மக்கள் தொலைக்காட்சி பேட்டி

8 பதில்கள்

3 11 2008
யாழன் ஆதி

சிறப்பு

17 12 2008
நர்மதா

வெளிப்படையாக சொல்வதானால் இன்றளவும் பாரதி எழுத்துக்களில் சில கவிதைகளை மட்டுமே நேரடியாக படித்துள்ளேன். அதிலும் ஆரய்ச்சி ரீதியில் அல்லது ஆழமாக படித்தது கிடையாது. ஆனால் பாரதியை பற்றி பிறர் எழுதியதை படித்ததும், சொன்னதை கேட்டதுமே பாரதி பற்றி என்னுள் முழுமையாக உள்ளது. இந்த செவ்வியில் பாரதி பற்றிய ஒரு விமர்சனத்துக்கு அப்பால் எனக்குள் இருந்த ஒரு குறைபாட்டை புரிந்து கொண்டேன். நல்ல செவ்வி. மிக அருமை. நன்றிகள்.

30 12 2008
Nithi

Arumai Arumai

18 06 2009
பாலா

திரு. மதிமாறன் அவர்கட்கு,
உங்கள் வலைப்பூவில், இன்று தான் ம.தொ.வில் ஒளிபரப்பான உங்கள் பேட்டியை பார்த்தேன். அதில் மாகாகவிப் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்களைக் கேட்டு அதிர்ச்சியுற்றேன். உங்கள் கருத்துக்களுக்கு ஒரு சில விளக்கம் தர ஆசைப்படுகிறேன். அவை பின்வருமாறு:

1) “ஜாதிகள் இல்லையடி பாப்பா…” என்று முழங்கியது மட்டுமல்லாமல், அதை செயல்முறைபடுத்திய பெருமையும் மகாகவியைச் சேரும். அவர் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்.
2) அவருக்கு மகாகவி என்ற பட்டத்தை வழங்கியது ‘பிராமணர்கள்’ அல்லர். அவரை மிகவும் நேசித்த, உங்களுடன் ஒத்தக் கருத்து கொண்ட – ‘பாரதிதாசன்’. அவர் ஏன் பாரதிக்கு அந்த பட்டத்தை வழங்கினார் என்று தெரியுமா? வரலாறு நன்றாக தெரிந்தவர்க்கு தெரிந்திருக்கும்.
3) “காசி நகர்ப்புலவர் பேசுமுரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்ற வரியை எதிர்த்துள்ளீர்கள். பிரிட்டீஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இல்லை. தயவு செய்து நம் வரலாற்றை ஒருமுறை அலசி பார்க்கவும். நேரு காலத்தில் பைசல் செய்யப்பட்டு ஒரு மன்னரிடமிருந்த காஷ்மீர் 1940களின் முடிவில் தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாருக்கும் காஷ்மீர் இந்தியாவின் எல்லை என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது என் தாழ்மையான கருத்து. இந்தியா ஆப்கானிஸ்தான் வரை பரவி இருந்தது என்று நினைவில் கொள்ளுங்கள். அதே போல், கன்னியாகுமரியும் 1947க்கு முன் ‘திருவாங்கூர்’ சமஸ்தானத்தை சேர்ந்தது. மகாகவி கண்ட இந்தியாவும் சரி, செந்தமிழ் நாடும் சரி வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. கன்னியாகுமரி என்று ஏன் உபயோகபடுத்தவில்லை என்பது தேவையற்றது. “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி எல்லாம் உன்னோட…..” என்பதெல்லாம் வாலி, வைரமுத்து காலம்.
4) மேலும், மகாகவி நல்ல கவிஞர் மட்டும் இல்லை. அவர் சிறந்த இசை அறிஞர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த கவிதையை அவர் எந்த ராகத்தில் பாடி இருக்கிறார் தெரியுமா? ‘புன்னாகவராளி’. ராகத்திற்கு ஏற்றவாறு தான் வார்த்தைகளை உபயோகபடுத்தியிருக்கிறார் என்பது என் வாதம். அந்த இடத்தில் காஷ்மீர் என்றோ, கன்னியாகுமரி அல்லது திருநெல்வேலி அல்லது காஞ்சிபுரம் என்றோ உபயோகப்படுத்த முடியாது. தவிர, பாடலில் ‘மைசூர்’ அல்லது ‘கன்னடம்’ பற்றி அல்லது இந்த ஊர்களின் பெயர்களை பற்றி சொல்லவில்லயே என்று கோபித்துக் கொள்ளலாமா? அவர் இக்கவிதையில் இந்தியாவை படம் வரைந்து பாகம் குறிக்கவில்லை!
5) நான் திருச்சியில் பிறந்து வளர்ந்தவன். உலக நாடுகள் சிலவற்றுக்கு பலமுறை பயணம் செய்திருக்கிறேன். எனக்கு உலகத்திலேயே பிடித்து ஊர் எது வென்று ஒருவர் என்னை கேட்பாரேயாயின், அவருக்கு பட்டென்று யோசிக்காமல் ‘திருச்சி’ என்பேன். இது இயற்கை. மகாகவி காசியில் வளர்ந்தவர். எதற்கெடுத்தாலும் காசியின் பெருமையை அவர் பேசுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
6) மகாபாரத புராணக்கதைப்படி பீமன் துச்சாதனனின் இதயத்தை அறுத்து இரத்தம் குடிப்பேன் என்பதும், பாஞ்சாலி சபதமும் ஊரரிந்ததே! அதை மாற்றி எப்படி எழுத முடியும்? அதற்காக மகாகவியை எப்படி குறைகூற முடியும்? அப்படி மாற்றி எழுதினால் அவரின் புத்திசாலிதனத்திற்கு இழுக்கில்லையா? “அறிவொன்றே தெய்வமுண் டாமெனெல் கேளீரோ?” – “அறிவே தெய்வம்”, “உயிர்களிடத்தில் அன்பு வேணும்’, என கூறியவன் மகாகவி.

இந்தியாவைப் பொறுத்த வரை மூன்று கவிஞர்கள் தான் ‘மகாகவி’. 1) ‘மகாகவி’ காளிதாசன் 2) ‘மகாகவி’ தாகூர் 3) ‘மகாகவி’ பாரதி.

“பாரதியார் உலக கவி”, “சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க்கின்ற செம்மை நலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்”, “புது நெறி காட்டிய புலவன்” – பாவேந்தர்.

நன்றி!

பாலா

20 06 2009
பாலா

மேலே நான் கூறிய ‘கன்னடம்’ என்பதை ‘பெங்களூரு’ என்று படிக்கவும்.

25 06 2009
muthu

Kilpak mental hosiptal contact details .
26421085 to 26421089

கில்பாக்கம் மன நல மருத்துவ மனை தொலைபேசி எண்
26421085 to 26421089

வியாதி முத்திடுச்சு சிக்கரம் போய் பார்ருங்க ..

25 06 2009
muthu

நன்றி பாலா

உலகம் ஒத்து கொண்ட ஒருவரை பற்றி சும்மா எதாவது பேசினா விளம்பரம் கிடைக்கும்

26 06 2009
பெ. கண்ணன்

மிக அருமையான நேர்கானல். கண்டதில், கேட்டதில் மகிழ்ச்சி! தங்களின் துணிவும் சிறந்த ஆய்வும் பாராட்டப்பட வேண்டியவை. தமிழன் பார்பனியத்தை எதிர்த்து 1000 ஆண்டுகளுக்கு மேல் தாக்கு பிடித்து இருகின்றான் என்றல் உங்களை போன்ற தமிழன் அவ்வப்பொழுது தோன்றி தமிழன் யார் அவனுடைய எதிரி யார் என்று இனம் காட்டி கொண்டு இருப்பதால் தான். தங்கள் பனிக்கு நன்றி! வளர்க உமது தமிழ் பங்களிப்பு, ஆய்வு!

மிக்க நன்றி!

மறுமொழியவும்