇல்லையோ, இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களுக்கான சட்டங்களுக்கும் பாடுபட்டவர்கள் இந்த இருவரும்தான் என்பதை பார்ப்பன பெண்களின் மனசாட்சி ஏற்றுக்கொள்ளும்.

இந்தப் புத்தகத்தின் நோக்கமும் அதுதான். ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக பெண்களுக்காகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் போராடிய போராளியைப் புரிந்துகொள்ளுங்கள் தலித் அல்லாதவர்களே… என்பதுதான் மதிமாறனின் குரல்.

அண்ணல் அம்பேத்கரை ஜாதி ஆதிக்கத்திற்கு எதிரான சக்திகள் அனைத்தும் உயர்த்திப்பிடிக்கும்விதமாக அவரது உருவம் பொறித்த டி-சர்ட்டுகளை அணிய வேண்டும் என்ற திட்டமும் இந்தப் புத்தகத்தின் மூலம் முன்வைக்கப்படுகிறது. உருவங்கள் வாயிலாக ஒன்றை மனதில் நிறுத்துவது இந்திய மரபு மட்டுமன்று. உலகளாவியதாகவும் அது இருக்கிறது.

உருவ வழிபாட்டுக்கு எதிரான புத்தனுக்கு அதுதான் நேர்ந்தது. டி-சர்ட் திட்டம் திட்டம் முன்மொழியப்படுகிற அதே நேரத்தில், அம்பேத்கரை தலித் அல்லாதவர்கள் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை முன்னெடுத்திருக்கும் இப்புத்தகத்தை ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிடுவது இந்திய அளவில் உள்ள தலித் அல்லாதோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நன்றி ‘யுகமாயினி’ மாதஇதழ்

‘நான் யாருக்கும் அடிமையில்லை - எனக்கடிமை யாருமில்லை’

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்

எண்.15, எழுத்துக்காரன் தெரு

திருவொற்றியூர்

சென்னை-600 019.

பேச: 9444 337384

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு
பெரியார், அம்பேத்கர் பற்றி  அதிகம் எழுதுகிற, பேசுகிற நீங்கள்,  சமூகநீதியின் பின்னணியில், பேராண்மை திரைப்படத்தில் ஆதிக்கசாதியின் சாதி திமிரை அம்பலப்படுத்தி பல இடங்களில் வசனம் இடம் பெற்றது. அந்த வசனங்களைப் பாராட்டி ஒரு வார்த்தைக்கூட நீங்கள் எழுதவில்லை. அந்த வசனங்களை நீக்கிய சென்சார் போர்டின் மோசமான நடவடிக்கைப் பற்றியும் ஒரு வார்த்தைக்கூட கண்டிக்கவில்லை?

-ரவி

‘பேராண்மை’ திரைப்படத்தில் ஒரு இடத்தில் கூட ஆதிக்கஜாதியை விமர்சித்து ஒரு வரிகூட வசனம இடம் பெறவில்லை. மாறாக, தாழ்த்தப்பட்ட அல்லது மலைவாழ் மக்களை இழிவாக, மிக மோசமாக பேசிய வசனங்கள்தான் இடம் பெற்றன.

‘ஆதிக்க ஜாதியின் மனநிலையை காட்டுவதற்காக,  எதிர்நிலையில் இருந்து  வசனம் எழுதப்பட்டிருக்கிறது.’ இது மிக தந்திரமான குறியீடு. இப்படி இருப்பதால், ஆதிக்க ஜாதிகளின் ஜாதி வெறியை கண்டித்து வசனம் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. அதனால்தான், மலைவாழ் மக்களை அவ்வளவு இழிவாக ஜாதியை குறிப்பிட்டு பேசியபோதும், எந்த கதாபாத்திரமும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘பரம்பரை பரம்பரையா உன் ஜாதியோட புத்தியே அதுதானடா. ஆதிக்க ஜாதிவெறி நாயே’ என்று அந்த அதிகாரியை கண்டித்து வசனம் பேசவில்லை.

‘நடைமுறையில், ஒரு உயர்அதிகாரியை, அப்படி முகத்திற்கு நேராக எதிர்த்துப் பேசுவது எப்படி முடியும்? அதுவா யதார்த்தம்?’ என்று அறிவாளிகள் கேள்வி கேட்கலாம்.

ஒரு உயர் அதிகாரி தன் குலதெய்வத்தை அவமானப்படுத்திவிட்டார் என்பதற்காக, கால் ஊனமுற்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர், ஆத்திரம் கொண்டு உயர்அதிகாரியை அடிப்பது போல் காட்சி வைப்பது யதார்த்தமா? அப்படி ஒரு காட்சியை வைக்க முடிந்தபோது, ஆதிக்கஜாதியை எதிர்த்து ஒருவரி வசனம் கூட வைக்க முடியவில்லை என்றால், அது யதார்த்ததிற்காத்தான் தவிர்க்கப்பட்டிருக்கிறதா?

அப்படி எதிர்த்து பேசப்படுகிற வசனம் சென்சார் செய்தாலும் பரவாயில்லை. வைத்துப் பார்ப்போம் என்று  முயற்சிக்ககூட இல்லை. படத்தில்  மலைவாழ் மக்கள் அதிகாரியை பார்த்து பேசுகிற இடங்களில் சென்சாரால் நீக்கப்பட்டு, வெறும் வாயசைப்பான காட்சி ஒரு இடத்தில்கூட  இடம் பெறவில்லை. ஆதிக்க ஜாதி மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது வன்முறை நிகழ்த்துகிற இடைநிலை ஜாதிகளின் தலித் விரோதத்தை, நேரடியான வார்த்தைகளால் அல்லது ஓரே வார்த்தையால் ஒப்புக்கு கண்டிப்பதைக்கூட தந்திரமாக தவிர்த்திருக்கிறது படம். (பிற்படுத்தப்பட்டவர்கள் பெருமளவில் படம் பார்க்க வேண்டாமா?)

அதன்பொருட்டேதான், தாழ்த்தப்பட்ட மக்களை மிகக் கேவலமாக நினைக்கிற, அண்ணல் அம்பேத்கரை பற்றி அவதூறாக எழுதிய,  அண்ணல் அம்பேத்கரை திட்டமிட்டு புறக்கணிக்கிற, பார்ப்பனர்கள் உட்பட்ட ஆதிக்க ஜாதி வெறியர்களும் இப்படத்தைப் பாராட்டுகிறார்கள்.

இடஒதுக்கீடு, சமூகநீதி என்று  (தன்ஜாதிக்கான கோரிக்கைகளை மட்டும் உள்ளடக்கி) ஆதி்க்க ஜாதிகளுக்கு எதிரானவர்களைப்போல், காட்டிக்கொள்ளும் ‘முற்போக்கானவர்களும்’, தன் ஜாதியை சேர்ந்த ஜாதிவெறியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தும் போது, அதை கண்டும் காணாமல், அதைக் கண்டித்து பேசுவதை தவிர்ப்பதற்காகவே ‘சுற்றுப்புற சூழல் மாசு, இயற்கை வேளாண்மை, அந்நிய விதை, கத்திரிக்காய், வெண்டைக்காய், அப்புறம் தமிழன உணர்வு’ என்று திட்டமிட்டு திசைமாற்றி பேசுகிறவர்கள் கூட இந்தப்படத்தின் சமூகநிதி வசனங்களுக்காக சிலிர்த்துப் போகிறார்கள்.

‘சரஸ்வதி சபதம்’ என்ற திரைப்படத்தில் சிவாஜி, சவுகார்ஜானகியைப் பார்த்து, அப்பாவியாக அய்ந்து விரல்களையும் மடக்கி செய்கையால், ‘குத்திப்புடுவேன்’ என்பார். உடன் இருக்கும் புலவர்கள் அல்லது அறிவாளிகள், ”ஆஹா, என்ன அடக்கம்! என்ன அறிவு! ஐம்புலன்களும் எனக்குள் அடக்கம் என்கிறார் இந்த மகான்” என்று அதற்கு அறிவு சார்ந்த விளக்கம் கொடுப்பார்கள். அதுபோல் நம்முடைய சமூகநீதி எழுத்தாளர்கள், மூலஆசிரியர் நினைக்காததை உரைஆசிரியர் சொல்வதுபோல், இயக்குநர் ஜனநாதன் நினைக்காததை எல்லாம் இவர்கள் புதிது புதிதாக யோசித்து தங்களை சிறந்த ஆய்வாளர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

‘இந்தப் படம், ஆதிக்கஜாதி உணர்வாளன் அப்படி ஜாதிவெறியோடுதான் தாழ்த்தப்பட்ட மக்களை பேசுவான், என்பதை பதிவு செய்கிறது’ என்று அறிவாளிகள் சொல்வது உண்மைதான். ‘அப்படி இழிவாக பேசுகிற ஒரு ஜாதிவெறியனுக்கு எதிராக தாழ்த்தப்பட்டவர்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருந்து, தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்வார்கள்’ என்கிற மோசமான கருத்தையும் தன்னையறியாமல் பதிவு செய்கிறது, என்கிற உண்மையையும் அறிவாளிகள் ஒத்துக் கொள்ளவேண்டும்.

சமூகநீதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இவைகளுக்கு ஆதரவாக வருகிற மேலோட்டமான சில வசனங்கள், அந்த அரசியல் பற்றி ஆர்வம் கொண்ட சிலரை மட்டும்தான் ஈர்க்கும். ஆனால், இதுபோல் எந்த அரசியல் நிலைபாடும் இல்லாமல், சினிமா மேல் உள்ள ஆர்வத்தில், சுவாரஸ்யத்திற்காக படம் பார்க்கும் பெருவாரியான மக்களின் மனதில் இந்தப் படம் தோற்றும்விக்கும் ஒட்டு மொத்த உணர்வு, மணிரத்தினத்தின் ‘ரோஜா’ படம் தோற்றுவித்த செயற்கையான ‘தேசபக்தி’ உணர்வுதான் என்பது ஆழ்ந்து பார்த்தால் அல்ல, மேலோட்டமாக பார்த்தாலே தெரியும்.

என்னைப் பொறுத்தவரை இந்தப்படத்தில் சென்சார் போர்டு சிறப்பாக செயல்பட்டதாகவே உணர்கிறேன். இன்னும் சிறப்பாக செயல்பட்டு, மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பேசுகிற வசனங்களை முற்றிலுமாக நீக்கியிருக்கலாம்.

தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வந்த ரஷ்ய படத்தை, கொஞ்சமும் பொருத்தமில்லாத இந்திய சூழலுக்கு பொருத்தி எடுத்ததே இந்தப்படத்தின் அடிப்படையான, முதன்மையான தவறு.

‘ஆதிக்க ஜாதிக்கரர்களின் செத்த மாட்டை அப்புறப்படுத்தக்கூடாது, அவர்களின் வீட்டுச் சாவுக்கு, திருவிழா போன்றவைகளுக்கு பறை அடிக்கக் கூடாது’ என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, ஆதிக்க ஜாதிவெறியர்களுக்கு எதிராகப் போராடி ஆதிக்க ஜாதிக்காரர்களால் கொலை செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனின் போர்குணமிக்க வாழ்க்கையை, கொஞ்சம் மாற்றி, இடஒதுக்கீட்டில் படித்து அதிகாரியான ஒரு இளைஞன், தன் உயிரை பணயம் வைத்து ஆதிக்கஜாதி்க்காரர்களுக்கு ஆதரவாக பங்காளி தகராறில் பாதிக்கப்பட்டு, நின்றுபோன  ஊர்கோயில் திருவிழாவை பல சதிகளை முறியடித்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கிறார்’ என்று படம் எடுப்பது எவ்வளவு தவறானதோ, அதுபோல்தான் இந்தப் படத்தை பொறுத்தமற்ற இந்தியதேசிய சூழலில் பொறுத்தி படம் எடுத்ததும்.

அதனால்தான் ‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’ என்று இந்தப் படம் பற்றிய முந்தைய விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

‘பேராண்மை’ பற்றிய விமர்சனம் எழுதுபவர்கள், A zori zdes tikhie என்கிற ரஷ்ய படத்தைப் பார்த்திருந்தால் நல்லது. அந்தப் படத்தை குறிப்பிட்டு எழுதுபவர்கள் தலைவர் ஸ்டாலினைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிட்டு எழுதவேண்டும். அப்படி அவர் குறித்து எழுத மறுப்பவர்கள், ஸ்டாலின் எதிர்ப்பு மனோபாவம் கொண்ட பின்நவீனத்துவவாதிகளாகவோ, கம்யூனிச விரோதிகளாகவோத்தான் இருப்பார்கள்.

நாஜிகளை எதிர்த்து, தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அந்த வீரம் நிறைந்த போர் இல்லை என்றால், இன்று உலகில் ஜனநாயகமே இருந்திருக்காது. ‘A zori zdes tikhie’ என்கிற ரஷ்ய படமும் உருவாகி இருக்காது. அப்புறம் எங்கிருந்து ‘பேராண்மை’? அப்புறம் எப்படி அதுக்கு விமர்சனம்?

முந்தைய விமர்சனம்:

‘பேராண்மை’  -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

தனம்  திரைப்பட விமர்சனம்:

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

இன்றைய சூழலில் அண்ணல் அம்பேத்கரின் அதிமுக்கியத் தேவை – பெரியாரியல் பார்வை..
யார் தமிழன்? எது தமிழர் பிரச்சினை?

கருத்தரங்கம்

கருத்தரங்க உரை :  வே.மதிமாறன்

இடம்: அண்ணல் அம்பேத்கர் படிப்பகம்,

பெருமாள் தெரு, எழும்பூர், சென்னை – 8

நாள்: 25-10-09

நேரம்: மாலை 4 மணி

தொடர்புக்கு :

வேந்தன்

சாகேப் முடித்திருத்தகம்

எழும்பூர்,சென்னை – 8.

அலைப் பேசி எண்: 98841 99901

வாங்க…. விவாதிப்போம்….

‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’
ராஜபக்சேவின் முன்னோடியும் அவனைப்போல் பத்து மடங்கு கொடியவனும் ஆன ஜெர்மானிய ஹிட்லர், உலகையே வளைத்து சூறையாடி கொண்டிருந்தபோது, அவனுக்கும் அவனின் கொடூர நாஜி படைக்கும் தக்க பதிலடித் தந்து, தமிழர்கள் உட்பட்ட உலக மக்களை, பாசிச சக்தியிடம் இருந்து பாதுக்காத்தவர்கள், வீரம் மிக்க ரஷ்ய மக்களும், தந்தை பெரியாரின் பெரும் மதிப்புக்குரிய ஈடு இணையற்றத் தலைவர் ஸ்டாலினும்தான்.

1917 – சோவியத்தில் புரட்சிக்குப் பிறகு, உழைக்கும் மக்களே அதிகாரத்திற்கு வருகிறார்கள். அதன்படியே ரஷ்ய ராணுவத்தில் மிகப் பெரும்பாலும் விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் சிப்பாய்களாகவும், அதிகாரிகளாகவும் பொறுப்பேற்கிறார்கள்.

வசீலி இவானவிச் சுய்க்கோவ் என்பவர் புரட்சிக்கு முன்பு குதிரைத் தளவாடப் பட்டறையில் வேலை செய்தவர். அக்டோபர் புரட்சியில் இவர் பங்களிப்பு மிகச் சிறப்பானது. பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பனராகிறார். லெனின் தலைமையிலான அரசின் ராணுவத்தில் முக்கியப் பொறுப்பேற்கிறார்.

அதற்கும் பின்னாட்களில் தலைவர் ஸ்டாலின் ஆட்சியின்போது 1942-ல் ஜெர்மானிய நாஜி படைகளுக்கு எதிராக இவர் ரஷ்யாவின் 62 -ஆவது படை பிரிவுக்குத் தலைமை ஏற்றார்.  நவீன ஆயுதங்களும், முறையான போர் பயிற்சியும் கொண்ட  நாஜி படைக்கு  எதிராக, சோவியத்தின் எளிய மக்களை கொண்டு, பல புதிய போர் முறைகளை கையாண்டு உலகையே வியக்க வைத்து, நாஜிகளை தும்சம் செய்த, உலகப் புகழ் பெற்ற ‘ஸ்டாலின் கிராட் யுத்தம்’ இந்த குதிரைத் தளவாடப் பட்டறையில் வெலை செய்தவர் நடத்தியதுதான்.

1972-ம் ஆண்டு வெளியான ரஷ்ய படம் A zori zdes tikhie. அதன் இயக்குநர் Stanislav Rostotsky. அதன் கதை இதுதான்,

புரட்சிக்கு முன்பு, விவசாயியாக இருந்த ஒருவர் புரட்சியில் பங்கேற்றுப் பிறகு சோவியத் ராணுவத்தில் ஒரு படை பிரிவுக்கு தலைமை ஏற்கிறார். 1942ல் – இரண்டாம் உலகப்போரின் போது, ரஷ்ய எல்லைப் பகுதியில் உள்ள காட்டிற்குள்,  நுழைந்த ஜெர்மானியப் படைகளை எதிர்த்து, ஏறக்ககுறைய 50 வயதான அவர் தலைமையில் 5 பெண்கள் 16 ஜெர்மானிய நாஜிகளை எப்படி கொல்கிறார்கள்? என்பதுதான் கதை.

படத்தின் துவக்கத்தில், கிராமத்தான் தொனியில் இருக்கிற அந்த தளபதியை, படித்த அந்த ஐந்து இளம் பெண்களும்,  அடிக்கடி கிண்டல் செய்வதாக இருக்கிறார்கள். ‘இளமைக்கே உரிய குறும்பு’ எனறு அமைதி காக்கிறார் அவர். பிறகு நாஜிகளுடன் சண்டை செய்யும்போது, போருக்குரிய வியூகங்களை எப்படி  வகுக்கிறார். அந்தப் பெண்களிடம் இருக்கும் வீரத்தை வெளிகொண்டு வந்து  எப்படி புத்திசாலித்தனமாக, வேகமாக இயங்குகிறார், என்பதை பார்த்து வியக்குகிறார்கள் அந்தப் பெண்கள். அவருடன் இணைந்து 16 ஜெர்மானிய நாஜிகளை கொன்று ஒழிக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியாகி இருக்கிற ‘பேராண்மை’ என்கிற தமிழ் படத்தின் மூலக்கதையும் இதுவேதான். ஆனால் படத்தில், கதை S.P. ஜனநாதன் என்று டைட்டில் போடுகிறார்கள். (தெரியாம போட்டுட்டாங்களோ என்னவோ) எண்ணிக்கைகூட அதே 5 Vs 16 தான்.

சமூகநீதி+ஏகாதிபத்திய எதிர்ப்பு = வாழ்க இந்திய தேசியம்

-இதுவே பேராண்மை சொல்லும் நீதி

முதல் பாதி சமூகநீதி வசனங்கள். இரண்டாம் பாதி ஏகாதிபத்திய எதிர்ப்பு வசனங்கள் என்று தமிழாகி இருக்கிறது ‘பேராண்மை’ என்கிற பெயரில் A zori zdes tikhie.

இந்தப் படத்தை மணிரத்தினமோ, கமல்ஹாசனோ, விஜயகாந்தோ, ஆர்.கே. செல்வமணியோ எடுத்திருந்தால், பாகிஸ்தான் ஊடுருவல், இஸ்லாமிய தீவிரவாதி என்று முடிச்சு போட்டு இருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தின் இயக்குநனர் ஜனநாதனுக்கு சமூக நீதி கருத்தும் கூடவே மார்க்சிய அறிமுகம் இருப்பதால், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற அடையாளத்திற்காக,  வெள்ளைக்காரர்கள் செய்கிற சர்வதேச சதி என்று முடிச்சு போட்டிருக்கிறார்.

மலைவாழ் மக்களிடமிருந்து, படித்து நல்ல நிலைக்கு வருகிற ஒருவரை, உயர்ஜாதிக்காரர்கள் எப்படி எல்லாம் அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆனாலும், அதை எல்லாம் மீறி அவர் எப்படி திறமைசாலியாக இருக்கிறார் என்பதுதான் கதாநாயகனுக்கான பின்னணி. இந்த ‘சமூகநீதி’ அரசியல் பிண்ணனி மரியாதைக்குரியதாகத்தான் இருக்கிறது. இதில் ஒன்றும் நமக்கு பிரச்சினை இல்லை.

ஆனால், மலைவாழ் மக்களிடம் இருந்து வந்த ஒருவர், ‘இந்தியா என் நாடு. அதற்காக நான் என் உயிரைத் தருவேன்’ என்று உரக்கக் கூவுகிறார். மணிரத்தினம் பாணியிலான இந்தப் பார்ப்பன தேசப்பற்றுதான் நம்மை திகிலைடைய வைத்தது.

ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசுக்கு துணை நின்றது, இந்தியாதான்.  காஷ்மீர் மக்களின் கண்ணீருக்குக் காரணம் இந்தியாதான், மணிப்பூர் மலைவாழ் பெண்களை மானபங்கம் படுத்தி கொலை செய்தது இந்தியாதான், வீரப்பன் இருந்த காட்டில் அங்கிருந்த மலைவாழ் பெண்களிடம் பிறப்புறுப்பில் லட்டியால் குத்தி கொலை செய்ததும் இந்தியாதான் என்கிற உண்மை உரைப்பதால்,

தமிழனாக, காஷ்மீரியாக, மணிப்பூர் மண்ணனின் மைந்தனாக  அவர்களின் பிரச்சினை ஊடாக புரிந்துகொள்ளும்போது ‘இந்தியா என் தாய் நாடு. அதற்காக நான் என் உயிரை தருவேன்’ என்கிற வசனம் படத்தில் வீரமாக வரும்போதெல்லாம், நமக்கு உடம்பு, கூசி கூனி குறுகிபோகிறது.

தேசப்பற்றாளனா? இந்திய அரசின் அடியாளா?

கூரை ஏறி கோழி புடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன கதையா, தன்னை ஜாதி பெயர் சொல்லி இழிவாக திட்டியும், மலைவாழ் மக்கள் என்பதற்காகவே தன் உறவினர்களை  அவமானப்படுத்துகிற உயர் அதிகாரியிடம் சுயமரியாதை மறத்துபோய், அடிமையைப்போல், மவுனம் காக்கிற கதாநாயகன், சர்வதேசிய அரசியல் பேசுகிறான். ஜாதிஆதிக்கத்திற்கு எதிராக, பார்ப்பனியத்திற்கு எதிராக போராடத் துப்பில்லாத சிலர், கம்யூனிஸ்ட் என்கிற பெயரில் தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக காட்டிக் கொள்வதைப்போல.

சர்வதேச சதி குறித்து மிகத் தெளிவாக பேசுகிற கதாநாயகனுக்கு, இந்திய அரசின் சதிகுறித்து தெரியாதது ஏன்? தெரிந்திருந்தால் அது குறித்து அமைதியாக இருப்பது ஏன்? குறிப்பாக தன் சமூகமான மலைவாழ் மக்களுக்கு எதிராக இந்திய அரசு, காவல் துறை, காட்டு இலாக, ராணுவம் செய்யும் கொடுமைகள் குறித்து பேச மறுக்க வைப்பது எது?

இந்திய அதிகாரவர்க்கதின் கீழ் இருக்கும் ஒருவன், அவன் இடஒதுக்கிட்டின் மூலம் பதவிக்குப் போனாலும் அரசின் அடியாளாகத்தான் இருக்க முடியுமே தவிர, தேசபற்றாளனாக, ஒடுக்கப்பட்ட மக்களுககு போராடுபவனாக இருக்க முடியாது. இதுதானே அதற்கு விடை. அதனால்தான் ராஜிவ்காந்தியின் காலத்தில் இலங்கைக்கு சென்ற இந்திய ராணுவத்தில் இருந்த தமிழர்கள், இந்திய ராணுவ வீரனாக  மட்டும் இருந்து  தமிழர்களை கொன்றார்கள்.

ரஷ்ய கம்யூனிஸ்டுகள், ஜெர்மானிய நாஜிகளுக்கு எதிராக போர் புரிந்த வீரமிக்க ஒரு உண்மை சம்பவத்தை உல்டாவாக்கி, வெறும் சினிமாவிற்காக பொய்யாக இந்திய தேசப்பற்று என்கிற மயக்கப்பொடி தூவியிருப்பதால், புகழ் பெற்ற பைபிளின் இந்த வாசகமே நமக்கு நினைவுக்கு வருகிறது, ‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய சேவகனாக இருக்கும் இந்திய அரசு, இந்திய மக்களின் மீது அன்பு கொண்டு அவர்களின் விவசாயத்தை முன்னேற்ற விண்வெளிக்கு ராக்கெட் விடுகிறதாம்.  அதை அன்னிய நாட்டு முதலாளிகள் சதி செய்து  அழிக்கப் பார்க்கிறார்கள். அந்தச் சதியை  மலைவாழ் இளைஞன் மூலமாக தடுத்த நிறுத்தி,  ராக்கெட்டை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கிறது இந்தப் படம்.

படத்தின் முடிவில்,  ராக்கெட் விண்வெளிக்கு வெற்றிகரமாக புறப்பட்டுப் போவதை காட்டுகிறார்கள். அதற்கு பிறகு அதுபோய் கடலில்தான் விழுந்து இருக்கும். அதை காட்டவில்லை. அதுக்கா இவ்வளவு போராட்டம்?

ஏதோ சில நேரங்களில், வெற்றிகரமாக விண்வெளிக்கு ராக்கெட்டை இந்தியா ஏவி இருக்கிறது என்பது உண்மைதான். அவை ‘மெட்டி ஒலி, கோலங்கள், மானடா மயிலாட’ போன்ற நிகழ்ச்சிகளை சேட்டிலைட் மூலமாக பார்ப்பதற்குத்தான் பயன்பட்டிருகிறதே தவிர, மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படவில்லை. மாறாக, செல்போன் கம்பெனிகாரனுங்களுக்குத்தான் நன்றாக கொள்ளை அடிப்பதற்கு பயன்படுகிறது.

‘புதிய பொருளாதார கொள்கை’ என்ற பொய்யான பெயரில் அந்நிய நிறுவனங்களுக்காக நாட்டையே கூட்டிக் கொடுக்கிற ஆளும் வர்க்கம், சர்வதேச முதலாளிகளுக்கு எதிராக, இந்திய விவசாயிகளுக்காக அக்கறையோடு ராக்கெட் அனுப்புகிறது என்று நம்புவதுதான் சர்வதேச அரசியலை புரிந்துகொண்ட லட்சணமா?

திருடன் கையிலேயே சாவியை கொடுத்தது போல், இவ்வளவு நாள் இந்தியாவிற்கான ராக்கெட்டை தயார் பண்ணி அனுப்பிக்கிட்டு இருந்ததே அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள்தான். அப்போ எங்க இருந்தது தேசப்பற்று?

இயக்குநர் Stanislav Rostotsky

சுசிலா என்கிற பார்ப்பனப் பெண் அல்லது உயர்ஜாதி இந்துப் பெண் சண்டையில் கொலை செய்யப்பட்ட பிறகு, அவள் வைத்திருந்த ‘பக்தி’ டப்பாவிலிருந்து ‘காக்க, காக்க கனகவேல் காக்க’ என்கிற பாட்டு ஒலிக்கிறது. பெண் போராளிகள் கேட்டு உருகுகிறார்கள். மலைவாழ் கதாநாயகனோ உத்வேகம் பெற்று, மற்ற பெண்களைப் பார்த்து, “பயப்படாதீர்கள் இன்னும் வீரமாக போரிடுங்கள். நீங்கள்தான் துர்க்கை, சூரி, காளி” என்று ஆவேசமாக பேசுகிறான்.

உடனே அந்தப் பெண்கள், தலைமுடியைவிரித்துப்போட்டு, கண் முழுவதும் மை பூசி, தலையில் பெரிய பூ வைத்து ஆவேசமாக வெள்ளைக்காரர்களுடன் சண்டை செய்கிறார்கள். இவர்களை இந்தக் கோலத்தில் பார்த்த உடன், ஆதிபராசக்தி படத்தில் அம்மை நோய்வந்த வெள்ளைக்காரன் ஆதிபராசக்கியை பார்த்து நடுங்குவதைப்போல், நவீன துப்பாக்கிகள் வைத்திருக்கிற கிறித்துவ வெள்ளைக்காரர்கள் பயந்து ஓடுகிறார்கள். ‘இந்து தான் இந்தியா’ என்று கிறிததுவ வெள்ளைக்கார்களுக்கு உணர்த்துவதுபோல் இருக்கிறது இந்தக் காட்சி.

இடைவேளைக்கு முந்தியக் காட்சியில், ‘காட்டிற்குள் செல்லும்போது இப்படி தலைவிரித்துகொண்டு போகக்கூடாது’ என்று அஜிதா என்ற பெண்ணுக்கு கூந்தலை இறுக கட்டிவிடுகிற கதாநாயகன்தான், அதே காட்டிற்குள் அதுவும் உச்சகட்ட சண்டைக் காட்சியில் தலைவிரித்து போட்டுக் கொண்டு சண்டை போடச் சொல்லுகிறான்.

எதற்கு இப்படி ஒரு அபத்தமான காட்சி? இது இயக்குநரின் பார்வையா? இல்லை படத்தின் தயாரிப்பாளர் ஐங்கரன் இண்டர்நேஷனல் அய்யருக்காக வைத்த காட்சியா?

பின்பகுதியில் இப்படி ஒரு காட்சி வைப்பதற்காகத்தான், முன்பகுதியில் புதைக்குழிக்குள் சிக்கி சாவதுபோன்ற காட்சியில் அய்ந்து பேரில் ஒருவரான அஜிதா என்கிற இஸ்லாமிய பெண்ணை பலியாக்கினார்களோ?

“காளி, துர்கை இவைகள் எல்லாம் மலைவாழ் மக்கள் வழிபடும் தெய்வங்கள் அதனால்தான் அதை வைத்தேன்” என்று இயக்குனர் விளக்கலாம்.

ஒரு செய்தியை இயக்குநருக்கு சொல்லவிரும்புகிறோம். இந்தியாவில் இருக்கிற மலைவாழ் மக்களில் ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேல் கிறித்துவர்கள்தான். மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து போன்ற மாநிலங்களில் 100 சதவீதம் கிறித்துவர்களால் நிரம்பி மாநிலங்கள்.

படத்தில் இயக்குநர் என்ன செய்தியோடு முடித்திருக்கிறாரோ அதே செய்தியை அவருக்கும் நாம் சொல்லி முடிப்போம்.

இயக்குநர் ஜனநாதன் வசனகர்த்தாவாக, உழைப்பு சுரண்டல் குறித்து அதிகம் பேசுகிறார். படத்தின் இறுதி காட்சிகூட கதாநாயகன் செய்த செயல்களை எல்லாம், வேறு ஒரு அதிகாரி தான் செய்ததாக சொல்லி பரிசும் பாராட்டும் பெற்றுக் கொள்கிறார். இந்தப் படத்துக்கும் கூட ஏதாவது தேசிய விருது கிடைக்கலாம். அப்படி கிடைத்தால்,  அது அந்த அதிகாரிக்கு கிடைத்தது போன்ற விருதுதான்.

அடுத்தவர் சிந்தனை, அடுத்தவர் கற்பனையை தன்னுடையதாக சொல்லிக் கொள்வதுகூட சுரண்டல்தான். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கிற சமூக நீதி பிரச்சினையின் அடிப்படையே, இதுதான்.

குறி்ப்பு:

‘முற்போக்காளனாக சமூக அக்கறையுடன் படம் எடுக்குறேன்’ என்று இப்படி குழப்புவதை விட, ‘தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன்’ போன்று யாரையும் மட்டம் தட்டாமல், சிறந்த பொழுதுபோக்கு அம்சத்துடன் படம் எடுததுவிட்டுபோவதுதான், இன்றைய மோசமான தமி்ழ் சினிமா சூழலில் மிகவும் முற்போக்கானது. இப்படி ஒரு எண்ணத்தை எனக்கு தோற்றுவித்ததே, கமல்ஹாசனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ என்கிற சமூக விரோத படத்தை பார்த்தபோதுதான்.

உண்மையில் தமிழ் சினிமாக்களில் மிகச் சிறந்த பொழுதுபோக்கு படம் ‘தில்லானா மோகனாம்பாளும்’ அதையே உல்டா செய்து, அதைவிட எளிய மக்களை கதாபாத்திரங்களாக வைத்து எடுத்த ‘கரகாட்டக்காரனும்’தான்.

இன்னொரு குறிப்பு:

ராக்கெட், நவீன ரக ஆயுதங்கள், கம்பியூட்டர் மூலமாக இயக்குவது என்று அறிவியலின நவீன கண்டுபிடிப்பு குறித்து படத்தில் நிறைய வருகிறது. இப்படி வந்தால் அதுபற்றி எல்லாம் தெரிந்த ஒரே அறிவாளி சுஜாதாதான். அவருதான்  இதை எல்லாம் சரியா செய்வாரு என்று ஒரு பொய் தமிழ் அறிவாளிகள் மற்றும் சினிமா உலகில் பரப்பப்பட்டிருக்கிறது. அது பொய்தான் என்பதை இந்தப் படத்தில் சிறப்பாக நிரூபித்திருக்கிறார்கள்.

இதற்கு முந்தைய சுஜாதா பங்களிப்போடு கமல் நடித்து வந்த ‘விக்ரம்’ போன்ற கோமாளித்தனமான படங்களோடு ஒப்பி்ட்டால், இந்தப் படத்தில் அந்தச் செய்தி அதைவிட சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. சுஜாதா போன பிறகு அவர் வேலையை செய்கிற, (அதாங்க அடுத்தவங்க ஆங்கிலத்தில் எழுதியதை மொழிபெயர்த்து தன் பெயரில் போட்டுக் கொள்கிற வேலை.) மதன் போன்றவர்களை இந்தப் படத்தில் பயன்படுத்தாமைக்கு நமது நன்றியையும் வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறோம்.

தொடர்புடைய பதில்:

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

தனம்  திரைப்பட விமர்சனம்:

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

பழி தீர்க்க நினைவு நாளில் உறுதி ஏற்போம்
பார்ப்பன ஜாதி ஆதிக்கத்தை தூக்கி நிறுத்தி, பிற்படுத்தப்படட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு  பெரும் தீங்கிழைத்து  – பேரரசன் ராவண அசுரனை வஞ்சகமாக கொன்ற அடியாள் ராமனை பழித்தீர்க்க,

தேவர்களுக்காக (பார்ப்பனர்களுக்காக) அசுர குல தலைவன் நரகா அசுரனை கொன்று, அநீதியை நிலைநாட்டிய தீயவன், உலகின் முதல் கூலிப்படைத் தலைவன் கண்ணனை பழிதீர்க்க, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் தொடர்ந்து போராடுவோம் என்று மாவீரன் நரகா அசுரன் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.

‘நமக்கு மேல் ஒருவன்‘ – ச்சீ அசிங்கம்
பயப்படாதீங்க இது கடவுள் இருக்கிற இடமில்ல, நட்சத்திரப் பாதை

உங்களைப் போன்ற நாத்திகர்கள் ஆயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும், நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்பது உண்மை. அவன் நல்லது, கெட்டது, ஆத்திகர்கள், நாத்திகர்கள் என்று எல்லாவற்றையும், எல்லோரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். அவன் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது?

இதை தெளிவான புத்திக் கொண்டு ஆராய்ந்தால்தான் புரியும். உங்களைப்போல் முடிவு செய்து கொண்டு ஆராய்ச்சி செய்பவர்களால் முடியாது.

வீர. வீரபாண்டியன்

கடவுள் இல்லை என்பதை நிரூபித்த பிறகு, இறை நம்பிக்கையாளர்கள் தங்கள் இறை நம்பிக்கையை நியாயப்படுத்தமுடியாமல், நிரூபிக்கமுடியாமல் அல்லது கடவுள் மறுப்பாளர்களோடு விவாதிக்க முடியாமல் கடைசியாகப் போய் ஒளிந்து கொள்கிற இடம்தான் இந்த  ‘நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கறது. ஒருவன் இருக்கிறான். அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்கிறான்’ என்கிற சுய சமாதானம்.

உண்மையிலேயே இந்த கருத்தில் உண்மையிருந்தால், மனித குலம் ஒரு கட்டத்திற்கு மேல் தன் இனவிருத்தியையே நிறுத்தியிருக்கும்.  அல்லது அப்படியே தொடர்ந்து இருந்தால், அது அநாகரிகமான சமூகமாக, மிருகங்களைப்போல், காட்டுமிராண்டித்தனத்தைவிட மோசமான மனநிலையில் இருந்து மாறாமல் இருந்திருக்கும்.

பின்ன என்னங்க, நமக்கு மேல இருந்து ஒருத்தன் நம்மள எப்பவும் பார்த்துகிட்டு இருக்கான் அப்படிங்கறதை  நம்புனா, நம்புறவன் தன் பொண்டாட்டி பக்கத்துல நெருக்கமா உக்காரகூட முடியாது.

எந்த நேரமும் நம்பள ஒருத்தன் மேல ஒக்காந்து பாக்கறதா சொல்ற யாரும்  அத துளிகூட நம்பள அப்படிங்கறதுக்கு, கோடிக்கணக்குல மக்கள் தொகை பெருகிக்கிட்டே இருக்குதே இதுதாங்க பலமான சாட்சி. இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி?

சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலபடுத்துவோம்
சேதப்படுத்தப்பட்ட தகவல் பலகைக்கு முன் தோழர் கண்ணன்

4-10-2009 அன்று மும்பை தாராவியில் ‘விழித்தெழு இளைஞர் இயக்கம்’ சார்பில் நடந்த முப்பெரும் விழாவில், ‘நான் யாருக்கும் அடிமையில்லை-எனக்கடிமை யாருமில்லை’ என்ற டாக்டர் அம்பேத்கர் பற்றிய என்னுடைய புத்தக அறிமுக விழாவும், டாக்டர் அம்பேத்கர் படத்துடன் உள்ள டி சர்ட்டும் வெளியிடப்பட்டது.

இந்த இரண்டு நிகழ்வுகளாலும், எரிச்சலைடந்த இந்து மத ஜாதி வெறி கும்பல், தங்கள் ஆத்திரத்தை தங்கள் கையாலாகா தனத்தின் மூலம்  வெளிபடுத்தியிருக்கிறது.

மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த தோழர் கண்ணன், அங்குள்ள தகவல் பலகையில், ‘நான் யாருக்கும் அடிமையில்லை-எனக்கடிமை யாருமில்லை’| என்ற புத்தகத்திலிருந்து,

‘அம்பேத்கரை புறக்கணிக்கிற, பார்ப்பனரில் இருந்து தலித் அல்லாத ஜாதிகள் வரை, அவர் எழுதிய இந்திய அரசியல் சட்டத்தைதான் கரைத்துக்குடித்து, பட்டம் பெற்று, கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தங்களை சட்ட மேதைகளாக காட்டிக் கொண்டு லட்ச லட்சமாய் சம்பாதிக்கிறார்கள்.

அம்பேத்கர் எழுதிய சட்டம் வேண்டும். ஆனால் அவர் வேண்டாம் என்றால் இது என்ன யோக்கியதை?

சரியாகவோ-தவறாகவோ கூட, இந்தியாவிற்கு என்று ஒரு அரசியல் சட்டத்தை எழுத வக்கற்ற இவர்கள் உயர்ஜாதிக்காரர்கள். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் தாழ்ந்த ஜாதிக்காரரா?’’

என்ற வரிகளை 10-10-2009 அன்று காலை எழுதியிருக்கிறார். இந்த வரிகளினால், ஆத்திரம் அடைந்த ஜாதிவெறி இந்து மதவாத கும்பல், அன்று இரவு பலகையை சேதப்படுத்தி, அதன் மேல் ‘கடவுள்’ என்று எழுதிவைத்திருக்கிறது.

தோழர் கண்ணன் தகவல் பலகையில் எழுதிய இந்த வரிகளில், கடவுள் குறித்தோ, இந்து மதம் குறித்தோ நேரடியாக எதுவும் இல்லை. ஆனாலும் ஏன் இந்து மதவாதிகள் கோபப்படுகிறார்கள்?

இந்து மதம் வேறு, ஜாதி வேறு அல்ல என்பதைத்தான் இவர்களின் கோபம் மீண்டும் நிரூபிக்கிறது.

பெயரும் ஊரும் சொல்லாத, ஒரு குரல் தோழர் கண்ணனின் செல்லுக்கு தொடர்பு கொண்டு, “இனிமேல் இதுபோல் எழுதினால், உன் கையை வெட்டுவேன்” என்று மிரட்டி இருக்கிறது.

பதிலுக்கு தோழர் கண்ணன், “என் கை இருப்பதே இதுபோல் எழுதுவதற்குத்தான்” என்று பதில் அளித்திருக்கிறார். மீண்டும் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துவிட்டு துண்டாகியிருக்கிறது அந்தக் குரல்.

அம்பேத்கர் என்கிற சொல், நேரடியான இந்து மதவெறியர்களுக்கும், ஜாதிய உணர்வாளர்களுக்கும் மட்டுமல்ல, வேறு மதங்களில் இருக்கிற தலித் விரோத எண்ணம் உடையவர்களையும், தங்களை ‘முற்போக்காளராக’ காட்டிக் கொள்கிற, பல பேரின் ஜாதி உணர்வையும், அவர்களின் தலித் விரோதப்  போக்கையும் அம்பலப்படுத்துவதாக இருக்கிறது.

டாக்டர் அம்பேத்கர் பற்றிய நூலை எழுதியதாலும், டாக்டர் அம்பேத்கர் டி சர்ட்டை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டுவந்ததாலும் நான் பல ‘முற்போக்காளர்களால்’ கடுமையாக தொடர்ந்து விமர்சிக்கப் படுகிறேன். புறக்கணிக்கப்படுகிறேன். அல்லது அவர்களின் ஜாதி உணர்வை தலித் விரோதப் போக்கை உணர்ந்துகொள்கிறேன்.

புத்துக்குள்ளாற புகையை வைச்சி ஊதுனா, உள்ள இருக்கிற விஷ பாம்பு வெளிய வரமாதிரி, டாக்டர் அம்பேத்கர் நிலையில் இருந்து ஜாதியை அனுகினால், முற்போக்காளர்களிடம் இருந்தும் ஜாதிவெறி படம் எடுத்து ஆடுகிறது.

இதுபோன்ற வன்முறைகளும், கொலை மிரட்டல்களும் ஜாதிவெறிக்கு எதிராக தொடர்ந்து அண்ணல் அம்பேத்கரை முன்னுறுத்தி பிரச்சாரம் செய்வதும், போராடுவதும்தான் நமது முதன்மையான கடமை என்பதையே நமக்கு மீண்டும், மீண்டும் உணர்த்துகிறது.

அண்ணலின் வழியில் தொடர்ந்து போராடுவோம். சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலப்படுத்துவோம்.

மும்பையில் முப்பெரும் விழா
நிகழ்வு நாள்: 04- அக்டோபர் -2009.

நிகழ்விடம்: மாநகராட்சி பள்ளி மைதானம், தாராவி குறுக்குச்சாலை

வெளியிடப்படும் நூலின் பெயர் :

தோழர் மதிமாறன் எழுதிய

“நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை”- டாக்டர் அம்பேத்கர் குறித்த ஆய்வு நூல் மற்றும் அம்பேத்கர் படத்துடன் கூடிய T shirt வெளியிடப்படும்.

கலந்து கொள்வோர்:

திரைப்பட இயக்குனர், செந்தமிழன் “சீமான்”

பெரியார் திராவிடர் கழக தலைவர் “கொளத்தூர் மணி”

எழுத்தாளர் “வே.மதிமாறன்”

தங்கள் பங்களிப்புகளை வழங்கிட, இன எழுச்சிக்கான ஒரு களத்தில் சேர்ந்து பணியாற்றிட தமிழ் தேசிய உணர்வாளர்கள், பெரியாரியல்,அம்பேத்கரின் அன்பர்கள், உழைக்கும் மக்கள் என அனைவரும் முன்வர வேண்டுமாய் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு:

பன்னீர் செல்வம் : +919867488167

சிரீதர் :   +919987379815 ,9702481441

மகிழ்நன் :    +919769137032

பாண்டியன்: +919821072848

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்
விஜயகாந்த் தொப்பிக்கு மேல் காவி. நல்ல குறியீடு. எதிர்காலத்தில் பா.ஜ.கவின் தமிழ்நாட்டு தலைமைக்கான  ‘காவித் தலை’ . சபாஷ் சரியான அறிகுறி.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் – தமிழக மீனவர்களை, ஈழத் தமிழர்களை சுட்டுக்கொல்கிற, இலங்கை ராணுவத்தை கண்டித்து, அதன் மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டெல்லியில் ‘ஒரேஒரு வேளை’ உண்ணாவிரதம் இருந்தார்.

இந்த உண்ணாவிரதத்தின் போது, தமிழக மீனவர்கள் அணியும் தொப்பி என்று தலையில் நீண்ட குடுவையைப்போன்ற தொப்பியை அணிந்திருந்தார். எந்த ஊரில் மீனவத் தமிழன் இப்படி ஒரு தொப்பியை அணிந்திருக்கிறார்?  இது சினிமாவில் வருகிற மீனவர் அணிகிற காஸ்டியூம்.

தமிழ் சினிமாவில் மீனவர்கள், நீண்ட தொப்பியும், லங்கோட் போன்ற உடையும் அணிந்து முழங்கைக்கு மேல் தாயத்து கட்டி, இறுக்கமான சட்டையும் அணிந்திருப்பார்கள்.

இதுபோன்ற கோமாளித்தனமான காஸ்டியூம்களோடு, தமிழக மீனவர்களை வேடிக்கைப் பொருளாக, மீனவர்கள் அல்லாத தமிழர்களிடம் இருந்து வேறுபடுத்தி,  ‘தமிழ் மீனவர்கள் வேறு யாரோ’ என்பது போன்ற எண்ணத்தை சித்திரித்து பிரபலமாக்கியது,  கடற்கரையை மீனவர்கள் அசுத்தப்படுத்துகிறார்கள் என்பதாக குற்றம் சாட்டி, சென்னை மெரினா கடற்கரையில், மீனவர்களை தன் ஆட்சிகாலங்களில், இன்றைய இலங்கை ராணுவம் போல் சுட்டுக்கொன்ற,  ‘மீனவ நண்பன்’ எம்.ஜி.ஆர்.

நீண்ட தொப்பியும், லங்கோட் போன்ற உடையும் அணிவது ஆந்திர மீனவர்கள் வழக்கம். ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில், இயக்குநர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள், ஆந்திராவை சேர்ந்தவர்களே. படகோட்டி படமும் கூட ஆந்திராவைச் சேர்ந்த, நாகிரெட்டியின் திரைப்படம்தான்.

அதனால், அவர்கள் ஆந்திர மீனவர்கள் அணிகிற உடையை, செயற்கையான சினிமா சேர்க்கைகளோடு கொச்சைப்படுத்தி, தமிழக மீனவர்களின் அடையாளமாக காட்டினார்கள்.

தமிழர்களுக்காக தன் வாழ்க்கையையே அர்பணித்து கட்சி நடத்துவதாக சொல்கிற விஜயகாந்த் போன்றவர்கள், தமிழக மக்களில் மிக பெரும்பான்மையான உழைக்கும் மக்களான மீனவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களின் வாழ்க்கைத் தரம், முறை எப்படி இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளாமல், ‘சாவு வீட்ல பொணமாகவும்-கல்யாண வீட்ல மாப்பிளையாகவும்’ இருக்க வேண்டும் என்கிற சினிமாக்காரர்களின் விளம்பர மனோபாவதில் இருந்து வெளிவராதவர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் தமிழக மீனவர்கள் அணிகிற குல்லா என்று ஒன்றை தன் தலையில் வைத்திருக்கிறார்.

உண்மையில் தமிழ் மீனவர்கள் தலையில் அவர் வைக்கும் ‘குல்லா’ அது.

‘யார் வீ்ட்டு எழவோ… பாய் போட்டு அழவோ’ என்று ஒரு பழமொழி வட மாவட்டத் தமிழர்களிடம் இருக்கிறது. அதுபோல் கூலிக்கு மாரடிக்கிற இந்தச் சினிமாக்காரர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு தமிழக மீனவர் துயரமும், ஈழத்தமிழர் துயரமும், தான் தலைவர் ஆவதற்கும், தான் ஓட்டு வாங்குவதற்கும் ஒரு கருவியாக, பிரச்சாரமுறையாக பயன்படுகிறது.

ஒரு வேளை, சிங்கள ராணுவம் ஒரு நெருக்கடியின் காரணத்தால்,  ஈழத் தமிழர்கள் மீதான,  தமிழக மீனவர்கள் மீதான கொலை வெறித் தாக்கதலை நிறுத்திவிட்டால், அதன் மூலம் பெரும் அதிர்ச்சிக்கும், நஷ்டத்திற்கும் உள்ளாகுபவர்கள் இந்த அரசியல்வாதிகளாகத்தான் இருப்பார்கள்.

வாய்க்கரிசியையும் புடுங்கி, கள்ள மார்க்கெட்ல வித்து காசு பாத்துடுவாங்க.

படம், நன்றி: தினகரன்