எந்த அமைப்பும் வெளியிட முயற்சிகூட செய்யாத, அம்பேத்கர் திரைப்படத்தை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் வெளியிடுகிறதே?
-ந. செந்தில்
ஆமாம் செந்தில், கொஞ்ச நாளா வானம் மேக மூட்டமா இருக்கு. சில நேரத்துல நல்லா மழையும் பெய்யுது.
பாரதியின் பிடியில் இருந்து மெல்ல விலகி, பெரியாருக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் தமுஎச முக்கியத்துவம் தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் தமிழில் வெளிவராமல் இருக்க நடந்த சதிகளை நண்பர்களோடு இணைந்து அம்பலப்படுத்தினோம். தமுசஎசவின் இந்த முயற்சிக்கு ஏதோ ஒருவகையில் நாங்களும் காரணமாக இருப்போம் என்று நம்புகிறோம்.
டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளிகொண்டுவர வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் சத்தியசந்திரனுக்கும், தமிழகம் முழுவதும் 100 தியேட்டர்களில் வெளியிடுவதாக அறிவித்திருக்கிற தமுஎசவிற்கும், அதை வெளியிடுவதற்காக ஆகும் செலவு தொகையில் ரூ. 6 லட்சத்தை தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்ட மரியாதைக்குரிய எடிட்டர் லெனினுக்கும் – அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிடுவதற்காக முயற்சி செய்த எங்கள் குழு சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் சினிமாவில் இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் இருக்கிற பல ‘முற்போக்காளர்கள்’ அம்பேத்கர் திரைப்படத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தங்களை ஜாதி இந்துக்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எடிட்டர் லெனின் அம்பேத்கர் பட வெளியீட்டில் தன் பங்களிப்பின் மூலமாக அவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார்.
அதுபோலவே அண்ணல் அம்பேத்கருக்கு முக்கியத்துவம் தரும் இந்த மாற்றத்திற்காக தமுஎசவிற்கும் அதன் பொதுச் செயலாளர் தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதுபோலவே, ‘டாக்டர் அம்பேத்கரை ஜாதிகளுக்கு எதிரான குறியீடாக அடையாளப்படுத்தவேண்டும். குறிப்பாக அவரை தலித் அல்லதாவர்கள் தங்கள் தலைவராக கருதவேண்டும்’ என்று யாருமே அணியாத அம்பேத்கர் டி சர்ட்டை நாங்கள் கொண்டு வந்தோம். அதை ஓரளவிற்கு தலித் அல்லாத இளைஞர்களை அணியவும் வைத்தோம்.
தமுஎச போன்ற அமைப்புகள் முயற்சி செய்தால் அம்பேத்கர் டி சர்ட் அணிவதை இன்னும் பரவலாக்க முடியும். அம்பேத்கர் டி சர்ட்டை தமுஎச சார்பாகவே கொண்டு வந்து, தனது சங்கத் தோழர்கள் அதை அணிவதை கட்டயாப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
மற்றப்படி, அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றி.
தொடர்புடையவை:
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி *ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா? * 60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ… *
டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்? *
‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம் *
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது
‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’




