ருத்ரையா-எம்.எஸ்.எஸ். பாண்டியன்; ஒப்பாரி வைப்பதால் என்ன பயன்?

kupandian_cropped_too
இயக்குநர் ருத்ரையா வை 1992 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் நண்பர் தீஸ்மாஸ், (Theesmas Desilva) இயக்குநர் அருண்மொழி,(Arunmozhi Sivaprakasam) நான் மந்தைவெளியில இருந்த அவர் வீட்டில் சந்ததித்தோம். நாங்கள் நடத்திய ‘இசைஞானி இளையராஜா ரசிகன்’ இதழின் சிறப்புப் பேட்டிக்காக.

இளையராஜாவுடனான அவர் அனுபங்களைச் சுவரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார். அப்போதும் அவர் அடுத்தப் படத்திற்கான முயற்சியில் இருந்தார்.

அவருடன் பழகியவர்கள், இப்போது அவரைப் பற்றி நெகிழ்ச்சியாக எழுதுவதைப் படிக்கும்போது மனது கலக்கமுறுகிறது.
இதுபோன்ற எழுத்துக்களை அவர் இருக்கும்போது எழுதியிருந்தால்.. அவர் இறந்திருக்க மாட்டார்.

அவரின் சிறப்புகளை நெருக்கமாகச் சொல்லுகிற இந்த எழுத்துக்கள், தனியாக இருந்த அவருக்குத் துணையாக இருந்திருக்கும்.

பல ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற தோழமையான கட்டுரைகள் மூலம் அவர் கொண்டாடப்பட்டிருந்தால்.. அவர் மிகச் சிறந்த 10 சினிமாக்களைத் தந்திருப்பார்.

எம்.எஸ்.எஸ். பாண்டியன் மரணத்தின்போதும் இப்படித்தான் சிறப்புக் கட்டுரைகள் அவரைக் கொண்டாடின.

திறமைசாலிகளைக் கொண்டாடுவதற்கு அவர்கள், ‘தங்கள் உயிரை விட்டிருக்கவேண்டும்’ என்ற நிபந்தனை நம்மிடம் இருக்கிறது.

இரங்கல் கூட்டம் நடத்துவதில் காட்டுகிற வேகத்தை, அவர்களை வைத்துக் கருத்தரங்கம் நடத்துவதில் காட்டியதில்லை.

திரைத்துறையோ, அரசியலோ பிரபலமானவர்களாக இருந்தால் ‘பிரபலத்திற்கே பிரபலம்’ என்பதுபோல் பாராட்டு விழா, விருது விழா நடத்திக் கொண்டாடுகிறவர்கள்; பிரபலமாகாத திறமைசாலிகளுக்கு அந்த விழாவில் கலந்து கொள்வதற்கு அழைப்பிதழ் கூடத் தருவதில்லை.

பெற்றோர்களுக்கு உரிய மருத்துவம் செய்யத் துப்பில்லாத மகன்கள், பெற்றோர் இறந்தப் பிறகு செலவு செய்து கருமாதி செய்வது ஊர் மெச்சதான் என்பதுபோலவே, நாம் நடத்துகிற பல இரங்கல் கூட்டங்களும் அமைந்து விடுகிறது.

செத்தப் பிறகு ஒப்பாரி வைத்து என்ன பயன்?

20 November at 17:04

நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம்

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உடல் தானமும் இஸ்லாமியர்களின் மதஉணர்வும்

இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!

எஸ்.எஸ்.ஆர்: தற்கொலைக்கு முயன்றேன் – பெரியார் என்னை அவமானப்படுத்தி விட்டார்

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

கவுண்டமணி vs சரத்குமார்

hqdefault

‘பொறுமையைக் கையாண்டு கொண்டிருக்கிறார் இந்தச் சரத்குமார்’ – பத்திரிகையாளர் சந்திப்பில் சரத்குமார்.

‘அவன் திருந்திட்டான்னு அவனே சொன்னான்’ -கரகாட்டக்காரனில் கவுண்டமணி.

19 November at 17:04

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

உலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது

ஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும்

சுப்ரீம் ஸ்டாருக்கு கண்டனமும் நன்றியும்

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

நன்றி பேராசிரியருக்கு..

subavirapandian-250x375

20.03.2014 அன்று பெரியார் நூலக வாசகர் வட்டத்தில், ‘பெரியார் ஒருவர் தான் தலித் தலைவர்; அம்பேத்கரியல் பார்வை’ என்ற தலைப்பில் 1 மணி 40 நிமிடங்கள் அடங்கிய என் பேச்சின் முதல் ‘6 நிமிடங்கள்’ குறித்தும் மட்டும்,
கலைஞர் தொலைக் காட்சியில், ‘ஒன்றே சொல், நன்றே சொல்’ நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் பேசுகிறார்.

டாக்டர் அம்பேத்கர் – பெரியார் பின்னணியில் இயங்கும் எனக்கு, பேராசிரியர் வழங்கும் சிறப்பான அங்கீகாரம்.
சென்ற ஆண்டு டிசம்பர் 6, டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் அன்று ‘நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை’ என்ற என் நூல் குறித்தும் இதே நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

என்னை உற்சாகப்படுத்தி எழுத்தாளனாக, பத்திரிகையாளனாக உருவாக்கியதில் பேராசிரியர் அப்துல்லா (பெரியார் தாசன்) பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இருவருமே முதன்மையானவர்.

அந்தவகையில் சிறப்பான பேச்சிற்காகவும், நாடறிந்த பேராசிரியர் சுபவீ அவர்கள், பேச்சாளனாகவும் என் பணியைத் துவங்கியிருக்கிற, என் பேச்சை குறிப்பிட்டுப் பேசியிருப்பது, 1989 ல் என்னை எழுத்தாளனாக அங்கீகரித்ததைப்போலவே கருதுகிறேன். அதற்காகவும் நன்றி.

நாளை காலை இந்திய நேரம் 8.30 மணிக்கு மேல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. வாய்ப்பிருக்கிற தோழர்கள் அதைப் பதிவு செய்து தந்ததால் மகிழ்ச்சி.

தோழரின் உரையில் நான் முரண்படும் இடம்: கவிஞர் தமிழேந்தி

எளிய மக்களுக்கான எதிர்ப்பு அரசியலின் குறியீடு

‘பெரியார் ஒருவர் தான் தலித் தலைவர்’ – அம்பேத்கரியல் பார்வை

Posted in பதிவுகள் | 2 பின்னூட்டங்கள்

`பாத்துக்க.. ஒழுங்கா.. இரு’

CIMG9216
‘காஞ்சிபுரம் என்றால் ஜெயேந்திரன்’ என்று இருந்த இழிவைத் தகர்த்து, காஞ்சிபுரம் என்றால், ‘காஞசி மக்கள் மன்றம்’ என்பதை ஜெயேந்திரனுக்கு எதிரான போராட்டங்களின் மூலமே திருத்தி எழுதிய மக்கள் மன்றத் தோழர்களோடு ஒரு நாள்.

காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் இன்னும் பல இடங்களில் ‘மக்கள் மன்றம்’ என்றால் ஒரு மரியாதையும் பயமும் இருக்கவே செய்கிறது. அதற்கு மாறாக எளிய மக்களிடமோ ‘மக்கள் மன்றம்’ என்றால் பேரன்பு வழிகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்தத் தோழர்கள், சில மாதங்களுக்கு முன் என்னிடம்: ‘நீங்கள் ஒரு நாள் முழுக்க காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களோடு இருக்க வேண்டும்’ என்று ஆர்வத்தோடு கேட்டதை எனக்கான அங்கீகாரமாக கருதி,
12-11-2014 அன்று காலை 11.30 லிருந்து.. மாலை 7 மணி வரை கருத்தரங்கம், கலந்துரையாடல் என்று கலந்து கொண்டேன். சிறுவர், சிறுமிகள் உட்பட அவர்களின் கலைக் குழுவினர் பாடியப் பாடல்கள், உணர்வும் இனிமையுமாய் நிரம்பி வழிந்தது.

தன் உயிர் தந்து மூவர் உயிர் காத்த செங்கொடி, மக்கள் மன்றத்தின் குழந்தை. அந்தத் தியாகப் பெண்ணின் பெயரையே, அந்த ஊரின் பெயராகச் செங்கொடியூர் என்று மாற்றியிருக்கிறார்கள். அதற்குத் துணையாக தலைவர் இருந்திருக்கிறார்

அவர் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர், இதற்கு முன் அவர் ஒரு ரைஸ் மில்லில் கொத்தடிமையாக இருந்திருக்கிறார்.
“அங்குச் சம்பளம் கிடையாது. சவுக்கடி தான். என்னை அங்கிருந்து மீட்டு தலைவராக்கியதே இவர்கள் தான்” என்று மக்கள் மன்றத் தோழர்கள் மகேஷ், ஜெசி யை நோக்கி கை நீட்டுகிறார் தலைவர்.

தோழர்கள், நான் பல ஆண்டுகளுக்கு முன் எழுதியதையும் கூட நினைவு கூர்ந்ததும், என் எழுத்தின் மூலமாக என் மீது அவர்கள் வைத்திருக்கிற அன்பும், மரியாதையும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்ததைவிடவும்; எனக்குள் இருந்த சில குறைபாடுகள் என் மனதில் தோன்றி என்னை எச்சரித்தன:
`பாத்துக்க.. ஒழுங்கா.. இரு’ என்று.

என்னையே நான் விமர்சனத்தோடு பார்த்துக் கொள்வதற்குக் காரணமாய் இருந்த, அன்பிற்கினிய காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

15 November at 17:04

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

ஆர்.எஸ்.எஸ் சின் தமிழ் உணர்வும் மணியரசனின் தலித் உணர்வும்

images

6-11-2014 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ராஜேந்திர சோழனுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு விழா எடுத்ததைக் குறித்து, பெ. மணியரசன் அவர்கள்:
”சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அம்பேத்கர் விழாவைக் கொண்டாடினார்கள். ஆனால், இவர்களின் பல்வேறு கோட்பாடுகளைக் கடுமையாக எதிர்த்தவர் அம்பேத்கர். பிறகு எப்படி அவர்கள் அம்பேத்கரை கொண்டாகிறார்கள்? அதாவது அவரின் விழாவைக் கொண்டாடி தங்களுக்குப் பெருமை தேடிக் கொண்டார்கள்.

ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கும் இவர்கள் தமிழ்மொழியை வழிபாட்டு மொழியாக அறிவிக்கப் போராடுவார்களா?” என்று கேட்டு இருக்கிறார்.

அம்பேத்கரிஸ்டை போல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை குற்றம் சாட்டுவது இருக்கட்டும். இவரே சில ஆண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் ன் அவதூறை நியாயப்படுத்துவது போல், ‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார். அதனால் அவர் இந்துத்துவ ஆதரவாளர்’ என்று அவதூறு செய்தவர் தானே.
அப்படியிருக்க இப்போது மட்டும் எப்படி டாக்டர் அம்பேத்கர் இந்துத்துவ எதிர்ப்பாளராகத் தெரிகிறார்?

‘ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கும் இவர்கள் தமிழ்மொழியை வழிபாட்டு மொழியாக அறிவிக்கப் போராடுவார்களா?’ என்று ஆர்.எஸ்.எஸ் சை பார்த்து கேட்கிறார்.

தமிழை வழிபாட்டு மொழியாக ‘தமிழ்’ மன்னன் ராஜேந்திர சோழனே தன் ஆட்சியில் செய்யவில்லை. அப்படியிருக்க ஆர்.எஸ்.எஸ் இடம் அதை எதிர்ப்பார்ப்பது என்ன நியாயம்?

ஆக, ராஜேந்திர சோழனை தமிழ் அடையாளமாகப் பார்க்க முடியாது. அவன் சமஸ்கிருத உயர்வை போற்றிய பார்ப்பன அடியாள். அவனை ஆதரிக்கிறவர்கள் நியாயமாக ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்து விழா கொண்டாடுவதுதான் நாணயமானது.

 13 November 

தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல்

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

தருண் விஜய் க்குப் பாராட்டு; அப்போ அவருக்கு..

தமிழின் சிறப்பை நாடாளுமன்றத்தில் தமிழரல்லாத தருண் விஜய் ஒலித்ததற்காகப் பாராட்டு விழா என்றால்..
அதை விடச் சிறப்புத் தமிழரல்லாத ஒருவர், அய். நா சபையி‘லேயே’ தமிழில் பேசியது.. அப்படியானால், அவருக்கு நாம் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த வேண்டாமா?

‘பாரத ரத்னா’ விருது குடுத்து முடிச்சவுடனேயே தமிழ் நாட்டில் பெரிய விழா நடத்திர வேண்டியதுதான்.

‘ராஜபக்சே’விற்கு.

11 November at 05:30

கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு

Posted in பதிவுகள் | 2 பின்னூட்டங்கள்

கமல் – கடவுள் மறுப்பாளரின் இறைஉணர்வு?

kamal-vairamuthu

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியாக் கவிதை நான்
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்
ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்க்கிறதே

இப்படிக் கடவுள் கருத்தை புனிதமாக்கிய இந்தப் பாடல், நம்ம ‘ஜெயேந்திரன் தியேட்டரில்’ தரை டிக்கெட் பார்ட்டி ராதாகிருஷ்ணன் போன்றவர் நடித்த பாடல் அல்ல, என்பது தெரிந்ததுதான்; அதுபோலவே இது யார் படப் பாடல் என்பதும் அதை விட உறுதியனது.

இந்து சமூக அமைப்பில் எளிய மக்களுக்கு எதிராகச் செய்த சதிகள் அனைத்தையும், கடவுள்களே செய்திருக்கிறார்கள். அந்த வகையில் கடவுளோடு ஒப்பிட்டால் மிருகங்கள் எளிய மனிதர்களுக்கு நன்மையே செய்திருக்கின்றன. இன்னும் நெருக்கிச் சொன்னால், அவை மனிதர் நல்வாழ்விற்குத் தங்கள் உயிரையே தந்திருக்கின்றன. தருகின்றன.
அப்படியானால் ஒரு பகுத்தறிவாளனின் பார்வை எப்படி இருந்திருக்க வேண்டும்?

மிருகம் பாதிக் கடவுள் பாதி
கலந்து செய்த கலவை நான்

வெளியே கடவுள் உள்ளே மிருகம்
விளங்க முடியாக் கவிதை நான்

கடவுள் கொன்று கடவுள் கொன்று
மிருகம் வளர்க்க பார்க்கின்றேன்

ஆனால், மிருகம் கொன்று உணவாய் தின்று
கடவுள் மட்டும் வளர்க்கிறதே

இப்படிதானே இருந்திருக்கனும்?
சரி, மிருகத்தைக் கொடூரத்தின் குறியீடாகச் சில நேரங்களில் சொல்வது பொருத்தமானது தான் என்றாலும்..

கடவுளை உயர்வான குறியீடாக, குற்றமற்ற மனிதனின் அடையாளமாக, புனிதமாக ஒரு பகுத்தறிவாளரால் எப்படிச் சொல்ல முடிகிறது?
அப்படிச் சொன்னால் அவர் எப்படிப் பகுத்தறிவாளர்?
அட பாடல் எழுதியவரையும் சேர்த்துதான் கேட்கிறேன்.

சரி. ‘கடவுள் புனிதம். மிருகம் கொடூரம்’ என்று ஒரு பக்தனைப் போல் ஒத்துக்கொண்டாலும்,
‘அந்த மிருகத்தைப் படைத்ததே கடவுள் தானே’ என்கிற பக்தனின் கேள்விக்குக் கூடப் பதில் அளிக்க மறுக்கிறதே..
கடவுள் மறுப்பாளரின் இறைஉணர்வு?

Posted in கட்டுரைகள் | 13 பின்னூட்டங்கள்