
தூணிலும் துரும்பிலும் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதனுள் இருப்பதோ, புத்தர்; நாமத்தைப்போட்டு ரங்கநாதனாக ஏமாற்றினார்கள். அதுவே பின்னாளில் ‘நாமம்’ என்பதே ஏமாற்றுவதற்கான குறியீடாக மாறியது. ‘என்ன நாமத்த போட்டுட்டானா..’ என்று.
7 ஆம் அறிவு விமர்சனத்தைப் படித்துவிட்டு பல தோழர்கள் சிறப்பாக, சரியாக இருக்கிறது என்றார்கள்.
இந்து மதவாதிகள், ‘நீ கிறிஸ்துவர்களிடம் பணம் வாங்கிவிட்டாய். கெட்டு ஒழிந்து போ’ என்று முனிவர்களுக்குரிய கோபத்தோடு சபித்தார்கள். இன்னும் சிலர், ‘நீ கிறித்துவன்தானே அதான் புத்திய காண்பிச்சிட்ட..’ என்று எனக்கு ஞானஸ்நானம் செய்து வைத்தார்கள்.
Manimaran Karunanidhi என்கிற பெயரில் ஒரு ‘அம்பி’ தொடர்ந்து எனக்கு ஆபாசமாக பல பின்னூட்டங்களை எழுதி வருகிறார், அவர் என்னுடைய இணையப் பக்கத்தை தடை செய்ய world press க்கு புகார் அனுப்பச் சொல்லி வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறார்.
Hi All,
Today i have sent a request to close this mathimaran’s blog to world press.
Mathimaran lost his mind control. His aim to comment one particular community and write good about a community which is feeding for him and for his family.
Those who feel the same to report abuse and want to close this mathimaran’s blog,
Please use following link and report abuse.
http://en.wordpress.com/abuse/
Manimaran Karunanidhi
manimaran.karunanidhi@gmail.com
148.87.19.222 (ip)
இந்து தமிழ்த்தேசிவாதிகளோ, இன்னும் ஒருபடி மேலேபோய் ‘நீ தமிழனை இழிவு படுத்திவிட்டாய். போய் சாவுடா. அடுத்த ஜென்மத்துல வேற இனத்துல போய் பொறந்துக்க. தமிழ்நாட்ல இருக்காதே’ என்று சிங்கள ராஜபக்சே தமிழர்களை ‘இலங்கையில் இருக்காதே’ என்று கொக்கரிப்பதுப் போல் கொதித்தார்கள்.
இன்னும் சிலரோ, ‘உன்னை 7 ஆம் அறிவுக்கு விமர்சனம் எழுத சொன்னவனுங்க நல்லாவே இருக்க மாட்டானுங்க’ என்று என் நண்பர்களை சபித்தார்கள்.
இந்த கோபங்கள் எல்லாம், இயலாமையாகத்தான் வெளிபட்டதே தவிர, ஒரு வார்த்தைக்கூட நான் எழுதியதற்கு பதிலாக வரவில்லை.
‘மாமன் மகள்’ திரைப்படத்தில், சாவித்திரியை ஒருதலையாக காதலிக்கும் சந்திரபாபு, ஒரு அட்டையில் சாவித்திரி படத்தை வரைந்து வாயில் ஒரு ஓட்டை போட்டு, அதன் வழியாக சாத்துக்குடி சுளைகளை ஊட்டிக் கொண்டிருப்பார். சுளைகள் அட்டையின் பின் பக்கமாக கீழே விழுந்து கொண்டிருக்கும்.
சந்திரபாபுவின் காதல் தூதராக வரும் துரைராஜ் அதைப் பார்த்து, அந்த ஓட்டையில் வாயை வைத்து, ‘சாவித்திரி’க்கு ஊட்டும் சாத்துக்குடி சுளைகளை தின்று கொண்டிருப்பார். அதைப் புரிந்த சந்திரபாபு, தன் இன்னொரு கையில் இருக்கும சிகரெட்டால் துரைராஜ் நாக்கை சுட்டுவிடுவார்.
அலறி துடிக்கும் துரைராஜை பார்த்துவுடன் சந்திரபாபு, ‘டேய் அவள பாத்தியாட, என்ன சொன்னா?’ என்பார்.
‘அய்யய்யோ முதலாளி, என் நாக்கை சுட்டுட்டிங்களே’ என்று அலறுவார் துரைராஜ். அதை பொருட்படுத்தாமல் மீண்டும் சந்திரபாபு, ‘டேய் அவள பாத்தியாட?’ என்பார்.
‘முதலாளி எனக்கு நாக்கு எரியுது. என்னால தாங்க முடியலையே. இந்த மாதிரி பண்ணிட்டீங்களே, என்னால ஒரு வார்த்தைக் கூட பேச முடியாது’ என்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பார்.
கடுப்பான சந்திரபாபு, ‘அடப்பாவி, தேவையில்லாம இவ்வளவு வார்த்தை பேசுற. ஒரே ஒரு வார்த்தை என் ஆள பாத்தியா, இல்லையானு சொல்லக்கூடாதா?’ என்பார்.
அதுபோல் தேவையில்லாமல், நிறைய புலம்புகிற, சபிக்கிற இந்து மற்றும் இந்து தமிழ்த்தேசியவாதிகள் ஒரே ஒரு வார்தையையாவது நமக்கு பதிலாக தந்திருக்கலாம். மாறாக நான் தமிழர்களை இழிவுபடுத்தியதாக அபாண்டம் சொல்கிறார்கள்.
நானா தமிழர்களை இழிவுபடுத்தினேன்? 7 ஆம் அறிவுதான் தமிழர்களின் பெருமையாக, இந்து பார்ப்பன பெருமைகளைக் காட்டி, சூத்திரத் தன்மையை தமிழன் அடையாளமாக இழிவுபடுத்தியிருக்கிறது.
///விஞ்ஞானி என்றால், கண்டிப்பாக பார்ப்பனப் பெயர்தான். இந்தப் படத்திலும் சுபா சீனிவாசன்தான் ஆராய்ச்சியாளர். (சித்த வைத்தியரான சீனிவாசன், தன் பொண்ணுக்கு வச்ச பேரப் பாரு.) இதுதான் 7 ஆம் அறிவின் தமிழ் உணர்வு.
இவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ பராவயில்லை. அவரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் விஞ்ஞானிக்கு ‘முருகன்’ என்ற தமிழ் பெயரை வைத்திருந்தார்./// என்று 7 ஆம் அறிவு பற்றி எழுதியபோது குறிப்பிட்டிருந்தேன்.
‘முருகன்’ என்று பெயர் வைபத்தில்கூட எனக்கு உடன்பாடு இல்லை. பெரியாரைப் போல் மதசார்பற்ற தமிழ்ப்பெயர்களை வைப்பதைதான் நான் கடைப்பிடிக்கிறேன். ஆதரிக்கிறேன். ஆனால், தமிழ்ப் பெருமை பேசுகிற 7 ஆம் அறிவு ஒப்பிட்டளவில்கூட ‘முருகன்’ என்கிற தமிழ்ப் பெயரைக்கூட ஏன் தேர்தெடுக்கவில்லை?
சுபஸ்ரீ, காயத்திரி, சுரேஷ், ரமேஷ், பாலாஜி போன்ற பெயர்களை மட்டுமல்ல, கந்தசாமி, சுப்பிரமணியன், சுப்பிரமணியசாமி இதுபோன்ற சமஸ்கிருத பார்ப்பனப் பெயர்களையும் ‘இந்து’ என்பதற்காக ‘இந்து’ தமிழர்கள், விரும்பி வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், ‘முருகன்’ ’ஆறுமுகம்’ ‘ஏழுமலை’ ‘பழனி’ ‘திருப்பதி, என்கிற இந்து தமிழ்ப்பெயர்களை ‘இந்து’ என்பதற்காக பார்ப்பனர்கள் வைப்பதில்லை.
ஆக 7 ஆம் அறிவின் தமிழ் விரோதப் போக்கை, சூத்திர தன்மையை, அடிமைப்புத்தியை சுட்டிக் காட்டி எழுதினேன்.
ஆனால், பாவம் ‘தமிழர்கள்’ சூத்திரர்களாக இருப்பதிலேயே சுகம் காண்கிறார்கள். இந்த அடிமை மனோபாவம்தான், படத்தின் இயக்குநர் தமிழரும் ரசிக தமிழர்களும் Tally ஆகிற இடம்.
***
///பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்களால், சித்த வைத்தியத்தில் சிறந்தவர்களான தமிழர்கள் கும்பல் கும்பலாக செத்துக் கொண்டிருந்தபோது, போதிதர்மனாக வந்து தமிழர்களுக்கு மருத்துவம் பார்த்தது வெள்ளைக்காரன்தான். (அவுனுக்கும் வந்துடுமோ என்ற பயம்தான்) வெள்ளைக்காரன் வருகைக்குப் பிறகுதான் பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அற்ப ஆயுள் இந்தியர்களுக்கு, ஆயுள் 60 வயதை தாண்டியது./// என்று விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
இதை, தமிழர்களின் சித்த வைத்தியத்திற்கு எதிராக நான் எழுதிவிட்டதாக கோபித்துக் கொண்டார்கள். சித்த வைத்தியத்தின் சிறப்புகளை அறியாதவன் அல்ல நான். ஆனால், தீவிர இறைநம்பிக்கை, ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்ட காரணத்தால், பெரிய அளவில் வளர்ந்து உலகம் முழுக்க மாற்று மருத்துவமாக பரவி இருக்க வேண்டி சித்த வைத்தியம், மூடநம்பிக்கை என்ற முட்டு சந்தில் போய் நின்று விட்டது.
‘இந்த மருந்த சாப்பிடுங்க. சரியாகும். கடவுள் இருக்கான். நம்பிக்கையா இருங்க.’ என்று மருத்துவர் பேசுவது தப்பில்லை.
மாறாக, ‘ஏழு வாரம் தொடர்ந்து, சனீஸ்வரன் கோயிலுக்கு போயிட்டு வாங்க. அங்க போய் இந்த மருத்தை அர்ச்சனை தட்டுல வைச்சி தீவார்த்தன காண்பிச்ச பிறகு சாப்பிடுங்க. கண்டிப்பாக நோய் சரியாகிவிடும்’ என்றால் அது எப்படி வைத்தியமாகும்?
மருத்துவர்கள் இறை நம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் மருத்துவமே அப்படி மாறினால், அது தன் சிறப்புகளை, நம்பகத்தன்மையை இழந்துவிடும் என்பதற்கு சித்த வைத்தியமே சாட்சி.
modern medicine என்று சொல்லப்படுகிற அலோபதி வைத்தியமுறை மருத்துவர்களிடம் மூட நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அந்த மருத்துவத்தில் மூடநம்பிக்கை இல்லை. மாறாக, அது வணிகம் என்ற பெரும் சகதியில் சிக்கியிருக்கிறது.
இப்படித்தான் பெரியம்மையை, நோயாக பார்க்காமல் கடவுளாக பார்த்தார்கள். ‘ஆத்தா எறங்கி இருக்கா, அவள குளுர வைச்ச அவளே போயிடுவா..’ என்று பக்தியாக பேசினார்கள். இதனால்தான் பெரியம்மைக்கு மருத்துவமும் பார்க்கவில்லை. மருந்தும் கண்டுபிடிக்கவில்லை.
வெள்ளைக்காரன் வந்து பெரியம்மையை நோய் என்று கண்டு, தன் மருத்துவத்தால் ஆத்தாவுக்கு ஆப்பு அடிக்கவில்லை என்றால், ஆத்தா ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஆப்படிச்சிட்டு போயிருப்பா.
***
‘இந்து மதத்தின் மீதும், பிராமணர்கள் மீது உனக்கு என்ன அப்படி கோபம்? உன் தனிப்பட்ட கோபத்தை எல்லாம் தமிழிடமும், தமிழர்களிடம் காட்டாதே?’ என்று கோமாளித்தனம் செய்கிறார்கள்.
தனிநபர்களின் மீதான அபிப்ராயத்தை அவர்கள் சார்ந்திருக்கிற, ஜாதி, மதம் இவைகளோடு தொடர்புபடுத்தி பார்ப்பதுதான் ஜாதி அபிமானிகளின் புத்தி. ஒருவரால் உதவி, லாபம கிடைத்தால் அவரை புகழ்வதும், அவரோடே சண்டையானால், ‘அவன் ஜாதி புத்திய காண்பிச்சிட்டான்’ என்பதும், ‘அவனுக்கிட்ட இருக்கிற மத வெறி நம்ம ஆளுங்ககிட்ட இல்ல’ என்பதும்தான் இவர்கள் கடைப்பிடிக்கிற காழ்ப்புணர்ச்சி அரசியல்.
அதுபோலவே நம்மையும் பார்க்கிறார்கள். எனக்கு ஒரே ஒரு பார்ப்பனரோடுகூட தனிப்பட்ட முறையில் எந்த தகராறும் இல்லை. அவ்வளவு ஏன் எனக்கு தனிப்பட்ட முறையில் பார்ப்பனர்கள் யாரும் தீங்கு செய்ததில்லை. மாறாக அந்த சமூகத்தைச் சேர்ந்த என் நண்பர்கள் எனக்கு நன்மைதான் செய்திருக்கிறார்கள்.
என்னுடைய தனிப்பட்ட நட்பிற்காக அல்லது விருப்பத்திற்காக சமூகத்தில் இருக்கிற பார்ப்பனிய ஆதிக்கத்தை ‘இல்லை’ என்று சொல்லமுடியுமா?
7 ஆம் அறிவு ஆங்கிலத்திற்கு எதிராக பாரதியாரைப்போல், தமிழ்ப் பெருமை பேசுகிறது. தமிழ் ஒன்றும் மட்டம் இல்லை என்று கோபப்படுகிறது. சரிதான்.
ஆனால், தமிழை நீச மொழி, இழிவான மொழி என்று சொன்னது யார்?
சீனாக்காரனா? ஜப்பான்காரனா? வெள்ளைக்காரனா? மலையாளியா? கன்னடக்காரனா?
தமிழை ‘குரங்குமொழி’ என்று சொன்ன, விஞ்ஞானி நெல்சனை ‘வாயிலேயே போடுவேன்’ என்று கோப்பப்பட்டு நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கு தமிழ் உகந்த மொழிதான் என்று நிறுவுகிறது 7 ஆம் அறிவு. சரிதான். அதை ஒத்துக் கொள்கிறோம்.
நவீன ஆராய்ச்சிக்கே உகந்ததாக இருக்கிற தமிழ், கேவலம் கோயிலில் அர்ச்சனை செய்தவற்கு உகந்த மொழியல்ல எனறு சொல்லுகிற சிவாச்சாரியர்கள், பட்டாச்சாரியர்கள், தீட்சிதர்கள் ‘வாயிலேயே போடுவேன்’ என்று சொல்லுகிற தைரியம் 7 ஆம் அறிவு உட்பட எந்த தமிழ் உணர்வாளனுக்கு வந்திருக்கிறது? இதைத்தான் நான் அடிமைப்புத்தி என்கிறேன்.
‘பல்லவர்கள் ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் இருந்தது. தேவராம், திருவாசகம் போன்றவைகள் புகழ்பெற்றது. ஞானசூனியமான உனக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை’ என்று வெத்து வார்த்தைகளை சுழற்றுகிறார்கள்.
உண்மையில் பல்லவர் ஆட்சியில் தமிழ் உயர்ந்த நிலைக்கு போகவில்லை. சமஸ்கிருதம்தான் உயர்ந்தநிலைக்கு போனது. அதுவே ஆட்சி மொழியாகவும் இருந்தது. தேவாரம், திருவாசகத்திற்குகூட தெருவில் பாடுவதற்கும் கோபுரவாசலில் நின்று பாடுவதற்கும்தான் அனுமதி இருந்ததே தவிர, கர்பகிரகத்திற்குள் பாடுவதற்கு அனுமதி இல்லை. தமிழுக்கு, தமிழனுக்கு அதற்கான அருகதை இல்லை என்று காரணம் சொல்லப்பட்டது. இன்றளவும் அதுதானே நீடிக்கிறது.
சுடு, சொரணை, மானம், ஈனம் உள்ள எவனும் சுருங்கச் சொன்னால், சுயமரியாதை உள்ள எவனும், அவன் தமிழனாக. பக்தனாக இல்லாவிடினும்கூட, தமிழுக்கு நேரும் இந்த அவமானத்தை தட்டிக் கேட்பான். வள்ளலார், பெரியார் போன்றவர்கள் அதைத்தான் செய்தார்கள்.
ஆனால், சுயமரியாதை இல்லாதவன் தொடர்ந்து சூத்திரனாகவே இருக்க விரும்பி, சந்துல நின்னு எட்டிப்பார்த்து, வந்தவரைக்கும் லாபம் என்று சாமிய கும்பிட்டு வருவான்.
‘சிற்ப கலையில் சிறந்து விளங்கிய பல்லவர்கள் தமிழர்கள்தான், அவர்களால் தமிழ்நாடு பெருமை பெற்றது. மகாபலிபுரம் சிற்பங்களால் தமிழ்நாடு உலகஅளவில் புகழ் பெற்றது. உனக்கு கொஞ்சமாவது நன்றி இருக்கா? அவர்களை விமர்சிக்க உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?’ என்ற பாணியிலும் வீசுகிறார்கள்.
ஆமாம். பல்லவர் ஆட்சியில் கற்களுக்கும், சிற்பங்களுக்கும், சிலைகளுக்கும் இருந்த மரியாதை தமிழுக்கும், தமிழுர்களுக்கும் இல்லை.
இப்படியே போனா,
‘பல்லவர்களால்தான் மகாபலிபுரம் புகழ் பெற்றது. அதனால்தான் இன்னைக்கு நாம week end ல மகாபலிபுரத்துல ரூம் போட்டு ஜாலிய இருக்கோம். கொஞ்சம்கூட நன்றி இல்லாம அந்த பல்லவர்களை போய் திட்டுறீயே?’ என்பார்கள் போலும்.
தொடர்புடையது:
7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல
இயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’
பாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..?’
‘யார் ரவுடி?’ கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார், உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய்
இனி ‘தமிழறிஞர்களை’ சும்மா விடக்கூடாது…
மறைமலையடிகளின் தலித் விரோதமும் பெரியார் இயக்கத்தின் கடும் எதிர்ப்பும்
‘யார் ரவுடி?’ கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார், உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய்
சிவன் சொத்து குலநாசம் பக்தர்களுக்கு- சிவன் சொத்து கொள்ளை லாபம் தீட்சிதர்களுக்கு
நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு… விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து…
சிதம்பர ரகசியம் அம்பலமானது
மக்கள் தொலைக்காட்சி பேட்டி